முதல் படத்திலேயே ஹிட் கொடுத்த இளம் இயக்குநர்கள் ஒரே இடத்தில் சந்தித்தால்...

``ஸ்கூல் படிக்கும்போதே சினிமா ஆர்வம் அதிகம். கிரேஸிமோகன் சார்கிட்ட உதவியாளரா இருந்தேன். குறும்படங்கள் எடுத்தேன். `நாளைய இயக்குநர்’ நிகழ்ச்சியில் கலந்துக்கிட்டேன். இயக்குநர் மிஷ்கின்கிட்ட உதவி இயக்குநரா வேலை பார்த்தேன். சிலபல முயற்சிகளுக்குப் பிறகு என் முதல் படமான `8 தோட்டாக்கள்’ வெளியாகியிருக்கு’’ என்று ஆரம்பம் சொல்கிறார் `8 தோட்டக்கள்’ பட இயக்குநர் ஸ்ரீகணேஷ்.

``எல்லோரும் இன்ஜினீயரிங் படிச்சுக் கிட்டிருந்ததால், நானும் இன்ஜினீயரிங் படிச்சேன். சினிமா, சின்ன வயசுக் கனவெல்லாம் இல்லை. அடிக்கடி படம் பார்ப்பேன். அமெரிக்காவுல நான் வேலை பார்த்த நேரத்தைவிட, படம் பார்த்த நேரம்தான் அதிகம். `சினிமா நமக்குப் பிடிக்குது. அதையே பண்ணுவோம்’னு வேலையை விட்டுட்டு ரெண்டு குறும்படங்கள் எடுத்தேன். சம்பாதிச்சக் காசை வெச்சு நானே தயாரிச்சு, இயக்கி, நடிச்சு, பின்னணி இசையமைத்த படம்தான் `உறியடி’ ’’ - இது விஜயகுமார் வாய்ஸ்.

` ``உறியடி’ செம போல்டான அரசியல் படம் மச்சி’’ என நண்பனைப் பாராட்டி விட்டு, தன் அனுபவம் சொல் கிறார் `மாநகரம்’ படம் மூலம் தனித்துவமான இடத்தைப் பிடித்த லோகேஷ் கனகராஜ். ``தனியார் வங்கியில் வேலை பார்த்துக் கிட்டுருந்தேன். நேரத்துக்குப் போயிட்டு, நேரத்துக்குத் திரும்பும் மெஷின் வாழ்க்கை எனக்குப் பிடிக்கலை. குறும்படப் போட்டி வந்தது. முயற்சி பண்ணுவோம்னு கலந்துக்கிட்டேன். அங்கே பழக்கமான இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ், என்னை ரொம்பவே உற்சாகப்படுத்தினார். `களம்’ங்கிற 45 நிமிடக் குறும்படம் இயக்கினேன். அது எனக்குத் தயாரிப்பாளரைக் கொடுத்துச்சு. `மாநகரம்’ படம் மூலமா நான் இயக்குநர் ஆகிட்டேன்’’ என்ற லோகேஷ், ``எல்லோரும் `டக்குனு படம் எடுத்திட்டியே!’னு ஆச்சர்யப்படுவாங்க. இந்த `டக்கு’ங்கிற வார்த்தைக்குப் பின்னால், ஆறேழு வருடப் போராட்டங்கள் இருக்கு பாஸ்!’’ என சென்டிமென்ட் வார்த்தைகளை உதிர்க்க, ``ஆளாளுக்கு மாறுபட்டாலும், சினிமாவுல அடி எல்லோருக்கும் ஒண்ணுதான் மச்சான்’’ என, தன் முதல் படச் சவால்களைப் பகிர்ந்துகொண்டார் விஜயகுமார்.

`` என் படத்துல வேலை பார்த்த எல்லோருமே புதுசுங்கிறதால், என்னைப் பலரும் `உப்புமா இயக்குநர்’ன்னே சொன்னாங்க. இந்த வார்த்தையால்தான், நானே நடிக்க வேண்டியிருந்தது; நானே பின்னணி இசை அமைக்க வேண்டியிருந்தது; பாதிப் படத்தை நானே எடிட்டிங் பண்ணவேண்டியிருந்தது. படம் ரிலீஸான மூணாவது வாரம், நானே விநியோகஸ்தரா ஆகவேண்டிய சூழலும் வந்துச்சு!’’ என விஜயகுமார் வென்ற கதை சொல்ல, ‘மாநகரம்’ லோகேஷ் பின்தொடர்ந்தார்.

``படம் தயாரிக்கத் தயாரிப்பாளர் கிடைக்கிறதுதான் கஷ்டம்னு நினைச்சேன். நல்ல கதையும் நேர்மையான உழைப்பும் இருந்தால், ஈஸியா தயாரிப்பாளர் கிடைப்பார்னு எனக்கு இப்பதான் புரிஞ்சுது. எனக்குப் பெரிய சவாலா இருந்ததே, சென்சார் வேலைகள்தான். `நான் ரசிச்சு எடுத்த எந்தக் காட்சியையும் சென்சார் அதிகாரிகள் கத்தரி போட்டுடக் கூடாது’ன்னு தினம் தினம் சாமி கும்பிட்டேன். அப்படியும் சில காட்சிகள் ‘கட்’டாகும்போது, பெற்ற குழந்தைக்கு வெட்டுக்காயம்பட்ட அவஸ்தை எனக்கு. அடுத்தது மிக முக்கியமா, `என் படம் ரிலீஸாகும்போது எந்த இயற்கைச் சீற்றமும் வந்துடக் கூடாது. அரசியல்ல பரபரப்பான எந்தச் சம்பவமும் நடந்துடக் கூடாது. மக்கள் எல்லோரும் நிம்மதியா, நல்லபடியா இருக்கிற சூழல் இருக்கணும்’னும் வேண்டிக்கிட்டேன். ஏன்னா, தமிழ் சினிமாவுல இப்பல்லாம் ஒரு படத்துக்கான ஆயுள் மூணே நாள்தான். அதுக்குள்ள ரசிகர்களோட மனசுல இடம் பிடிச்சுடணும். `படம் ஹிட்’னு சொல்ல வெச்சுடணும். இப்படித்தான் இருக்கு நிலைமை!’’ என்ற லோகேஷை அமைதியாகப் பார்த்தபடியே ஆரம்பிக்கிறார் ஸ்ரீகணேஷ்.

``யாராவது வெறும் சுவரைப் பார்த்துக் கதை சொல்லியிருக்கீங்களா? ஒரு தயாரிப்பாளருக்காக நான் சொல்லியிருக்கேன்! ஏன்னா, அந்தத் தயாரிப்பாளர் எந்த இடத்துல சிரிக்கிறார், எந்த இடத்துல ஆர்வமாகுறார்னு அவரைப் பார்த்துக் கதை சொல்லும்போதே நான் கண்டுபிடிச்சிடுவேணாம். அதுக்காக, லாட்ஜுல இருந்த சுவருக்குக் கதை சொல்லச் சொல்லி, என் தலைக்குப் பின்னாடி இருந்து கதை கேட்டார் அந்தத் தயாரிப்பாளர். யாருகிட்ட கதை சொல்றது, எந்தத் தயாரிப்பாளர் கிட்ட பணம் இருக்கு, இல்லைனு தெரியாமப் போய், என்னோட சில படங்கள் டிராப் ஆகியிருக்கு’’ என்று சிரிக்கிறார் ஸ்ரீகணேஷ்.

``இந்தப் பிரச்னைகள் எல்லாமே, அடுத்த படத் திட்டமிடலுக்கான ஐடியாவைக் கொடுத்தி ருக்கும்ல?’’ இது மூவருக்குமான கேள்வி.

``என்னைப் பொறுத்தவரைக்கும் ஒரு சினிமாவுக்கான பேப்பர் ஒர்க் பிரமாதமா இருந்தா போதும். நல்ல படம் உருவாகிடும். `மாநகரம்’ படம் நல்லா வந்ததுக்கான காரணம், எல்லாமே முன்கூட்டியே முடிவெடுத்து எழுதி, அதன்படி படம் எடுத்ததுதான். எல்லோருக்குமே `இன்னிக்கு இதைத்தான் எடுக்கப்போறோம். இப்படித்தான் இருக்கும்’னு ஒரு தெளிவு இருக்கும். ஆனா, குறும்பட இயக்குநரா இருந்து சினிமா பண்ணதால், தொழில்ரீதியா சினிமாவை அணுகுறதுல சில சிக்கல்கள் இருந்துச்சு. பல படங்கள்ல வேலை பார்த்த என் உதவி இயக்குநர் ஒருவர்தான் எனக்கு நிறைய உதவினார்!’’ என்றார் லோகேஷ்.

