Published:Updated:

சங்கிலி புங்கிலி கதவதொற - சினிமா விமர்சனம்

சங்கிலி புங்கிலி கதவதொற - சினிமா விமர்சனம்
பிரீமியம் ஸ்டோரி
சங்கிலி புங்கிலி கதவதொற - சினிமா விமர்சனம்

சங்கிலி புங்கிலி கதவதொற - சினிமா விமர்சனம்

சங்கிலி புங்கிலி கதவதொற - சினிமா விமர்சனம்

சங்கிலி புங்கிலி கதவதொற - சினிமா விமர்சனம்

Published:Updated:
சங்கிலி புங்கிலி கதவதொற - சினிமா விமர்சனம்
பிரீமியம் ஸ்டோரி
சங்கிலி புங்கிலி கதவதொற - சினிமா விமர்சனம்

ன்னது கதையா?  எல்லா பேய்ப்படங்களிலும் என்ன கதை இருக்குமோ, அதேதான் ச.பு.க.தொ!

பிரமாண்டமான பங்களா, பேயாக வரும் சிறுவன், பேயைக் கண்டு மிரளும் காமெடியன், இருட்டில் வந்து மிரட்டும் அமானுஷ்ய உருவங்கள், பயமூட்டும் பின்னணி இசை, பேய் ஓட்டும் நிபுணர், பேயின் ஃப்ளாஷ்பேக், பேயின் ஆசை என்று சிலபல வருடங்களாக நாம் பார்த்துப் பயந்து சிரித்துப் பழகிய எல்லாப் பேய்ப் படங்களிலும் என்னவெல்லாம் இருக்குமோ, அத்தனையும் இந்தப் படத்திலும் இருக்கின்றன. பேயின் ஆசை என்ன என்பது மட்டும்தான் கொஞ்சமே கொஞ்சம் வித்தியாசம்.

சங்கிலி புங்கிலி கதவதொற - சினிமா விமர்சனம்

இயக்குநர் அட்லியின் தயாரிப்பில் முதல் படம். படத்தை இயக்கியிருப்பது நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் பேரன். தாத்தாவின் பாதைக்கு நேர் எதிர்த் திசையில் பேய்ப்படம் எடுத்திருக்கும் இயக்குநர் ஐக், திகிலைவிட காமெடியை நம்பிக் களமிறங்கியிருக்கிறார்.

காமெடியில் கலகலக்க வைக்கிறார் ஜீவா. வழக்கமான தமிழ் சினிமா நாயகியாக ஸ்ரீதிவ்யா. சில இடங்களில் ஓவர் மேக்-அப். ஜீவாவுக்கும் ஸ்ரீதிவ்யாவுக்கும் டூயட்டே இல்லை என்பது ஆச்சர்யம். பேய் வேடம் போட்டு ஸ்ரீதிவ்யா பாட்டியைப் பயமுறுத்தப்போகும் காட்சி, வாழையிலை காமெடி, டைமிங் ஒன்லைனர்கள் என்று தியேட்டரை அதிரவைக்கிறார் சூரி. அதிலும், பேய் கைங்கர்யத்தால் பல சூரிக்கள் தோன்ற, சரியான சூரியை ஜீவா அடையாளம் காணும் காட்சி, காமெடிக் களேபரம்.

இத்தனை படங்கள் நடித்தபிறகும் தம்பிராமையா தன் பாடி லாங்குவேஜையும் டயலாக் டெலிவரியையும் கொஞ்சம்கூட மாற்றிக்கொள்ளவில்லை என்பது துயரம்தான். ஆனால், படத்தின் காட்சியமைப்பு ராமையாவை ரசிக்கவைத்துவிடுகிறது. தேவதர்ஷினியின் காமெடியும் கலக்கல். 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சங்கிலி புங்கிலி கதவதொற - சினிமா விமர்சனம்


 
சில காட்சிகளே வந்தாலும், சிரிக்கவைக்கிறார்கள் மயில்சாமியும் இளவரசுவும். அன்பான அம்மாவாக ராதிகா பொருத்தம். படத்தில் அதிகம் ஸ்கோர் செய்வது ராதாரவி. பேய்ப் படங்களில் பேய் இருக்கிறதோ இல்லையோ, கோவை சரளா இருப்பார் என்பது விதி. இந்தப் படத்தில் பேய் ஓட்டும் இ.பி.ராஜேஸ்வரியாக கோவை சரளா. அசத்துகிறார் அம்மணி.

விஷால் சந்திரசேகர் இசையில் பாடல்கள் பெரிதாக ஈர்க்கவில்லை. பேய்ப்படங்களுக்கான வழக்கமான பின்னணி இசைதான். சத்யன் சூரியனின் கேமரா, பேய் பங்களாவைப் பிரமாண்டமாகக் காட்டுகிறது.
டி.எஸ். சுரேஷ் எடிட்டிங்கில், ஃப்ளாஷ்பேக் காட்சிகளில் காட்டிய கச்சிதம் படம் முழுவதும் இருந்திருக்கலாம் சங்கிலியோ புங்கிலியோ... கதவு என்னவோ ரொம்பப் பழசுதான்!

- விகடன் விமர்சனக் குழு

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism