Published:Updated:

‘திலேஷின்டே சுதந்திரம்!’

‘திலேஷின்டே சுதந்திரம்!’
பிரீமியம் ஸ்டோரி
‘திலேஷின்டே சுதந்திரம்!’

பா.ஜான்ஸன்

‘திலேஷின்டே சுதந்திரம்!’

பா.ஜான்ஸன்

Published:Updated:
‘திலேஷின்டே சுதந்திரம்!’
பிரீமியம் ஸ்டோரி
‘திலேஷின்டே சுதந்திரம்!’

முதல் படத்திலேயே தேசிய விருது. அடுத்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக்கை சமீபத்தில் வெளியிட்டார்.  ``ஷூட்டிங் முடிஞ்சது. போஸ்ட் புரொடக்‌ஷன் போயிக்கிட்டிருக்கு'' என கூலாகப் பேசுகிறார் மலையாள இயக்குநர் திலேஷ் போத்தன். இவர் இயக்கிய `மகேஷின்டே பிரதிகாரம்' சிறந்த பிராந்திய மொழிப் படத்துக்கான தேசிய விருதை சமீபத்தில் வென்றது.

``கம்ப்யூட்டர் சயின்ஸ்தான் படிச்சேன். ஆனா, எனக்கு சினிமா மேலதான் ஆர்வம். குறும்படம், டிவி நிகழ்ச்சிகள்னு தொடங்கினது அந்தப் பயணம். மூணு, நாலு சின்னப் படங்களில் வேலை செய்தேன். அதுக்கு இடையிலேயே நிறைய இயக்குநர்களைச் சந்திக்கிறதும் என் வேலைகளைக் கொண்டுபோய் காண்பிக்கிறதும்னு வாய்ப்பு கேட்டு முயற்சி பண்ணிட்டே இருப்பேன். அந்தச் சமயத்தில் சினிமா சம்பந்தமா ஏதாவது படிக்கலாம்னு தோணுச்சு. தியேட்டர் அண்ட் பெர்ஃபார்மிங் ஆர்ட்ஸ்ல எம்.ஏ படிச்சேன், அது முடிச்சிட்டு எம்.ஃபில் முடிச்சேன். பிறகு, நாடகங்கள் நிறையப் பண்ணிட்டிருந்தேன். அப்போதான் இயக்குநர் ஆஷிக் அபுவைச் சந்திச்சேன். அவர் கிட்ட அசோஸியேட்டா வேலை செய்தேன். முதல் படத்திலேயே சின்ன ரோல்ல நடிக்கவெச்சார். இயக்குநர் ஆகும் முன்னாலயே நடிகரா சினிமா பயணம் தொடங்கிடுச்சு.

‘திலேஷின்டே சுதந்திரம்!’

``நடிக்க ஆரம்பிச்சா அதிலேயே தேங்கிடுவோமோனு பயம் இருந்ததா?’’

``இல்லை. ஏன்னா, அது நம்ம டீம், நம்ம படம்னு ஒரு நினைப்பு இருந்தது. இந்த ரோலுக்கு நம்ம உருவம் செட்டாகும்னு டீம்ல எல்லாரும் சொல்றாங்க. கூடவே, நாமே நடிச்சுட்டா, வேலையும் சீக்கிரம் முடியும்னு அட்வான்டேஜும் இருக்கு. அதனால, ரொம்ப சந்தோஷமா நடிச்சேன். அதேநேரத்தில் எனக்குள்ள இருக்கும் இயக்குநரை மங்காம பத்திரமா பார்த்துக்கிட்டேன். இன்னொரு விஷயம்... நடிகனாவும் ஆனதால், அமல் நீரத், சத்யன் அந்திகாடுனு வேற இயக்குநர்களோடு வேலைசெய்யவும், படம் இயக்குறதைப் பற்றி இன்னும் கத்துக்கவும் முடிஞ்சது. இந்த அனுபவங்கள் என் முதல் படமான `மகேஷின்டே பிரதிகாரம்' இயக்கும்போது உதவுச்சு.’’

`` `மகேஷின்டே பிரதிகாரம்' எப்படி உருவானது?’’

``ஆஷிக் அபுவுடைய `இடுக்கி கோல்டு' படத்தின் க்ளைமாக்ஸ் ஷூட் பண்ணிட்டி ருந்தோம். அந்தப் படத்தில் ஷ்யாம் புஷ்கரும் வேலைசெய்தார். ஆனா, அதுக்கு முன்னால இருந்தே எனக்கு அவரைத் தெரியும். சும்மா நானும் அவரும் ஏதேதோ கதைகள் பேசிட்டிருந்தோம். அப்போ கம்பான் புருஷன்னு ஒருத்தர் பற்றிச் சொன்னார். அந்த கம்பான் புருஷனை ஏதோ சண்டையில ஒருத்தர் அடிச்சுட்டார். தன்னை அடிச்சவனைத் திருப்பி அடிக்கும்வரை கால்ல செருப்பு போட்டுக்க மாட்டேன்னு வீறாப்பா சொல்லிட்டாராம்.

தன்னை அடிச்சவனை மறுநாள் அடிச்சுடலாம்னு பார்த்தா, அடிச்சவன் துபாய்க்குப் போயிட்டான். மூணு வருஷம் கழிச்சு அவன் திரும்பிவந்த பின்னால அவனை அடிச்சுட்டுத்தான் செருப்பைப் போட்டுக் கிட்டார்னு இந்தச் சம்பவத்தைச் சொன்னார். இதுவே ஒரு சினிமாவுக்கான கதையா பண்ணலாம்னு அன்னைக்கு நைட் முழுக்கப் பேசினோம். காலையில விடியும்போது எங்க கையில ஒரு கதை இருந்தது. இதை இன்னும் டெவலப் பண்ணிட்டு ஆஷிக் அபுகிட்ட சொன்னேன். கதை கேட்டவர் பரவசமாகி நானே இந்தப் படத்தைத் தயாரிக்கிறேன்னு சொன்னார். ஃபஹத்கிட்ட சொன்னதும் நான் நடிக்கறேன்னு ஒப்புக்கிட்டார். அப்படி ஆரம்பிச்சதுதான் `மகேஷின்டே பிரதிகாரம்' ’’

``என்ன மாதிரியான சினிமாக்களைக் கொடுக்க நினைக்கிறீங்க?’’

``என்னை ஆச்சர்யப்படுத்தும் கதைக்காகத்தான்  காத்திருப்பேனே தவிர, இந்த மாதிரி சினிமா பண்ணணும்,  அந்த மாதிரி சினிமா பண்ணணும்னு நினைச்சதில்லை. அப்படி ஒரு லைன் கிடைச்சதும் அதை எப்படிப் பார்வை யாளர்களுக்குக் கொடுக்கணும்னு யோசிப்பேன். இப்படியான சினிமாதான் பண்ணணும்னு இப்போ வரை எனக்கு எந்த நிர்பந்தமும் இல்லை. இந்தச் சுதந்திரம்தான் என் போக்கில் என்னைப் பயணிக்கவைக்குது.’’

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

‘திலேஷின்டே சுதந்திரம்!’

``இரண்டாவது படத்திலும் ஃபஹத் பாசில்தான் ஹீரோ. அவர் நடிக்கும்படியான கதைதான் அமைகிறதா?’’

``ஒரு லோக்கல் போலீஸ் ஸ்டேஷனுக்கு வர்ற கேஸும், அதற்கு அடுத்த மூன்று நாட்கள் நடக்கும் சம்பவங்களும்னு போகும் கதைதான் படத்தின் ஹீரோ. இதில் யாரை நடிக்க வைக்கலாம்னு நிறைய பேரை யோசிச்சோம். ஆனா, அது ஃபஹத் நடிச்சாதான் சரியா இருக்கும்னு தோணுச்சு. மற்றபடி, அவருக்காகப் பண்ணப்பட்ட கதை இல்லை. தொடர்ந்து ஃபகத்கூட வேலை செய்யறதால் அவர் எந்த சீனை எப்படி நடிப்பார்னு எனக்குத் தெரியும். ரொம்பவும் டெடிகேட்டா நடிக்கக் கூடியவர். `மகேஷின்டே பிரதிகாரம்' பட க்ளைமாக்ஸ் ஷூட்டிங் ஒரு மைதானத்தில் எடுத்தோம். ஃபஹத் கால்ல அடிபட்டு ரத்தம் வர்றதைக்கூடப் பார்க்காம அந்த ஃபைட் சீன்ல நடிச்சிட்டிருந்தார். நாங்களா பார்த்து,  `இந்த சீனை நாளைக்கு எடுத்துக்கலாம்'னு சொல்லி வற்புறுத்தி அனுப்பிவெச்சோம்.’’

``மலையாள சினிமாக்களுக்கு வழங்கப்பட்ட தேசிய விருது குறித்து நிறைய சர்ச்சைகள் வந்ததே?’’

``சினிமாங்கிறது ஒரு கலைவடிவம். ஒரே கலையின் இரண்டு படைப்புகளை ஒப்பீடுசெய்து, இதைவிட இது சிறந்ததுனு சொல்லிட முடியாது. ஒவ்வொரு சினிமாவும் ஒவ்வொரு படைப்பு. அதில் எது சிறந்ததுனு கண்டுபிடிக்கிறது எனக்கு சிரமம். நான் எல்லாப் படங்களையும் பார்ப்பது இல்லை. பார்த்தாலும், அதை ஒப்பிட்டு எது பெஸ்ட்னு சொல்வதிலும் எனக்கு உடன்பாடு இல்லை. இனி அடுத்துப் பண்ணும் படங்களையும் நல்லா பண்ணணும்னு உற்சாகத்தைத் தரக்கூடியதாகத்தான் நான் விருதுகளைப் பார்க்கிறேன்.’’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism