Published:Updated:

“நாம பார்த்திட்டிருக்கிறது இன்னொருத்தவங்களோட பெட்ரூம்!”

“நாம பார்த்திட்டிருக்கிறது இன்னொருத்தவங்களோட பெட்ரூம்!”
பிரீமியம் ஸ்டோரி
“நாம பார்த்திட்டிருக்கிறது இன்னொருத்தவங்களோட பெட்ரூம்!”

பா.ஜான்ஸன், படம்: சொ.பாலசுப்ரமணியன்

“நாம பார்த்திட்டிருக்கிறது இன்னொருத்தவங்களோட பெட்ரூம்!”

பா.ஜான்ஸன், படம்: சொ.பாலசுப்ரமணியன்

Published:Updated:
“நாம பார்த்திட்டிருக்கிறது இன்னொருத்தவங்களோட பெட்ரூம்!”
பிரீமியம் ஸ்டோரி
“நாம பார்த்திட்டிருக்கிறது இன்னொருத்தவங்களோட பெட்ரூம்!”

“கனடாவுல `அமெண்டா டாட்’னு ஒரு பொண்ணு, ஃபேஸ்புக் வழியா ஒருத்தருக்கு ஃப்ரெண்ட் ஆகுறா. அவனுக்கு வீடியோ சாட்ல தனது உடம்பைத்  திறந்து காமிக்கிறா. அதை அவன் கேப்சர் பண்ணி, ஃபேஸ்புக்ல போட ஆரம்பிச்சிடறான். அதனால இந்த ஊரே வேணாம்னு அங்கே இருந்து கிளம்பி வேற ஊர், வேற ஸ்கூல்னு அந்தப் பொண்ணு போகுது. கொஞ்சநாள் கழிச்சு, அங்கேயும் இதே விஷயம் பரவுது. இதனால மனசு வெறுத்துப்போய், ஒரு வீடியோவில் தன் கதையைப் பதிவுசெய்து, அதை யூடியூப்ல அப்லோட் பண்ணிட்டு இறந்துபோயிடுறா. படத்துல என்ன சொல்லலாம்னு தேடிக்கிட்டிருந்தப்போ பார்த்த வீடியோ அது. அதிலிருந்து என்னால வெளியே வர முடியலை. அப்போ முடிவு பண்ணேன், இந்தக் கதையைத்தான் சொல்லணும்னு” என்கிறார் `லென்ஸ்’ படம் மூலம் நம் மனசாட்சியை அசைத்துப்பார்த்த இயக்குநர் ஜெயப்பிரகாஷ்.

``நான் ஒரு சாஃப்ட்வேர் இன்ஜினீயர். அமெரிக்காவுல வேலை பார்த்திட்டிருந்தேன். ஒருகட்டத்துக்கு மேல அந்த வேலை போரடிச்சிடுச்சு. நடிப்பு கத்துக்கணும்னு  ஓர் ஆர்வம் வந்தது. `சியாட்டில் ஸ்கூல் ஆஃப் ஆக்டிங்’ல சேர்ந்தேன். அங்கே நான் சந்திச்ச நபர்தான் ஜே.டி.காவர்டு. அவர்தான் அங்கே டீச்சர். ரெண்டு வருஷங்கள் கழிச்சு, நடிக்கணும்கிற ஆசை அதிகமாகிடுச்சு. வேலையை ரிசைன் பண்ணிட்டு சென்னை வந்து, நடிக்கிறதுக்காக வாய்ப்பு தேடி அலைஞ்சேன். ‘இன்பா’, ‘என்னை அறிந்தால்’னு சில படங்களில் சின்னச் சின்ன ரோல்ல நடிச்சேன். பெருசா எதுவும் நடக்கலை. வேற ஏதாவது பண்ணணும்னு யோசிச்சேன்.  ஒருநாள், எனக்கு நடிப்பு சொல்லிக்கொடுத்த ஜே.டி.காவர்டு டீச்சர்கூட ஸ்கைப்ல பேசிட்டிருந்தேன். அந்தப் பேச்சு வளர்ந்து, `இப்போ நான் சாகப்போறேன்னு சொல்றேன். அதை உங்களால் தடுக்க முடியுமா?’னு அவர் கேட்டார். `வேண்டாம்னு நான் கட்டாயப்படுத்தினா என்ன பண்ணுவீங்க?’னு கேட்டேன். இந்த ஸ்கைப் உரையாடல் அப்படியே மனசுக்குள்ள நின்னுடுச்சு. மறுபடியும் நடிகரா வாய்ப்பு தேடும் நேரத்துலதான் நமக்காக ஏதாவது பண்ணணும்னு அந்த ஸ்கைப் காலிங்கையே கதையா எழுதினேன்.

