Published:Updated:

ஜோக்ஸ் - 3

ஜோக்ஸ் - 3
பிரீமியம் ஸ்டோரி
News
ஜோக்ஸ் - 3

ஓவியங்கள்: கண்ணா

ஜோக்ஸ் - 3

``டிரைவரால தலைவருக்கு என்ன பிரச்னை?''

``வீட்டுக்கு யாராவது டீசன்ட்டா வந்துட்டா, உடனே தலைவரோட டாக்குமென்ட்டைத் தூக்கிட்டு ஓட ஆரம்பிச்சிடுறாராம்!''

- அம்பை தேவா

ஜோக்ஸ் - 3

``கல்யாணப் பத்திரிகையில பின்குறிப்புன்னு என்ன போட்டிருக்கு?''

“கல்யாணத்துல வீடியோ, போட்டோ கிடையாது.ஆகையால் மணமக்களுடன் செல்ஃபி எடுத்துக்கொள்ள ஆண்ட்ராய்ட் போனுடன் வரவும்னு!”

- வி.சகிதாமுருகன்

ஜோக்ஸ் - 3

``பையனைப் பற்றி ஊர்ல விசாரிச்சிட்டோம்''

“இனி?”

“ஃபேஸ்புக், வாட்ஸ் அப், ட்விட்டர்ல விசாரிக்கணும்!”

- வி.சகிதாமுருகன்.

ஜோக்ஸ் - 3

``தொகுதி மக்களுக்கு ஏதாவது செய்யணும்ய்யா..!''

``வேண்டாம் தலைவரே... அப்புறம் மக்களுக்கு சந்தேகம் வந்துடும்.''

- எஸ்.கோபாலன்