Published:Updated:

எங்கிட்ட மோதாதே - சினிமா விமர்சனம்

எங்கிட்ட மோதாதே -  சினிமா விமர்சனம்
பிரீமியம் ஸ்டோரி
எங்கிட்ட மோதாதே - சினிமா விமர்சனம்

எங்கிட்ட மோதாதே - சினிமா விமர்சனம்

எங்கிட்ட மோதாதே - சினிமா விமர்சனம்

எங்கிட்ட மோதாதே - சினிமா விமர்சனம்

Published:Updated:
எங்கிட்ட மோதாதே -  சினிமா விமர்சனம்
பிரீமியம் ஸ்டோரி
எங்கிட்ட மோதாதே - சினிமா விமர்சனம்
எங்கிட்ட மோதாதே -  சினிமா விமர்சனம்

80-களின் பின்புலத்தில், இன்னொரு பழிவாங்கும் ரத்த சரித்திரம்.

நட்டியும் ராஜாஜியும் நண்பர்கள். கட்அவுட், பேனர்கள் வரையும் ஓவியர்கள். தியேட்டரில் கேன்டீன் வைத்திருக்கும் விஜய்முருகனுடனான ஒரு பிரச்னையில், ராஜாஜியை அடித்துவிடுகிறார்கள். காப்பாற்ற போய் அதகளம் செய்துவிடுகிறார் நட்டி. இந்தச் சண்டைக்கு நடுவில் வருகிறார் தியேட்டர் ஓனரும் அரசியல்வாதியுமான ராதாரவி. சினிமாவுக்கும் அரசியலுக்கும் நடக்கும் போரில் யாருக்கு என்ன ஆனது என்பதே கதை.

எங்கிட்ட மோதாதே -  சினிமா விமர்சனம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ரஜினி ரசிகராக நட்டி. பாதி வசனம் மட்டுமே ஸ்க்ரீனில் பேசுகிறார். அதற்குள் கத்தரி போட்டு வாய்ஸ் ஓவருக்கு அவரைத் தள்ளிவிடுகிறார்கள். இயல்பான பெர்ஃபாமன்ஸ் என்றாலும், பழிவாங்கும் ஆக்‌ஷன் கதைக்கு இன்னும் கொஞ்சம் ஃபோர்ஸ் தேவை ப்ரோ. கமல் ரசிகர் ராஜாஜி சுமார்தான். மொத்தக் கும்பலில் முரட்டு நடிப்பு ராதாரவிக்குத்தான். நொடிக்கு ஒருவரை நம்பவேண்டிய அரசியல்வாதியாக மிரட்டுகிறார். மொத்த வில்லங்கத்துக்கும் பிள்ளையார்சுழி போடும் விஜய்முருகன்... ஆசம்.

எங்கிட்ட மோதாதே -  சினிமா விமர்சனம்

ரத்தம் ஓடவிடக்கூடிய ஆக்‌ஷன் கதையில், கவனமாக வன்முறையைக் குறைத்த இயக்குநர் ராமு செல்லப்பாவை வாழ்த்தலாம். அதேபோல ஆபாச வசனங்களையும் நறுக்கியிருக்கலாம். வித்தியாசமான களம், தெளிவான கதாபாத்திரங்கள் இருந்தும், காஸ்ட்டிங்கில் மிஸ் செய்திருக்கிறார்.

மொத்தப் படத்துக்கும் ஆக்ஸிஜன் தந்திருக்கிறார் கலை இயக்குநர் ஆறுச்சாமி. 80-களின் பீரியட் ஃபீல், மூன்று சீனுக்கு ஒருமுறை வரும் கட்அவுட்கள், கலர் கலர் பெயின்ட்கள் என ஆர்ட் ஏரியா முழுக்க ஆச்சர்யம்!

முக்கிய முடிச்சுகளை ஜஸ்ட் லைக் தட் தாண்டுவதுதான் திரைக்கதையின் பலவீனம். எதிர் முகாம்

எங்கிட்ட மோதாதே -  சினிமா விமர்சனம்

அரசியல்வாதி விஜய்முருகனை கன்வின்ஸ் செய்யும் இடம்தான் க்ளைமாக்ஸுக்கே முக்கியம். அதை இப்படியா சொதப்புவது? தங்கையைக் காதலித்தால் அண்ணனுக்குக் கோபம் வரும்தான். அதை, நட்டி பேசித் தீர்க்கவேண்டாமா?

பாடல்களிலும் பின்னணி இசையிலும் 80-களுக்குப் பின்னோக்கிச் செல்ல பிரம்மப் பிரயத்தனம் செய்திருக்கிறார் நடராஜன் சங்கரன். தியேட்டர் சண்டையில் கணேஷ் சந்திராவின் ஒளிப்பதிவும் மிராக்கிள் மைக்கேலின் சண்டைப் பயிற்சியும் செம காம்போ!

பரபரவென வெடிக்கவேண்டிய பட்டாஸைப் பற்றவைக்காமல் பயத்தோடு வேடிக்கை பார்த்ததுபோல் இருக்கிறது.

- விகடன் விமர்சனக் குழு

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism