Published:Updated:

ஜோக்ஸ் - 2

ஜோக்ஸ் - 2
பிரீமியம் ஸ்டோரி
ஜோக்ஸ் - 2

ஓவியங்கள்: கண்ணா

ஜோக்ஸ் - 2

ஓவியங்கள்: கண்ணா

Published:Updated:
ஜோக்ஸ் - 2
பிரீமியம் ஸ்டோரி
ஜோக்ஸ் - 2
ஜோக்ஸ் - 2

``போருக்கு இடையில் மன்னர் பர்ஸைத் திறந்து அடிக்கடி என்ன பார்க்கிறார்?”

“மகாராணி படத்தைதான். வெறி ஏற்ற அவர் கடைபிடிக்கும் உத்தி அது!”

- வி.சகிதாமுருகன்.

ஜோக்ஸ் - 2

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

``நம்ம தலைவர் தன்னோட பிறந்த நாளை ட்ரெண்டியா கொண்டாடுறாமே...?''

``ஆமா..ஐயாயிரம் பேருக்கு லைக்ஸ்ம், கமென்ட்டும் போடப்போறாராம்...''

- க.கலைவாணன்

ஜோக்ஸ் - 2

``வரன் பார்க்கப் போன இடத்துல பொண்ணுக்கு திடீர்னு ஒரு ஷாக் கொடுத்தேன்... அப்படியே மொத்தக் குடும்பமும் ஆடிப்போய்டுச்சு!''

``எப்படி?''

``என் பையனுக்கு சமைக்க வராதுன்னேன்!''

-நா.இந்திரா

ஜோக்ஸ் - 2

``தலைவர் என்ன சொல்றாருப்பா?''

``ப்ளஸ் டூ மாதிரி எலெக்சன்லயும் வெற்றியாளரைச் சொல்லாம கிரேடை மட்டும் அறிவிக்கணுமாம்!''

- பி.ஜி.பி.இசக்கி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism