“பச்சையப்பன் கல்லூரியில் பி.காம் முடிச்சுட்டு, என்ன பண்றதுன்னு யோசிச்சேன். சினிமா ஆர்வம் அதிகம் என்பதால் நடிக்கலாம்னு முடிவு பண்ணேன். நடிக்கிறதுக்காக நிறைய முயற்சிகள் செஞ்சும், பெரிய வாய்ப்புகள் எதுவும் கிடைக்காததால், டூத்பேஸ்ட் கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்தேன். ஆனாலும், கலை ஆர்வம் கொஞ்சமும் குறையலை. டப்பிங் ஆர்ட்டிஸ்ட் ஆனேன். அதே சமயத்தில் நிறைய சீரியல்களிலும் நடிச்சுட்டிருந்தேன். ‘சின்ன பாப்பா பெரிய பாப்பா’வில் நான்கு வாரங்கள் மட்டுமே வரக்கூடிய கேரக்டர் `பட்டாபி’. அது நல்லாயிருக்கவே, சீரியல் முழுக்க வந்தது; பெரிய ரீச்சும் ஆச்சு. ஒருவேளை `வாய்ப்பு கிடைக்கலை’னு டூத்பேஸ்ட் கம்பெனியிலேயே இருந்திருந்தா, என்ன ஆகியிருக்கும்? ‘மொழி’, ‘பயணம்’, ‘தர்மதுரை’, ‘8 தோட்டாக்கள்’ மாதிரியான படங்களில் நடிக்க முடிஞ்சிருக்காதுல்ல?” என, தன் திரைப் பயண அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறார் எம்.எஸ்.பாஸ்கர். இவரின் அக்கா ஹேமமாலினியும் பிரபல டப்பிங் ஆர்ட்டிஸ்ட் தான்! சின்னத்திரை நடிகர், டப்பிங் ஆர்ட்டிஸ்ட், குணச்சித்திர நடிகர்... என, தனக்குள் பல பரிமாணங்களைக் கொண்ட எம்.எஸ்.பாஸ்கரின் வீடு முழுக்க சினிமாவால் நிறைந்திருக்கிறது. ஆம்... மகள் ஐஸ்வர்யா, டப்பிங் கலைஞர். மகன் ஆதித்யா, நடிகராகத் தயாராகிக் கொண்டிருக்கிறார். இந்தக் கலகல கலைக் குடும்பத்தைச் சந்தித்ததில் இருந்து...

“சின்ன வயசுல கார்ட்டூன் கதாபாத்திரங் களுக்கு டப்பிங் பேசறதுக்காக, அத்தை என்னைக் கூட்டிட்டுப்போவாங்க. காலேஜ் முடிச்ச பிறகு, ‘இதையே ஏன் தொழிலா பண்ணக் கூடாது?’னு தோணுச்சு. ஏன்னா, செம ஜாலியான வேலை அது.'' என்று சிரிக்கிறார் பாஸ்கரின் மகள் ஐஸ்வர்யா. தொடர்ந்து, ``டப்பிங்ல என்ன மாதிரியான நுணுக்கங்கள் எல்லாம் தேவைனு அப்பாவைப் பார்த்துதான் கத்துக்கிட்டேன். சின்னதோ...

பெருசோ எந்த கேரக்டருக்கும் ஒரே அளவிலான மெனக்கெடல் கொடுப்பார் அப்பா. ‘மொழி’ ஷூட்டிங் சமயம். `மறுநாள் பையன் செத்துப் போயிட்டார்’னு சொல்வார்ல, அந்த சீன் ஷூட் பண்ணணும்னு அன்னிக்கு நைட் முழுவதும் தூங்காம பைத்தியம் பிடிச்ச மாதிரி ஒரு லுக் கொண்டு வந்தார். அதை ராதாமோகன் அங்கிள் இப்பவும் சொல்லி ஆச்சர்யப்படுவார். அதேபோலதான் டப்பிங்லயும் அப்பா ரொம்ப பெர்ஃபெக்ட்” என்று அப்பாவைப் பெருமிதத்துடன் பார்க்கிறார் மகள் ஐஸ்வர்யா.

“ ‘8 தோட்டாக்கள்’ ரிலீஸ் வரைக்கும் அப்பா நடிச்சதில் ‘மொழி’தான் என்னுடைய ஃபேவரிட்” என ஆதித்யா சொல்ல, அதை ஆமோதிக்கிறார் ஐஸ்வர்யா. “ எனக்கு ‘மொழி’ ரொம்பப் பிடிக்கும். ஏன்னா, அதுவரைக்கும் அவரை காமெடி ரோல்கள்ல மட்டும் பார்த்துட்டு ‘மொழி’யில் ஒரு பெர்ஃபாமரா பார்த்ததும் மிரண்டுட்டேன். அதுக்குப் பிறகு, ‘பயணம்’ படமும் எனக்கு ரொம்பப் பிடிக்கும். அதுல ஒரு சீன்ல அப்பா அழணும். ஆனா, `ஆமென் சொல்ற வரை கண்களைத் தாண்டி கண்ணீர் வரக் கூடாது’னு ராதாமோகன் அங்கிள் சொல்லிட்டாங்க. அப்பாவும் அதே மாதிரி நடிச்சதைப் பற்றி அவர் சொல்லிட்டே இருப்பார். இப்போ சமீபத்தில் ‘`8 தோட்டாக்கள்’ ரொம்பப் பிடிச்சது’’ என தன் செல்ல அப்பாவை அணைத்துக்கொள்கிறார் ஐஸ்வர்யா.

`` என் மனைவி ஷீலாவுக்கு, நான் கேரக்டர் ரோல் பண்ணாதான் பிடிக்கும். மற்றபடி காமெடியெல்லாம் பண்ணா, ‘ஆமா... வேற வேலை இல்லை உங்களுக்கு!’னு போயிடுவாங்க” என்று கலாய்க்கிறார் பாஸ்கர்.
தன்னைப் பார்த்துச் சிரிக்கும் மனைவியைப் பார்த்தபடி, “நான் ‘சின்ன பாப்பா பெரிய பாப்பா’ ஷூட் போறப்போ ஜாலியா போவேன். ‘செல்வி’ ஷூட் போறப்போ கொஞ்சம் சீரியஸா போவேன். காபி கேட்கிறப்போகூட முகத்தை சீரியஸா வெச்சிருக்கிறதைப் பார்த்துட்டு, ‘அங்கே போய் நடிங்க. ஏன் வீட்லயிருந்தே நடிக்க ஆரம்பிக் கிறீங்க?’னு கிண்டலா சொல்லிட்டுப் போயிடுவாங்க” என்று சொல்ல, வெட்கத்தில் நெளிகிறார் திருமதி பாஸ்கர்.

“ ‘கடவுள் இருக்கான் குமாரு’ படத்தில் ஹீரோயின் ஆனந்திக்கு அப்பாவா நடிச்சது, என் அப்பாதான். ஆனந்திக்கு வாய்ஸ் கொடுத்தது நான். இந்த மாதிரி சில கோ-இன்சி டென்ட் எல்லாம் நடக்கும்” என்று சிலிர்க்கும் மகள் ஐஸ்வர்யாவின் தோளில் தட்டிக்கொடுக்கிறார் பாஸ்கர்.

அரிதாரம் பூசா அன்பின் ஸ்பரிசம் வீடு முழுவதும் நிறைந்திருப்பது, பாஸ்கரின் சிரிப்பில் தெரிகிறது.