பிரீமியம் ஸ்டோரி
ஜோக்ஸ் -4

 ``தலைவர் டிகிரி வாங்கணும்னு ஆசைப்பட்டார்; முடியலை.''

``என்ன ஆச்சு?''

``காலேஜ் வாங்கிட்டார்!''

- கி.ரவிக்குமார்

ஜோக்ஸ் -4

``நாட்டை காக்க போருக்கு தயாராகுங்கள்னு அடிக்கடி பேசிக்கிட்டே இருக்கார் டாக்டர்''

``இது புதுசா வந்திருக்கிற நோய்  `போர்'பியா...''

- திருமாளம் எஸ்.பழனிவேல்

ஜோக்ஸ் -4

``கம்ப்யூட்டர் வாங்க ஏன் பெங்களூர் போறே? சென்னைலயே வாங்கலாமே?''

``தமிழ்நாட்ல சிஸ்டமே சரி இல்லைனு ரஜினி சொன்னாரே, அதான்!''

- சி.பி.செந்தில்குமார்

ஜோக்ஸ் -4

``மன்னா, பதுங்கு குழி வெட்ட ஆரம்பிக்கலாமா?''

``வே
ண்டாம். போர் வரும்போது பார்த்துக்கலாம்!''

- பா.ஜெயக்குமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு