Published:Updated:

எனக்கு கிளாமரே பிடிக்காது!

எனக்கு கிளாமரே பிடிக்காது!
பிரீமியம் ஸ்டோரி
எனக்கு கிளாமரே பிடிக்காது!

ஆர்.வைதேகி

எனக்கு கிளாமரே பிடிக்காது!

ஆர்.வைதேகி

Published:Updated:
எனக்கு கிளாமரே பிடிக்காது!
பிரீமியம் ஸ்டோரி
எனக்கு கிளாமரே பிடிக்காது!

``அம்மா கன்னடம். அப்பா நார்த் இந்தியன். பாட்டி ஆங்கிலோ-இந்தியன். தாத்தா தமிழ். ஆனால் நான் பக்கா தமிழ்ப் பொண்ணு’’ படபட இன்ட்ரோ கொடுக்கிறார் ரெஜினா கஸாண்ட்ரா.

`` ‘தமிழ்ப் பொண்ணு’ ரெஜினாவுக்கு இரண்டு வருடங்களுக்கு ஒரு தமிழ்ப் படம் போதுமா?’’

‘`என்ன பண்றது... தெலுங்குல பேக் டு பேக் கமிட்மென்ட். அதனால் மற்ற மொழிப்படங்கள்ல நடிக்க முடியலை. இனிமே அப்படிச் சொல்லவேண்டிய அவசியம் இருக்காது. இனி என்னைத் தமிழ்ப்படங்களில் அடிக்கடிப் பார்க்கலாம். செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யாவுடன் ‘நெஞ்சம் மறப்பதில்லை’, அதர்வாவுடன் ‘ஜெமினி கணேசனும் சுருளிராஜனும்’, அப்புறம் ‘ராஜதந்திரம் 2’, ‘மடைதிறந்து’, ‘சிலுக்குவார்பட்டி சிங்கம்’ என நான் ரொம்ப பிஸி.''

எனக்கு கிளாமரே பிடிக்காது!

``சினிமாவுக்குள் எப்படி வந்தீங்க?''

``இப்பதான் ஆரம்பிச்ச மாதிரி இருக்கு. அதுக்குள்ள 25 படங்கள் நடிச்சுட்டேன். அப்போ நாலாவது படிச்சுக்கிட்டிருந்தேன். எந்நேரமும் சிரிச்ச முகத்தோடு துறுதுறுன்னு இருப்பேன். ஒருதடவை அம்மாவுடன் ஃப்ரெண்ட் வீட்டுக்குப் போயிருந்தேன். அந்த ஆன்ட்டி என்னைப் பார்த்துட்டு ‘இவ்ளோ க்யூட்டா இருக்காளே... இவளை ஏன் விளம்பரப் படத்துல நடிக்கவைக்கக் கூடாது?’னு கேட்டாங்க. விளம்பரம், மாடலிங்னு லைஃப் மாற ஆரம்பிச்சுது. பத்தாவது படிக்கிறப்ப முதல் படம் பண்ணினேன். என்ன பண்ணணும், என்ன பண்ணக் கூடாதுனு அப்பதான் நடிப்பைக் கத்துக்கிட்டேன். ப்ளஸ் டூ படிக்கிறப்ப ‘கண்ட நாள் முதல்’ படத்தில் நடிச்சேன். அதுக்கு அப்புறம் மறுபடியும் நடிக்க வருவேன்னு நானே நினைச்சுப்பார்க்கலை.

காரணம், லேடி ஆண்டாள் ஸ்கூல்ல ப்ளஸ் டூ படிச்சப்ப, ஸ்கூல் பீப்பிள் லீடர். அங்கே அடிக்கடி லீவு எடுக்கக் கூடாதுன்னு ஏகப்பட்ட கண்டிஷன்ஸ். அம்மா சைடுல எல்லாருமே பயங்கரமான படிப்ஸ் வேற. ஸ்கூல் போர்டுல என் பேர் இருக்கும். அதைப் பார்க்கிறதே கெத்து ஃபீலிங். அதனால படிப்புல சீரியஸ் ஆகிட்டேன். அப்புறம் டபிள்யூ.சி.சி காலேஜ்ல சைக்காலஜி படிச்சேன். ரொம்ப ஸ்ட்ரிக்ட்டான காலேஜ். பங்க் பண்ணவே முடியாது. அப்போ ஷார்ட் ஃபிலிம்ஸ்ல நடிக்க நிறைய வாய்ப்பு வந்தது.  `காதலில் சொதப்புவது எப்படி?’ உள்பட ஒருசில ஷார்ட் ஃபிலிம்ஸ் மட்டும் பண்ணினேன். அது பயங்கர வைரலாகிடுச்சு. செம ரெஸ்பான்ஸ்!’’

எனக்கு கிளாமரே பிடிக்காது!

``சிவகார்த்திகேயன், உதயநிதி, அதர்வா, எஸ்.ஜே.சூர்யானு தமிழிலும், தெலுங்கிலும் நிறைய ஹீரோஸ் கூட நடிச்சிட்டீங்க. ஆனாலும் உங்களைப் பற்றி எந்தக் கிசுகிசுக்களுமே வந்ததில்லையே எப்படி?''

``எல்லாருமே எனக்கு நல்ல கோ ஸ்டார்ஸா அமைஞ்சாங்க. எல்லார்கூடவும் நல்ல நட்புல இருக்கேன். அவ்ளோதான். கிசுகிசு வரணும்னா ஷூட்டிங்கைத்தாண்டி வேற ஏதாவது பண்ணியிருக்கணும். அப்படிப் பார்த்தா எனக்கு டைமே இல்லை. ராத்திரிப் பகலா ஷூட் போயிக்கிட்டிருக்கேன். எனக்குனு ஒரு பெர்சனல் லைஃப் இருக்கான்னே தெரியாத அளவுக்கு அநியாயத்துக்கு பிஸியா இருக்கேன். நான் ரொம்ப வொர்க்கஹாலிக்’’

``சமத்துப்பெண்ணாக இருந்த ரெஜினா இப்போது கிளாமர் பொண்ணா மாறிட்டாங்களே.. ஏன்?''

‘` `கிளாமர்’ங்கிற வார்த்தையே எனக்குப் பிடிக்காது. எனக்கு எது வசதின்னு ஃபீல் பண்றேனோ, அது எனக்கு ஓகே. அடுத்தவங்க சொல்றாங்கங்கிறதால கிளாமரா பண்றதை விடவும் என்னை நானே செல்ஃப் அனாலிசிஸ் பண்ணிப்பேன். இந்த கேரக்டரை நான் பண்ணலாம்னு மனசு சொன்னா மட்டும் ஓகே சொல்வேன். அந்தப் படம் பண்ணும்போது நான் ஹேப்பியா இருப்பேனாங்கிறதுதான் முக்கியம். என் வாழ்க்கையில் எல்லா விஷயங்களுக்கும் முடிவெடுப்பது இப்படித்தான்.’’