பிரீமியம் ஸ்டோரி
ஜோக்ஸ் - 5

``எலக்ஷனே இல்லை, தலைவர் எதுக்கு பொது மக்கள் காலில் விழறார்?''

``அவருடைய ஸ்டேட்டஸ்க்கு லைக்ஸ் போடச் சொல்லித்தான்...''

- கலைவாணன்

ஜோக்ஸ் - 5

``தலைவரே... அடுத்த எலக்ஷன் உள்ளாட்சிக்கா, சட்டசபைக்கா..?''

``எதுக்கு கேட்கறே..?''

``கொஞ்சம் ஃபைனான்ஸ் பிராப்ளம்...''

- ஜெ.மாணிக்கவாசகம்

ஜோக்ஸ் - 5

``தலைவர் இந்தி கத்துக்கறாரா... ஏன்?''

``திகாருக்கு அனுப்பிச்சாங்கன்னா மொழிப் பிரச்னை வந்துடக்கூடாதில்ல... அதுக்குத்தான்!''

- எஸ்.ராமன்

ஜோக்ஸ் - 5

``தலைவரோட கரை வேட்டில ஒரு கலர் கூடுதலா இருக்கே?''

``கட்சியோட எந்த அணினு வித்தியாசம் தெரியறதுக்காகவாம்!''

- பா.ஜெயக்குமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு