Published:Updated:

கடுகு - சினிமா விமர்சனம்

கடுகு - சினிமா விமர்சனம்
பிரீமியம் ஸ்டோரி
கடுகு - சினிமா விமர்சனம்

கடுகு - சினிமா விமர்சனம்

கடுகு - சினிமா விமர்சனம்

கடுகு - சினிமா விமர்சனம்

Published:Updated:
கடுகு - சினிமா விமர்சனம்
பிரீமியம் ஸ்டோரி
கடுகு - சினிமா விமர்சனம்
கடுகு - சினிமா விமர்சனம்

ண்ணாடியில் உங்களை நீங்கள் யாராகப் பார்க்கிறீர்கள்? ஹீரோவாகவா... வில்லனாகவா, ஜோக்கராகவா என்பதே `கடுகு'.

புலி வேஷம் கட்டும் ராஜகுமாரன் தரங்கம்பாடி இன்ஸ்பெக்டருக்கு எடுபிடி. இப்படி ஒரு ஜீவன் இருப்பதற்கான எந்த ஆதாரமும் இல்லாத அநாதை. உள்ளூர் சேர்மன் பரத், எம்.எல்.ஏ கனவுடன் இருக்கும் அரசியல்வாதி. ஊருக்கு நல்லபிள்ளை. ஆனால், சந்தர்ப்பவாதி. தரங்கம்பாடிக்கு வரும் அமைச்சர் ஒருவர் பள்ளி மாணவியைப் பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சிக்க, கலங்கிய குளமாகிறது ஊர். இதில் யார் மூழ்குகிறார்கள், யார் கரைசேர்ந்தார்கள் என்பதே கதை.

கடுகு என்ற பெயருக்குச் சரியாகப் பொருந்துகிறார் ராஜகுமாரன். இழுத்து இழுத்துப் பேசும் மாடுலேஷன் தவிர மற்ற எல்லாமே பக்கா. பாக்ஸர் பரத்துக்கு இது செகண்ட் இன்னிங்ஸ். உடலிலும் உடல்மொழியிலும் கொஞ்சம்கூட மிகையில்லை... செம ஃபிட்.நல்லவனுக்கும் கெட்டவனுக்கும் இடையில் ஊசலாடும் அந்தப் பாத்திரப் படைப்பு யதார்த்தம். அதைச் சரியாக நடிப்பில் கொண்டு வந்திருக்கிறார் பரத். அலட்டல் இல்லாத அழகான காஸ்ட்டிங். அதில் `அது யாருப்பா?' எனக் கேட்கவைக்கிறார் அனிருத்தாக வரும் பாரத் சீனி. டீச்சராக வரும் ராதிகா ப்ரசீதாவின் நடிப்பில் அவ்வளவு இயல்பு. அந்தக் குளம், கண்கள்... எனக் குட்டிப்பெண் கீர்த்தனாவின் நடிப்பு இன்னும் வலியைத் தருகிறது.

கடுகு - சினிமா விமர்சனம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மெதுவாகத் தொடங்கி, ஒவ்வொரு பாத்திரமாக வளர்த்து, பின் டாப் கியரில் தூக்கும் அந்த உத்திக்கு இயக்குநர் விஜய் மில்டனை நிறையவே பாராட்டலாம். பாரத் சீனி தனது காதலியிடம் உண்மையைச் சொல்லும் சீன், பரத்தின் ஹீரோ-வில்லன் கேரக்டர், சாப்பிட்டியானு கேட்க ஆளில்லாத சூழலில், அதை மட்டுமே கேட்கும் பாட்டி என விஜய் மில்டனின் ஒவ்வொரு பாத்திரப் படைப்பிலும் அவ்வளவு யதார்த்தம்.

 `பிறக்கும்போதே யாரும் ஜோக்கராவோ, ஹீரோவாவோ பிறக்கிறதில்லை. ஒரு தப்பு நடக்கும்போது எதிர்த்து அடிக்கிறியா, ஓடி ஒளிஞ்சுக்கிறியா என்பதைப் பொறுத்துதான் ஹீரோ, வில்லன் எல்லாமே', `ப்ளூ ஃபிலிம்ல நடிக்கிற நடிகைகளைத் தேடிப்பிடிச்சு ஆட்டோகிராஃப் வாங்குறீங்க. ஆனால், உங்க பக்கத்து வீட்ல இருக்கிற, தப்பே செய்யாத பொண்ணைப் பார்த்துத் தப்பா பேசுறீங்களே?', `உன்னை மாட்டி விடுறதைவிட மாத்திவிடுறேன்' - கடுகாகப் பொரிகின்றன பவர்ஃபுல் வசனங்கள். 

கடுகு - சினிமா விமர்சனம்இடைவேளையே க்ளைமாக்ஸுக்கு நெருங்கிவந்து விட்டோமோ என நினைக்கவைக்கிறது. ஆனால், அதன் பிறகான காட்சிகள் மிகவும் மெதுவாகவே நகர்கின்றன. அத்தனைபேருக்கு மத்தியில் அந்த அமைச்சர் இப்படிச் செய்வாரா? இயல்பாகப் பயணிக்கும் படத்தில முக்கியமான கட்டங்களில் மட்டும் மிகையான சினிமாத்தனம்.

பாடல்கள், பின்னணி இசைக்கு என இரண்டு பேர் இருந்தும் ஸ்கோர் செய்யாமல் விட்டிருக்கிறார்கள். ஒளிப்பதிவிலும் விஜய் மில்டன் அசத்தியிருக்கிறார். முதலில் தொழில்நுட்பக் கலைஞர்கள், பிறகு நடிகர்களின் பெயர்கள் என டைட்டில் கார்டிலும் புதுமைசெய்திருக்கிறார் விஜய் மில்டன்.

திரைக்கதை எண்ணெய் இன்னும் கொஞ்சம் காய்ந்த பின் கடுகைக் கொட்டியிருந்தால்... வெடித்திருக்கும்.

- விகடன் விமர்சனக் குழு

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism