Published:Updated:

கடம்பன் - சினிமா விமர்சனம்

கடம்பன் - சினிமா விமர்சனம்
பிரீமியம் ஸ்டோரி
News
கடம்பன் - சினிமா விமர்சனம்

கடம்பன் - சினிமா விமர்சனம்

காட்டைக் காக்கத் துடிக்கும் ஒரு காட்டுவாசியின் கதை.

மலையைவிட்டு இறங்காமல் காட்டினூடே வாழ்கிறது ஓர் இனம். நாகரிக வாழ்க்கையைவிட இயற்கையோடு இயைந்த வாழ்வே சிறந்தது என்னும் அவர்களின் இந்தத் தலைமுறை நம்பிக்கை ஆர்யா. மலையைச் சுரண்ட நினைக்கிறார்கள் சிமென்ட் தொழிற்சாலை அதிபர்கள் இருவர். அதிகாரத்தின் உதவியுடன் அந்த மலைவாழ் மக்களுக்குத் தொல்லை தருகிறார்கள். முடிவு என்ன என்பதே கடம்பன்.

கடம்பன் - சினிமா விமர்சனம்

கமர்ஷியல் படத்துக்கே ஆர்யாவின் உடல் திமிறும்; காட்டுவாசி என்றதும் கர்ஜிக்கிறது. குரலும் உச்சரிப்பும் அந்நியமாக இருந்தாலும், உடல்மொழியில் நம்பவைக்கிறான் கடம்பன். காட்டுக்கு நடுவே கான்கிரீட் கட்டடம் போல் தனியே தெரிகிறார் கேதரின் தெரெசா. பெரிய வில்லன் தொடங்கி சின்ன வில்லன் வரை, காட்டு மக்கள் முதல் நாட்டு மக்கள் வரை ஒட்டுமொத்த கேஸ்ட்டிங்கிலும் பெரிய சறுக்கல்.

மிக முக்கியமான விஷயத்தை, இரண்டாவது படத்திலேயே கையில் எடுத்திருக்கிறார் இயக்குநர் ராகவா. மலைவாழ் மக்களை மலையைவிட்டு இறக்கக் காட்டப்படும் உத்திகள் அசலானவை. தான் இருக்கும் திரைப்படத் துறையும் அதற்காகத் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது என்பதையும் பதிவுசெய்த நேர்மை பாராட்டவேண்டியது.

ஆனால், நோக்கம் செம்மையாக ஈடேற இந்த உழைப்பு போதுமா? தொங்குப்பாறையில் தேன் எடுக்கும்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
கடம்பன் - சினிமா விமர்சனம்

ஆர்யாவிடம் இம்போர்ட்டட் கயிறு! காட்டுவாசிகளின் பொழுதுபோக்கு கால்பந்து! யானைக்கு அடிபட்டதும், மலை இறங்கி அலோபதி மருத்துவர்களை அழைத்துவருகிறார் ஆர்யா. முக்கியமான கதாபாத்திரங்கள் ஐந்து பேர் தவிர, மற்ற மக்கள் முகங்களில் வலியோ துயரமோ இல்லை. அடியாள்கள் கையில் அத்தனை ஏகே-47. வழக்கம்போல ஆர்யா அதிலிருந்தும் தப்பிக்கிறார். சதுர வடிவில் மார்க் போட்டு ஆளுக்கொரு மூலையில் நின்று பேசினால், ஹைடெக் வில்லன் ஆகிவிடுவார்களா?

பின்னணி இசையிலும், `ஒத்தப் பார்வையில்...' பாடலிலும் மிளிர்கிறது யுவனின் உன்னத உழைப்பு. டைட்டில் கார்டு முழுவதும் காட்டின் அழகைக் காட்டும் வாய்ப்பு. ஆனால் அதை லெஃப்ட் ஹேண்டில் முடித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர். ஒரு காட்சிகூட நம்மைக் காட்டுக்கு அழைத்துச் செல்லவில்லை. சி.ஜி காட்சிகள்தான் சின்ன ஆறுதல்.

மனிதர்கள் காட்டுக்கு இழைத்த துரோகத்தில் கடம்பனும் ஒன்றாகி விட்டான், தன் ஏராளமான அலட்சியங்களால்!

- விகடன் விமர்சனக் குழு