Published:Updated:

ஜோக்ஸ் - 1

ஜோக்ஸ் - 1
பிரீமியம் ஸ்டோரி
News
ஜோக்ஸ் - 1

ஓவியங்கள்: கண்ணா

ஜோக்ஸ் - 1

``அந்த ஃபாரின் டூரிஸ்ட்ஸ் என்ன சொல்றாங்க?!''

``ஆளும் கட்சி எம்.எல்.ஏ-க்களையெல்லாம் ஒண்ணா நிக்க வெச்சிப் பார்க்கணுமாம்!''

- பி.ஜி.பி.இசக்கி

ஜோக்ஸ் - 1

``தூங்கி முழிச்சதும், ஃப்ரெஷ்ஷா ஒரு டீ குடிப்பேன்!''

``அப்புறம்?''

``ஆபீஸ்ல இருந்து, நேரா வீடுதான்!''

- தே.ராஜாசிங் ஜெயக்குமார்

ஜோக்ஸ் - 1

``பேங்க்கைத் திறந்து வைத்த தலைவர் கண் கலங்குறாரே, ஏன்?''

``அவர் இதுவரை எந்த பேங்க்கையும் பகல்ல திறந்ததே இல்லையாம்!''

- கி.ரவிக்குமார்

ஜோக்ஸ் - 1

``போனமுறை பாடிய அதே பாடலை இம்முறை ராகத்தை மாற்றி ஏன் பாடினீர் புலவரே?''

``இது ரீமிக்ஸ் மன்னா!''

- வெ.ராம்குமார்