Published:Updated:

இவள் அழகு!

இவள் அழகு!
பிரீமியம் ஸ்டோரி
இவள் அழகு!

முத்து பகவத், படம்: தே.அசோக்குமார்

இவள் அழகு!

முத்து பகவத், படம்: தே.அசோக்குமார்

Published:Updated:
இவள் அழகு!
பிரீமியம் ஸ்டோரி
இவள் அழகு!

“மூன்றே நிமிடத்தில் ஒரு செய்தியைச் சொல்லணும்கிறது ரொம்பப் பெரிய சவால். என்னால் அந்த மாதிரிக் கதை சொல்ல முடியாது. நிச்சயம் பயிற்சி தேவை. எல்லாப் படங்களுமே வித்தியாசமான கான்செப்ட்தான். திரையரங்கில் வியாபாரத்துக்காக ட்ரெய்லர் போடவேண்டிய நேரத்தில் ஓர்  இளைஞனுக்கு வாய்ப்பு கொடுக்கிற இந்த விஷயம் எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது” - மூவி பஃப் நிறுவனத்தின் `ஃபர்ஸ்ட் கிளாப்' குறும்படப்போட்டியின் இறுதி விழாவில்தான் இப்படி நெகிழ்ந்து பேசினார் இயக்குநர் வெற்றிமாறன்.

கடந்த டிசம்பரில் அறிவிக்கப்பட்ட இந்தப் போட்டிக்கு, குறும்படங்கள் வந்து குவிந்தன.  நூற்றுக்கணக்கான குறும்படங்களில் இருந்து, 17 படங்கள் தேர்வுசெய்யப்பட்டு இறுதிப்போட்டிக்குச் சென்றன. பி.சி.ஸ்ரீராம், வெற்றிமாறன், எழில் உள்ளிட்ட நடுவர் குழுவின் இறுதித் தேர்வு ஐந்து குறும்படங்கள் மட்டுமே.

தேர்வான ஐந்து குறும்படங்களுக்குமே திரையரங்குகளில் திரையிடப்பட செம ரெஸ்பான்ஸ். இறுதிக்கட்டமாக  வெற்றியாளர்களை பிரமாண்ட மேடைக்கு அழைத்துப் பெருமைப்படுத்தியது மூவி பஃப் டீம்.

இவள் அழகு!

முதல் பரிசு ஸ்ரீவிஜய் கணபதி இயக்கிய ‘இவள் அழகு’ படத்துக்குக் கிடைத்தது. மூன்று லட்சம் ரூபாய் பரிசுத்தொகையையும் சான்றிதழையும் பெற்றார் ஸ்ரீவிஜய் கணபதி. இரண்டாவது இடத்தை பிரதீப் ரங்கநாதனின் ‘App(a) Lock’ குறும் படமும், மூன்றாவது இடத்தை  பிரபு ஜெயராம் இயக்கிய `என்னங்க சார் உங்க சட்டம்’ படமும் பிடித்தன.

 ``படம் பண்ணணும்கிற ஆசையில் மூணு வருஷங்களா கோடம்பாக்கத்தையே சுற்றிவந்தேன். ‘இவள் அழகு’ என் வாழ்க்கையையே மாத்திடுச்சு. சீக்கிரமே என்னுடைய படம் திரையரங்குகளில் ஹவுஸ்ஃபுல்லா ஓடும்” என்று நம்பிக்கையுடன் பேசினார் முதல் இடத்தைப் பிடித்த  குறும்பட இயக்குநர் ஸ்ரீவிஜய் கணபதி.

“எல்லாக் குறும்படமுமே எங்களை ஆச்சரியப்படுத்துச்சு. எல்லா இயக்குநர்களுக்கும் பெரிய சல்யூட். 2டி மட்டுமல்லாமல், எல்லோருமே உங்களைக் கவனிச்சுட்டிருக்காங்க. அறிவுப்பூர்வமாவும் இதயப்பூர்வமாவும் படம் பண்ணுங்க. ஆல் தி பெஸ்ட்’’ என்றார் சூர்யா.

அடுத்த சீஸனில், 2டி நிறுவனத்தோடு இணைந்து இந்திய அளவில்  குறும்படப் போட்டியை நடத்தவிருக்கிறது மூவி பஃப்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism