Published:Updated:

தொண்டன் - சினிமா விமர்சனம்

தொண்டன் - சினிமா விமர்சனம்
பிரீமியம் ஸ்டோரி
தொண்டன் - சினிமா விமர்சனம்

தொண்டன் - சினிமா விமர்சனம்

தொண்டன் - சினிமா விமர்சனம்

தொண்டன் - சினிமா விமர்சனம்

Published:Updated:
தொண்டன் - சினிமா விமர்சனம்
பிரீமியம் ஸ்டோரி
தொண்டன் - சினிமா விமர்சனம்

றவழி ஆம்புலன்ஸ் டிரைவருக்கும் அநீதி அரசியல்வாதிக்குமான போராட்டமே ‘தொண்டன்’.

அரசியல்வாதி நமோ நாராயணனின் ஆட்களால் வெட்டுப்பட்ட ஒருவரைத் தன் ஆம்புலன்ஸில் காப்பாற்றுகிறார் சமுத்திரக்கனி. அவர் மீது கோபம் கொள்கிறார் நமோ. ஒரு பிரச்னையில் நமோவின் தம்பி சௌந்தர பாண்டியன் கல்லூரி ஒன்றில் தாக்கப்படுகிறார். அவரைக் காப்பாற்ற ஆம்புலன்ஸில் ஏற்றி மருத்துவமனைக்குக் கொண்டுசெல்கிறார் சமுத்திரக்கனி. ஆனால் மருத்துவமனைக்குச் செல்வதற்குள் அவர் உயிர் பிரிந்துவிட, ‘எல்லாவற்றுக்கும் காரணம் சமுத்திரக்கனிதான்’ என்று நமோ கோபம் கொள்ள, அதை சமுத்திரக்கனி எப்படி எதிர்கொள்கிறார் என்பதே `தொண்டன்' க்ளைமாக்ஸ்.

தொண்டன் - சினிமா விமர்சனம்

அலுக்கும்வரை அறிவுரைகளை அள்ளித் தெளித்து இருக்கிறார் சமுத்திரக்கனி. கூடா நட்பால் விலகி நிற்கும் நண்பனை நினைத்து வருந்துவது, அவனைத் திருத்துவதற்காக முயற்சி செய்வது, சவால் விட்டு அதிரடி ஆக்‌ஷனில்  இறங்காமல் கதாபாத்திரத்தின் தன்மையை உணர்ந்து நடித்திருக்கிறார்.

சின்ன உணர்வுகளைக்கூட துல்லியமாகக் காட்டுகிறார் விக்ராந்த். அன்பான மனைவியாக சுனைனாவும் இயல்பான அப்பாவாக வேல ராமமூர்த்தியும் உணர்ந்து நடித்திருக்கிறார்கள்.  அறிமுகம் அனர்த்தனா அழகு.
நமோ நாராயணனுக்கு அடிதடி அரசியல்வாதி கேரக்டர். உடல்மொழியால் உள்ளூர் அரசியால்வாதிகளை அச்சு அசலாக நினைவுபடுத்துகிறார். கஞ்சா கருப்பும் சிறுவன் நாசத்தும் கனியின் நகைச்சுவை நண்பர்கள் என்றாலும் காமெடிக் குறைவுதான். க்ளைமாக்ஸில் வந்தாலும் நிறைவான காமெடியைத் தருவது சூரி-தம்பி ராமையா ஜோடியே.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தொண்டன் - சினிமா விமர்சனம்ராணுவ வேலையை விட்டதற்காகச் சொல்லும் காரணம், சாதி மறுப்புத் திருமணம், மறந்துவிட்ட நம் மரபுகள் என படம் முழுக்கப் பல காட்சிகளும் வசனங்களும் எனர்ஜி பூஸ்டர்கள். ஆனால், அவை ஒரு கட்டத்தில் ஓவர் டோஸாகிவிடுகிறது. அனைத்தையும் அடாவடியால் சாதிக்கும் அரசியல்வாதி, ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்... போன்ற உயர் அதிகாரிகளைத் துணைக்கு வைத்துக்கொள்ளாமல், வி.ஏ.ஓ., ஆர்.ஐ மாதிரியான கடைநிலை ஊழியர்களையா பயன்படுத்துவார்?

பின்னணி இசையிலும், ‘போய் வரவா’ பாடலிலும் மட்டும் ஜஸ்டின் பிரபாகரகனின் `உள்ளேன் ஐயா'.  கதையின் வேகத்தில் சீறிப்பாய்கிறது ஒளிப்பதிவாளர்கள் ஏகாம்பரம், ரிச்சர்ட் எம்.நாதனின் கேமரா.
காது கிழியப் பேசாமல், காட்சியிலும் பேசியிருக்கலாம் இந்த எளிய தொண்டன்.

- விகடன் விமர்சனக் குழு

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism