
News
ஓவியங்கள்: கண்ணா

``நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மாணவர்களை அலங்கோலமாக்காமல் நீட்டாக நீட் தேர்வு எழுதவிடுவோம் என்பதை...'''
- வி.சகிதாமுருகன்

``ஏன்மா... கடையில் முறுக்கு வாங்க இவ்வளோ நேரமா...?''
``முறுக்கு டிசைன் எதுவுமே சரியில்லைங்க...''
- கலைவாணன்

``தலைவருக்கு என்ன கடுப்பு?''
``அவரை விசாரணைக்குக் கூட்டிப் போறப்ப யாரோ ஆரத்தி எடுத்திருக்காங்க!''
- அம்பை தேவா

``தலைவர் ஏன் ரெண்டு முறை பல் துலக்குறார்?''
``அதான் சொன்னேனே... அவருக்கு இன்னொரு முகமும் இருக்கு...''
- கலைவாணன்