“நாம பார்த்திட்டிருக்கிறது இன்னொருத்தவங்களோட பெட்ரூம்!”

முதல்ல ஆனந்த் சாமி நடிச்ச யோகன் கேரக்டரை எனக்காக எழுதினேன்.  `இதுல நாம நடிக்க வேணாம், டைரக்ட் மட்டும் பண்ணுவோம்’னுதான்  முதலில் நினைச்சேன். ஆனா, இந்தக் கதையில் நடிக்கவும், இதைத் தயாரிக்கவும் யாருமே முன்வரலை. என் கையில இருந்தது, மனைவிக்குச் சொந்தமான இடத்தை விற்றது, நண்பர்கள்கிட்ட வாங்கினதுன்னு பல வழிகள்ல பணத்தை ரெடிபண்ணேன். யோகன் ரோலுக்கு ஆனந்த் சாமியையும், அரவிந்த் ரோலுக்கு இன்னொருத்தரையும் முடிவுபண்ணியிருந்தோம். ஆனா, அவரால நடிக்க முடியாத நிலைமை. ஒளிப்பதிவாளர் எஸ்.ஆர்.கதிருக்கும் இதை முடிச்சுட்டு வேற ஒரு கமிட்மென்ட் இருந்தது. அப்போ இன்னொரு நடிகரைத் தேடி அலைய நேரம் இல்லைங்கிறதால, `நானே நடிக்கிறேன்’னு முடிவுபண்ணி ஷூட் தொடங்கினோம்.

பக்காவா ப்ளான் பண்ணி 30 நாள்கள்ல ஷூட் முடிச்சுட்டோம். 50 சதவிகிதப் படம் ஆங்கிலம், 45 சதவிகிதம் தமிழ்,  ஐந்து சதவிகிதம் இந்தி - மலையாளம்னு மல்டிலிங்குவலா எடுத்த படம் இது. நிறைய க்ளோஸப் காட்சிகள் இருந்ததால அதை எதுவுமே பண்ண முடியலை.

அமெண்டா மாதிரியே இன்னொரு சம்பவம் பற்றி நான் படிச்சேன். அமெரிக்காவில் ஒரு பொண்ணு வந்து சர்ச்சுக்குப் பக்கத்துல உள்ள வீட்டில் தங்குறா. சுற்றி இருக்கிறவங்க எல்லாரும் அவளோட நல்லா பழகுறாங்க. ஆனா, அந்தப் பொண்ணுக்கு, தன்னை யாரோ பார்த்திட்டிருக்கிறதுபோல ஓர் உணர்வு. குளிக்கும்போது, சமைக்கும்போது, டிரெஸ் மாற்றும்போது. இதை என்னன்னு கண்டுபிடிக்கிறதுக்கு முயற்சி பண்ணினதுல, வீடு முழுக்க கேமரா செட் பண்ணியிருக்குன்னு கண்டுபிடிச்சுடுறா. இதைப் பண்றது அவளுடைய பக்கத்து வீட்டுக்காரன். அவனுக்கு தினசரி வேலையே அவ பண்றதை எல்லாம் இவன் வீட்ல உட்கார்ந்து பார்க்கிறதுதான். அந்த டைம்ல இன்டர்நெட் யூடியூப் எல்லாம் அவ்வளவு ஆக்டிவ் கிடையாது.

இவன் கேமரா செட் பண்ணி, தன்னைப் பார்க்கிறான்னு புகார் கொடுக்கிறா. ஆனா, `ஒருத்தர் உங்க வீட்டுக்குள்ள வந்து பிரச்னை பண்ணினால்தான் சட்டரீதியா தண்டிக்க முடியும். கேமரா வெச்சுப் பார்க்கிறதையெல்லாம் தண்டிக்க சட்டமே கிடையாதுனு சொல்றாங்க. ஆனா, அந்தப் பொண்ணு இதுக்காகச் சண்டை போட்டு பிரைவசிக்கான சட்டத்தை எழுதவைக்கிறா. இந்தச் சட்டம் கொண்டுவர்ற வரை, போர்வையால தன் உடல் முழுக்க மூடிக்கிறா. டிரெஸ் போட்டுக்கிட்டே குளிக்கிறது உள்பட எல்லா வேலைகளையும் செய்யுறா. இதையும் `லென்ஸி’ல் யூஸ் பண்ணியிருந்தேன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

“நாம பார்த்திட்டிருக்கிறது இன்னொருத்தவங்களோட பெட்ரூம்!”

இப்படி நிஜமும் நிஜம் சார்ந்தும் உருவானதால், பார்க்கிறவங்களுக்கு நெருக்கமா இருக்குன்னு நினைக்கிறேன். படத்தை ஃபெஸ்டிவல்ல பார்த்துட்டு, `இது ஃபெஸ்டிவலோடு நின்னுபோயிடக்கூடாது. கொஞ்சம் வெயிட் பண்ணுங்க. இதை ரிலீஸ் பண்ண யாராவது முன்வர்றாங்களானு பார்க்கலாம்’னு எனக்கு சப்போர்ட் பண்ணின வெற்றிமாறன் சாருக்கு நன்றி சொல்லணும். படம் பார்த்துட்டு நிறைய பிரபலங்கள் வாழ்த்தினாங்க. படம் முடிஞ்சு வெளியே வர்ற பலரும் சொல்றது `குற்ற உணர்ச்சியா இருக்கு’ன்னு. பலரும் `அந்த மாதிரி வீடியோ வர்ற வாட்ஸ்அப் குரூப்ல இருந்து வெளியே வந்துட்டேன்’னு சொன்னாங்க.

எனக்கு ஒரே ஒரு வருத்தம். படத்துக்கு ஏ சர்ட்டிஃபிகேட் கொடுத்ததால, 18 வயசுக்குக் கீழ உள்ளவங்க இந்தப் படத்தைப் பார்க்க முடியாது. இத்தனைக்கும்  இதை  இங்கிலீஷ்ல ரிலீஸ் பண்ணும்போது யு/ஏ-தான் கொடுத்தாங்க. அதாவது, பெற்றோருடன் சேர்ந்து போய்ப் பார்க்கக்கூடிய படம்னு. தமிழ்ல ரிலீஸ் பண்ணும்போது `ஏ' கொடுத்துட்டாங்க. இந்த சென்சார் பிராசஸ்தான் என்னன்னு புரியலை. இந்தப் படம் இங்கிலீஷ்ல கேரளாவுல ரிலீஸ் ஆனபோது ஒருத்தர் போன் பண்ணி, `படம் எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. அடுத்து என் பசங்களையும் கூட்டிட்டுப்போய் காட்டலாம்னு இருக்கேன். ஏன்னா, டெக்னாலஜியைத் தப்பா நாம யூஸ் பண்ணக் கூடாதுன்னு  என்   பசங்கதான் தெரிஞ்சுக்கணும்’னு  சொன்னார்.

என்னைக் கேட்டா, டெக்னாலஜி என்னைக்குமே பெஸ்ட்தான்; மனுஷன்தான் பிரச்னைனு சொல்வேன். இப்போ வாய்ப்புகள் ஜாஸ்தி. ஒரு ரூமுக்குள்ளேயே உட்கார்ந்து நீங்க நினைச்சதைச் சாதிக்க முடியும். ஆனா, நீங்க என்ன பண்ணப்போறீங்கங்கிறது உங்க கையிலதான் இருக்கு. நாம பார்த்திட்டிருக்கிறது இன்னொருத்தவங்களோட பெட்ரூம், பாத்ரூம்னு நாம உணரணும். அதைப் பார்க்கக் கூடாது; பகிரக் கூடாதுனு உறுதி எடுக்கணும். என் முதல் படம் மூலமா `உங்க சபலத்துக்காக இன்னொருத்தவங்க அந்தரங்கத்தை ஆபாசம் ஆக்காதீங்க’ன்னு ஒரு விஷயத்தைச் சொல்ல முடிஞ்சது மிகப்பெரிய சந்தோஷம். இனிமே எல்லாம் அவங்க அவங்க கையில்தான் இருக்கு.’’

புன்னகையோடு சொல்கிறார் ஜெயப்பிரகாஷ். என்ன செய்யப்போறோம் நாம்?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism