காளி வெங்கட், தமிழ் சினிமாவின் லேட்டஸ்ட் ரகளையன்! காமெடி மட்டும் அல்ல, குணச்சித்திர வேடத்திலும் அசத்துவதுதான் இவரின் ஸ்பெஷல். காளி வெங்கட்டின் வெற்றி, மொத்தக் குடும்பத்தின் முகத்திலும் பிரதிபலிக்கிறது.

``எல்லா ஃப்ளாஷ்பேக்லயும் சொல்ற மாதிரிதாங்க. எங்க ஊரு திருநெல்வேலி. நான் சின்னப் பையனா இருக்கும்போது, முதியோர் கல்வி, வரதட்சணைக் கொடுமைன்னு பல டாப்பிக்ல அறிவொளி இயக்க நாடகங்கள் போடுவாங்க. அதுல இன்ஸ்பயர் ஆகி எங்க கோயில் திருவிழாவில் நான் முதல்முதல்ல நாடகம் போட்டு நடிக்க ஆரம்பிச்சேன். நாடகத்துல வசனத்தை எல்லாம் ஜாலியா மாத்தி, அதுக்குள்ள பாடல்கள் எல்லாம் வெச்சு, நவீன நாடகமா பண்ணினேன். நான் பாட்டுப் பாடி நடிச்சதுக்கு செம ரெஸ்பான்ஸ். அதுக்கப்புறம் ஒவ்வொரு திருவிழாவின்போதும் நாடகம் போட ஆரம்பிச்சேன். அப்பத்தான், `உனக்குள்ள பெரிய நடிகன் இருக்கான்டா. சென்னைக்குப் போனா பெரிய ஆளா வந்திடுவ'னு கூட இருந்தவங்க சொல்லிச் சொல்லி, என்னை ஏத்திவிட்டுட்டே இருந்தாங்க. சரின்னு, 1997-ல ஊர்ல இருந்து ஒரு பெட்டியைத் தூக்கிட்டு சென்னைக்கு வந்தேன்.

இங்கே யாரைப் பார்க்கிறது, எங்கே நடிக்க சான்ஸ் கேட்கிறதுனு ஒண்ணுமே தெரியலை. கையில் கொண்டுவந்த காசு எல்லாம் காலியாக... டீக்கடை, மேஸ்திரி, கொத்தனார்னு கிடைச்ச வேலை எல்லாம் செஞ்சுட்டே நடிக்கவும் வாய்ப்பு தேடினேன். அப்ப எனக்குத் தெரிஞ்ச ஒரே டைரக்டர் ஆபீஸ் மிஷ்கின் சார் ஆபீஸ்தான். `நடிக்க சான்ஸ் கொடுங்க'னு தினமும் அவர் ஆபீஸுக்குப் போய்க் கேட்டுட்டு வருவேன். வாய்ப்புக்காக மிஷ்கின் சாரை டார்ச்சர் பண்ணியிருக்கேன். அடுத்து வேற வேற இயக்குநர்கள்கிட்ட வாய்ப்பு கேட்டேன். அப்படி ஒருநாள், ஏழு வருஷங்கள் கழிச்சு ஒரு படத்துல நடிக்க வாய்ப்பு வந்தது. நடிச்சேன். அந்தப் படம் பாதியிலேயே டிராப் ஆகிடுச்சு. ஆனாலும், தொடர்ந்து முயற்சி செஞ்சுட்டே இருந்தேன். `முண்டாசுப்பட்டி'யில் எனக்குப் பளிச்னு ஒரு அடையாளம் கிடைச்சது. எப்படியோ தத்தித்தாவி இப்போ இந்த இடத்துக்கு வந்துட்டேன்'' என சினிமா வாழ்க்கைக்குள் நுழைந்த கதையை காளி வெங்கட் சொல்ல, அவரின் அம்மா விஜயலட்சுமி தொடர்கிறார்.

``சென்னைக்கு வந்து அஞ்சு, ஆறு வருஷங்கள் ஆகியும் படத்துல நடிக்க சான்ஸ் கிடைக்கலைன்னதும், நாங்க `ஊருக்கே வந்துடுய்யா... கடை போட்டுத் தர்றோம்'னு சொன் னோம். ஆனா, `அதெல்லாம் வேண்டாம்'னு ஒரே வார்த்தையில் முடிச்சிடுவான். உறுதியா இருந்து அவன் நினைச்ச மாதிரியே நடிகனாகிட்டான். சந்தோஷம். இவன் நடிச்சதுல எனக்கு ரொம்பப் பிடிச்சது `முண்டாசுப் பட்டி' கேமராமேன் கேரக்டர்தான்'' எனப் பெருமிதத்துடன் பகிர்ந்துகொள்கிறார்.

``எங்க அம்மா கொஞ்சம் டீசன்ட்டா என்னைப் பற்றிச் சொல்லிட்டாங்க. நான் வாய்ப்புத் தேடிட்டு இருக்கும்போதெல்லாம் என்னைக் கழுவிக் கழுவி ஊத்துவாங்க. இப்ப நான் நடிச்ச படம் வந்துச்சுன்னா முதல் ஆளா போய்ப் படம் பார்த்துடுவாங்க. ஆனா, என்கிட்ட `நல்லா நடிச்சிருக்க. நல்லாயில்லை'னு எதையும் சொல்ல மாட்டாங்க. இப்பதான் எனக்கே தெரியுது நான் நடிச்சதுலேயே `முண்டாசுப்பட்டி' ரோல்தான் அவங்களுக்கு ரொம்பப் பிடிச்சிருக்குனு'' என்ற காளி வெங்கட், அப்பா தவசி பாண்டியனை அறிமுகப் படுத்துகிறார்.

``எங்க அப்பா அவர் வாழ்க்கையில் மூன்றே மூன்று படங்கள் மட்டும்தான் பார்த்திருக்கிறார். அவரைப் பொறுத்தவரை தியேட்டர்ல போய்ப் படம் பார்க்கிறதே பெரிய குற்றம். சின்ன வயசுல எவ்வளவு அடம்பிடிச்சாலும் தியேட்டர் பக்கமே கூட்டிப்போக மாட்டார். இப்ப நான் நடிச்ச படங்களையும் அவர் தியேட்டர்ல பார்த்ததில்லை. பத்திரிகையில் வர்ற சினிமா போஸ்டர்ல என் போட்டோ இருந்தால், அதைக் கொஞ்சம் நேரம் பார்த்துட்டிருப்பார். அவ்வளவுதான். மத்தபடி, என்கிட்ட சினிமா பற்றி இதுவரைக்கும் பேசினதில்லை. ரொம்ப அழுத்தமான மனுஷன். என் போக்குல என்னை விட்டதுனால்தான் நான் இந்த இடத்துக்கு வர முடிஞ்சது'' என்கிறார் காளி வெங்கட்.

``நீங்க காமெடியும் பண்றீங்க. கேரக்டர் ரோலும் பண்றீங்க. இது எப்படிச் சாத்தியமாச்சு?''

``காமெடியா நடிச்சுட்டிருக்கிற ஒருத்தர், திடீர்னு சீரியஸான ஒரு சீன்ல நடிச்சா மக்கள் அதுக்கும் சிரிச்சுடுவாங்க. ஆனா, எனக்கு அப்படி எதுவும் நடக்கலை. என் குருநாதர் விஜய் பிரபாகரன் சார் சொல்வார், `நீ எந்த ரோலில் நடிச்சாலும், அந்த கேரக்டர் என்ன தீர்மானிக்குதோ அதுவாகவே நடிச்சுடு. காமெடி ரோல், கேரக்டர் ரோல்னு மைண்ட்ல ஃபிக்ஸ் பண்ணிக் காத'னு நடிக்க ஆரம்பிச்சபோது சொன்னார். அதைத்தான் தொடர்ந்து ஃபாலோ பண்ணிட்டிருக்கேன்.''

``நீங்க நடிச்சதில் உங்களுக்குப் பிடித்த ரோல் எது?''

``ம்ம்ம்... நிறைய இருக்கு. கிட்டத்தட்ட இதுவரைக்கும் 25 படங்களுக்கு மேல் நடிச்சிருக்கேன்னு நினைக்கிறேன். இதுல மறக்க முடியாத கேரக்டர்னா, விரல்விட்டு எண்ற அளவுக்குத் தான் இருக்கு. `முண்டாசுப்பட்டி' அழகுமணி ரோல். இதுக்கு சூப்பர்ஸ்டார் ரஜினி சார் பாராட்டியதை மறக்கவே முடியாது. அப்புறம் `இறுதிச்சுற்று' சாமிக்கண்ணு, `ராஜா மந்திரி' படத்துல சூர்யா, `மாரி'யில் கான்ஸ்டபிள் கேரக்டர்னு சொல்லிட்டே போகலாம். நான் இயல்பா நடிக்கணும்னு அதைப் பற்றித்தான் யோசிச்சுட்டே இருப்பேன். ஒருகட்டத்துல எனக்கே பயம் வந்துடுச்சு. இயல்பா நடிக்கணும்னு ரொம்ப மெனக்கெடுறமோன்னு தோணுச்சு. அப்புறம் அப்படியே விட்டுட்டேன்.''

``கல்யாணம் எப்போ?''

``இந்தக் கேள்வியை ஸ்கிப் பண்றேன் பிரதர்'' எனச் சிரித்துக்கொண்டே காளி வெங்கட் சொல்ல... அவரது அம்மா குறுக்கிட்டு, ``பொண்ணு பார்க்கப் போறோம். சீக்கிரம் கல்யாணம் பண்ணி வெச்சுடுவோம்'' என்கிறார்.

``என் முதல் ரசிகையும் என் விமர்சகருமான மோஹிதாகிட்ட என் நடிப்பைப் பற்றிக் கேட்டுடுங்க சார். இல்லைன்னா, அவங்க என் நடிப்புக்கு மார்க்கைக் குறைச்சுடுவாங்க'' என மோஹிதாவை நமக்கு அறிமுகம் செய்கிறார். மோஹிதா, காளி வெங்கட்டின் அண்ணன் மகள். ஒன்றாம் வகுப்பு படிக்கிறாள்.

``எங்க சித்தப்பா ஒரே ஒரு படத்துலதான் சுமாரா நடிச்சிருக்கார். மத்தபடி எல்லா படத்துலயும் சூப்பர்'' என கமென்ட் அடிக்க, மொத்தக் குடும்பமும் அதிர்ந்து சிரிக்கிறது!