``ரொம்ப நல்லவனா இருக்கக் கூடாது. அதைத்தான் அடுத்தப் படத்துக்காக நான் கத்துக்கிட்டது. ஒரு ரசிகனா, `சில இயக்குநர்கள் ஏன் கோபப்படுறாங்க?’னு யோசிச்சிருக்கேன். இயக்குநர் ஆன பிறகுதான், அதோட உள்அர்த்தம் புரியுது. முதல் படத்துல ரொம்ப இன்னொசென்டா இருந்துட்டேன். அதனால், `பாரதியார், ஜெயகாந்தனுக்கு இருக்கிற கோபம் நமக்கும் இருக்கணும் ஸ்ரீகணேஷ்’னு எனக்கு நானே சொல்லிக்கிட்டேன். ஏன்னா, சினிமாவைப் பொறுத்தவரை இயக்குநர் கையில்தான் லகான் இருக்கணும். இந்தப் படத்துக்கு அப்படி இல்லாததால்தான், சில இடங்கள்ல தவறு நடந்தது. இனி அப்படி நடக்காம பார்த்துக்குவேன்!’’ - இது ஸ்ரீகணேஷின் வாக்குமூலம்.

`` `டெக்னாலஜி வந்த பிறகு, இயக்குநர்களுக்கு வேலையும் வாய்ப்பும் ஈஸி ஆகிடுச்சு’னு பலபேர் நினைக்கிறாங்க. அது தவறான புரிதல். அந்தந்தக் காலகட்டத்துக்குக் கிடைக்கிற வசதிகள், அதுக்குச் சமமான சவால்களையும் கொடுத்துட்டுதான் போகுது’’ என விஜயகுமார் தொடங்க, இடையில் குறுக்கிட்டு ``டிஜிட்டல்ல எடுக்கிற படம், டிஜிட்டல்லேயே திருட்டுத்தனமா ரிலீஸும் ஆகிடுது!’’ என பஞ்ச் அடிக்கிறார் லோகேஷ்.

``இன்றைய நிலைமைக்கு யார் சின்ஸியரா படம் எடுக்குறாங்க, யாரு பொழுதுபோக்குக்குப் படம் எடுக்குறாங்கன்னு பார்க்கிறதில்லை. ஒரு நல்ல படம் நல்ல சுயேட்சை வேட்பாளர் மாதிரி களத்துல நின்னா, பெரிய கட்சிகளோட ஆடம்பரத்தோடு ரெண்டு மோசமான படங்கள் ரிலீஸாகி, நல்ல படத்தைக் காணாமப் பண்ணிடுது. ஆனா ஒண்ணு, எத்தனை டெக்னாலஜி வந்தாலும் நம்ம மண்ணுக்குத் தேவையான கதைகள் கட்டாயம் ஜெயிக்கும். காலங்காலமா அதே துரோகம், காதல், வாழ்வியல், வன்மம்தான் படத்தோட கதையா இருக்கு. அதை வேறமாதிரி சொல்றதுதான் ஓர் இயக்குநரோட பவர்பாயின்ட்னு நான் நம்புறேன்!’’ என விஜயகுமார் சொல்லி முடிக்க, ஸ்ரீகணேஷ் தொடர்கிறார்.

`` `‘ஒன்டைம் வொண்டர்’னு சொல்வாங்க. `ஒரு படம் நல்லா எடுத்துட்டார். அடுத்த படத்துல பார்க்கலாம்’னு அதுக்கு அர்த்தமாம். முன்னாடியெல்லாம் நல்ல படத்துக்கு `மவுத் டாக்’ கிடைச்சு, அதன் மூலமா படம் ஓடும். இப்பல்லாம் அதுக்குக்கூட வாய்ப்பு இல்லை’’ என்ற விஜய்குமார், ``அடுத்த படத்துக்கான திரைக்கதை எழுதிக்கிட்டிருக்கேன். சமூகத்துக்கு நல்ல கருத்துகள் சொல்ற பவர்ஃபுல் படமா அது இருக்கும்’’ என்கிறார்.

`மாநகரம்’ படத்தைத் தயாரித்த நிறுவனத்தினரே லோகேஷ் கனகராஜின் அடுத்த படத்தையும் தயாரிக்கிறார்கள். `8 தோட்டாக்கள்’ படத்துக்குப் பிறகு, அதர்வா ஹீரோவாக நடிக்கும் புதிய படத்தை இயக்கவிருக்கிறார் ஸ்ரீகணேஷ்.

சந்திப்பின் இறுதியில், இளம் இயக்குநர்கள் மூவருமே ஒரே குரலில் சொன்னது இதுதான்...

``ஹீரோ, ஹீரோயினுக்குப் பிரச்னை இல்லை. சினிமாவுல இயக்குநர்கள் மட்டும்தான் ஒவ்வொரு படத்துலேயும் ஜெயிச்சுக்கிட்டே இருக்கணும்!’’