மாற்றுத்திறனாளி நாயகனும் அவனை வளர்த்தெடுக்கும் பாசக்கார மனிதர்களுமாக மணக்கிறது பிருந்தாவனம்.

அருள்நிதி வாய் பேசாத, காது கேளாத இளைஞர். ஊட்டியில் சலூன் ஒன்றில் வேலை பார்க்கிறார். எந்நேரமும் அருள்நிதியை வம்பிழுக்கும் தான்யா சிறுவயதிலிருந்தே அருள்நிதியின் தோழி. தான்யாவுக்கு நாயகன் மீது காதல். ஆனால் தான்யாவின் காதலை ஏற்கமறுக்கிறார் அருள்நிதி. ஏன் என்பதுதான் பிருந்தாவனம் சொல்லும் கதை.

எப்போதும் போலவே ராதாமோகனிடம் இருந்து ஒரு `பளிச்' பாசிட்டிவ் படம். முன்பாதி முழுக்க நகைச்சுவையாலும், பின்பாதியில் நெகிழ்ச்சியாலும் நிறைக்கிறார். கதையின் ஓட்டத்தில் நடிகர் விவேக்கை விவேகமாகவும் வித்தியாசமாகவும் பயன்படுத்தியிருக்கிறார்.

அருள்நிதிக்கு சவாலான வேடம். தான்யா காதலைச் சொல்லும் இடத்தில் எரிந்து விழுவது, நண்பர்களோடு ஜாலி லூட்டி அடிப்பது என நல்ல முன்னேற்றம். வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டாகப் பேசுகிற தடாலடி நாயகி தான்யாவின் திமிர் நடிப்பு ரசிக்கவைக்கிறது!

நடிகர் விவேக்காகவே வரும் விவேக் கதையோடு ஒன்றிப்போகிறார். விவேக்கின் புகழ்பெற்ற காமெடிக் காட்சிகளைத் தேவையான இடங்களில் பயன்படுத்தியிருப்பது புத்திசாலித்தனம். செல்முருகனுடன் காமெடி, சுப்புவுடன் சென்டிமென்ட் என்ற இரண்டு களங்களிலும் வெல்கம்பேக் விவேக்! எம்.எஸ்.பாஸ்கர் வழக்கம்போல் கலக்கல். ஆனால் அவரது காட்சிகளை இன்னும் அதிகப்படுத்தியிருக்கலாமே?

பொன்.பார்த்திபனின் காமெடியும் சென்டிமென்ட்டும் கலந்து செய்த வசனங்கள் படத்தின் பலம். விஷால் சந்திரசேகரின் இசையில் ‘ரூபி ரூபி’ என்ற தொடக்கப் பாடலைத் தவிர எந்தப் பாடலும் ஈர்க்கவில்லை. அடிக்கிற வெயிலுக்கு சில்லென்றிருக்கிறது எம்.எஸ்.விவேகானந்தின் ஒளிப்பதிவு.

அருள்நிதியின் ‘மௌன’ வாழ்க்கையை மட்டுமே பேசாமல், சுப்புவின் கதை, எம்.எஸ்.பாஸ்கரின் வாழ்க்கை என்று ஏராளமான கிளைக் கதைகளால் கவனம் சிதறுகிறது. அருள்நிதியின் ஃப்ளாஷ்பேக்கும் அதற்குப் பிறகு வருகிற காட்சிகளையும் இன்னும் உணர்வுப்பூர்வமாக, நெருக்கமாக அமைத்திருக்கலாம்.

இன்னும் எமோஷன் கூட்டியிருந்தால் பிருந்தாவனம் கலங்கடித்திருக்கும்!

- விகடன் விமர்சனக் குழு