Published:Updated:

"வேஷம் போட்டவரை தேவதூதனாகப் பார்ப்பதுதான் அவலம்!”

"வேஷம் போட்டவரை தேவதூதனாகப் பார்ப்பதுதான் அவலம்!”
பிரீமியம் ஸ்டோரி
"வேஷம் போட்டவரை தேவதூதனாகப் பார்ப்பதுதான் அவலம்!”

கடுகடுக்கிறார் பாரதிராஜாம.கா.செந்தில்குமார், படங்கள்: சொ.பாலசுப்ரமணியன்

"வேஷம் போட்டவரை தேவதூதனாகப் பார்ப்பதுதான் அவலம்!”

கடுகடுக்கிறார் பாரதிராஜாம.கா.செந்தில்குமார், படங்கள்: சொ.பாலசுப்ரமணியன்

Published:Updated:
"வேஷம் போட்டவரை தேவதூதனாகப் பார்ப்பதுதான் அவலம்!”
பிரீமியம் ஸ்டோரி
"வேஷம் போட்டவரை தேவதூதனாகப் பார்ப்பதுதான் அவலம்!”

‘‘மன்னிச்சுடுறேன்... மறந்துடுறேன். இது சுகமா இருக்கு. அந்த வருத்தத்தை, கோபத்தைத் தூக்கிச் சுமக்கிறது ரொம்பக் கஷ்டம். பத்து நாள் முன்னகூட நண்பர் ஒருத்தரைப் பார்த்தப்ப, ‘என்னய்யா... எப்படி இருக்கே?’னு கேட்டேன். பக்கத்துல இருந்த என் அசிஸ்டென்ட், ‘சார் மறந்துட்டீங்களா? இவர்கூட சண்டை. பேச மாட்டீங்க’னு சொன்னார். ‘ஓ... மறந்தே போயிட்டேன்ல’னு நினைச்சுக்கிட்டேன். இப்படி இருக்கிறது எனக்கு நல்லது. இல்லைன்னா வக்கிரப் புத்தியுள்ளவனா மாறிவிடுவேன். மறத்தல், மன்னித்தல் மனித மாண்பு. ஆனா, சில விஷயங்கள் மன்னிக்க முடியாமல் போகும். காலமும் வயசும் அதையும் மன்னிக்கச்சொல்லும். மன்னிப்பேன்’’ - அன்பும் அனுபவம் தந்த முதிர்ச்சியுமாகப் பேசுகிறார் இயக்குநர் பாரதிராஜா. புதிய திரைப்படப் பயிற்சி மையம், நடிப்பு, இயக்கம் என எப்போதும் இளைஞர்கள் சூழ இயங்கிக்கொண்டே இருப்பவரைச் சந்தித்தேன்.

"வேஷம் போட்டவரை தேவதூதனாகப் பார்ப்பதுதான் அவலம்!”

‘‘ என் உதவி இயக்குநர்கள் பலர், இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர்னு என்னென்னவோ ஆகிட்டாங்க. அப்படின்னா, நானும் ஒரு ஸ்கூல் மாதிரிதானே. பிறகு எதுக்கு ஒரு பயிற்சி நிறுவனம்னு தோணும். கிராமங்கள்ல உள்ளவனுக்கு விழிப்பு உணர்வு இல்லை. அவன்கிட்ட படிப்பறிவு கம்மி. ஆனால், உள்ளுக்குள்ள கலை இருக்கு. அப்படி வந்தவன் தானே இந்த பாரதிராஜாவும். ஊர்லயே உட்கார்ந்திருந்தேன்னா, இந்நேரம் காட்டுல கடலைப் பொறுக்கிட்டு, ரெண்டு மாடுகளைப் பத்திவிட்டுக்கிட்டு, கமிஷன் கடையிலதான் வேலை பார்த்துட்டு இருந்திருப்பேன். என்னைப்போல் எத்தனையோ காட்டுப்பூக்கள் எல்லா கிராமங்கள்லேயும் பூத்துக்கிடக்கு. அவங்களை முறைப்படுத்தி, அவங்க திறமைக்கேத்த இடத்தை உருவாக்க வேண்டாமா?”

‘‘அரசு திரைப்படப் பயிற்சிக் கல்லூரி ரொம்ப நாளா நடந்துட்டிருக்கு. ஆனால், அது முன்னமாதிரி இல்லைனு ஒரு குற்றச்சாட்டு இருக்கே?’’

‘‘அந்த இன்ஸ்டிடியூட் ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி அன்னைக்கு இருந்த அரசு, என்னையும் பாலுமகேந்திரா வையும் கூப்பிட்டுக் கேட்டாங்க. ‘செங்கல்பட்டுக்குப் பக்கத்துல நல்ல இடம் இருக்கு. ஏரி, மலை, கிராமங்கள், ரயில்வே ஸ்டேஷன்னு பிரமாதமான இடம். கிராமம், நகரம் கலந்த லொகேஷன். பிராக்டிகல் பயிற்சிக்குத் தேவையான காட்சிகளை அங்கேயே ஷூட் பண்ணலாம். அப்படியே  பத்து காட்டேஜ் போட்டால், ஷூட்டிங் போறவங்க தங்கிப் படம் எடுக்க வசதியா இருக்கும். வருமானமும் வரும். அந்த இடத்தையே ஃபிலிம் சிட்டியா மாத்திடலாம்’னு ஐடியா கொடுத்தோம். அதைத் தூக்கிப்போட்டுட்டு, அடையாறுல ஆரம்பிச்சாங்க. குளம், போலீஸ் ஸ்டேஷன்னு எல்லாத்தையும் செயற்கையா உருவாக்கினாங்க. இன்னிக்கு அந்தக் குளத்துக்கு லாரி லாரியா தண்ணி கொண்டுவந்து ஊத்திக்கிட்டிருக்காங்க. இப்படி உள்ள அரசுகள், அந்தக் கல்லூரியை எப்படி நடத்தும்?

‘இதுக்கு முன்ன இருந்தவங்க, கதவை இந்தப் பக்கம் வெச்சிருந்தாங்களா, அப்படின்னா அதை மூடிட்டு கதவை அந்தப் பக்கம் வை’ங்கிற ஈகோவில் அதை நாசம் பண்ணிட்டாங்க. ‘இது அந்தத் தலைவர் பேரால் வந்த கோர்ஸ்’னு சொன்னா, ‘ஓஹோ அப்படி ஒரு கோர்ஸ் இருக்கா. அந்த கோர்ஸே வேணாம்’ங்கிறாங்க. ஒண்ணு, அந்த கோர்ஸுக்குத் தன் பெயரை வெச்சது முதல் தப்பு. அப்படியே இருந்தாலும் அதை மாத்துறது ரெண்டாவது தப்பு. சப்ஜெக்ட்ல, சொல்லித்தர்ற முறையில் அதை முன்னேத்து. வெவ்வேறு ஊர்கள், நாடுகள்ல இருந்து பயிற்சியாளர்களைக் கூட்டிட்டு வந்து டெவலப் பண்ணு. அதைவிட்டுட்டு பெயரை மாத்துறது, ஆளை மாத்துறதுனு கள்ளிக்காடு மாதிரி கெடக்கு அந்த இடம்.’’

‘‘அரசு திரைப்பட விருதுகளை அறிவிக்காததுக்கும் அந்த ஈகோதான் காரணம்னு நினைக்கிறீங்களா?’’

‘‘தனிமனித ஒழுக்கம் வராமல் இதையெல்லாம் திருத்தவே முடியாது. விருது தேர்வுக் குழுவுல ஜூரியா, சேர்மனா இருந்திருக்கேன். தமிழ்நாட்டுல படம் பார்த்து டெல்லிக்கு அனுப்புறோம். அங்கே படம் பார்க்கிற குழுவுல கட்சி சார்புள்ளவர்கள் நாலு பேர், அவங்க நியமிக்கும் எழுத்தாளர்கள் மூணு பேர், சினிமாக்காரர்கள் ரெண்டு பேர்னு மொத்தம் ஒன்பது பேர் இருப்பாங்க. கேட்டா அரசின் பிரதிநிதினு சொல்வாங்க. நியாயமா, சினிமா தெரிஞ்ச அந்த ரெண்டு பேர் மட்டும்தான் எது நல்ல சினிமான்னு ஜட்ஜ் பண்ண முடியும். ஆனால், மொத்தமுள்ள ஒன்பது பேரில் அந்த ரெண்டு பேர் மைனாரிட்டி. அப்ப நல்லது கெட்டதை தீர்மானிப்பது அந்த மெஜாரிட்டி ஆள்கள்தான். அதனால் அந்தந்த நேரம் தீர்மானிக்கும் விருதுகளைப் பற்றி நான் பெருசா எடுத்துக்கிறது இல்லை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

"வேஷம் போட்டவரை தேவதூதனாகப் பார்ப்பதுதான் அவலம்!”

நீங்க ‘முதல் மரியாதை’க்கு விருது கொடுக்குறீங்களோ இல்லையோ, மக்கள் அதை இன்னமும் பேசிட்டிருக்காங்கள்ல? அதுதான் எனக்கான விருது. ‘16 வயதினிலே’வுக்கு நீங்க விருது கொடுக்கலை. ‘அக்ரஹாரத்தில் கழுதை’ங்கிற ஒரு கழுதைப் படத்துக்கு கொடுத்தீங்க. ஏன்னா இன்ஃப்ளூயன்ஸ். ஆனா, இன்னிக்கும் ‘16 வயதினிலே’ படத்தைப் பற்றி மக்கள் பேசுறாங்க. நீங்க அவார்டு கொடுத்த ‘அக்ரஹாரத்தில் கழுதை’யைப் பற்றி ஒரு பய பேசுறானா? அதுதான் எனக்கான விருது. விருதுங்கிறது அந்தந்த நேர கைத்தட்டலால் கிடைக்கிற சுகம். அதைத் தலையில ஏத்திக்காம இந்தக் காதுல வாங்கி அந்தக் காதுல விட்டுட்டு உன் தொழில்ல கவனம் செலுத்திட்டுப் போயிட்டே இருக்கணும்.’’

‘‘ஆனால் கலைஞர்களை ஊக்குவிப்பது அரசின் முக்கியமான கடமைதானே?’’

‘‘நேற்றைய பெருமைக்குரியவன் இன்னிக்கு இல்லை. பாலசந்தரை மறந்துட்டீங்கள்ல. பாலுமகேந்திராங்கிற அற்புதமான கேமராக் கவிஞனுக்கு என்ன பண்ணீட்டீங்க? இவங்களுக்கு நீங்க சிலை எடுத்துட்டீங்களா, விழா நடத்திட்டீங்களா? ஒண்ணும் கிடையாது. அவங்களை அரசு அங்கீகரிக்கணும் சார்.

கர்நாடகாவுல ராஜ்குமாரை அந்த அரசு அங்கீகரிச்சது. என் குரு புட்டண்ணா கனகலை அங்கே அங்கீகரிச்சாங்க. இத்தனைக்கும் தமிழ்நாடு, சினிமாக்காரர்களால் ஆளப்பட்ட மாநிலம். ஆனால், சினிமாக்காரர்களை மதிக்க மாட்டாங்க. அவங்களுக்கு எப்ப தேவையோ அப்ப மட்டும் நாங்க பக்கத்துல வரணும். ஏன்னா, ‘நான் வளர்ந்த பூமியிலேயே இவனும் வந்திருக்கான். நான் வளர்ந்த மாதிரி இவனும் வளர்ந்திடக் கூடாது’னு நினைப்பாங்க. ஏன்னா, சினிமா விளம்பரப்படுத்தப்பட்ட மிகப்பெரிய மீடியா. அதுல தேவதூதன் வேஷம் போட்டா அவன் தேவதூதனாவே ஆகிடுறான். ஒரு குழந்தை நடிக்க வந்தால்கூட மீடியாவும், ‘பாப்பா, நீ எங்கே படித்தாய்?’னு நாலஞ்சு கேள்விகள் கேட்டுட்டு, ‘நீ எப்பம்மா அரசியலுக்கு வர்றே?’னு கேட்குது. அப்படி ஒருத்தன் ‘வர்றேன்’னு சொன்னா, ‘என்ன தகுதி இருக்கு?’னு நீங்க ஏன் கேட்க மாட்றீங்க?’’

‘‘நீங்க ரஜினியின் அரசியல் அறிவிப்பைப் பற்றிச் சொல்றீங்கனு நினைக்கிறேன்?’’

‘‘ ‘பாரதிராஜா, ஏன் நாட்டை ஆளக் கூடாது; அரசியலுக்கு வரக் கூடாது?’னு கேட்டீங்கன்னா, எனக்கு என்ன தகுதி இருக்கு? ‘படங்கள் எடுத்தார், நல்லா பேசுவார். `என் இனிய தமிழ் மக்களே..!’னு சொல்வார். மற்றபடி ‘வாட் ஹி நோ அபெவுட் த கன்ட்ரி, ஜியோகிராஃபி? இந்த நாட்டின் பொருளாதாரம் தெரியுமா? எவ்வளவு அணைகள் கட்டியிருக்காங்கனு தெரியுமா? நீர்ப்பாசனம் தெரியுமா? விளைச்சல் பற்றித் தெரியுமா? முல்லைப்பெரியாறு மூலம் எவ்வளவு நிலம் பாசனம் பெறுதுனு தெரியுமா?  இதெல்லாம் தெரியாம ‘தையல் மெஷின் கொடுத்தேன், பெல்ட் கொடுத்தேன், கண்ணாடி போட்டுவிட்டேன்’னு சொல்றவங்ககிட்ட போய் ‘அரசியலுக்கு வரலாம்’னு சொல்றீங்க. மீடியாவுக்கு ஒரு தர்மம் வேணும். ‘இந்தச் சமூகத்துக்கு என்ன பண்ணீங்க?’னு அவங்ககிட்ட நீங்க கேட்கணும். ‘நான் அந்த ஊர்ல பஞ்சாயத்து போர்டு தலைவரா இருக்கும்போது இது பண்ணியிருக்கேன். பிறகு கவுன்சிலரா இருக்கும்போது அதைப் பண்ணியிருக்கேன்’னு சொல்ல உன்கிட்ட வரலாறு இருக்கா? அநீதியை எதிர்த்துக் கேட்கிற மாதிரி சினிமாவுல யாரோ எழுதிய வசனத்தைப் பேசினால் போதுமா, அது உன் கருத்தா? இப்படித்தான் கண்ணதாசன், பட்டுக்கோட்டையார் பாடல்களை வாய்மொழியா சொல்லி, ஒருத்தர் தலைவராகி நாட்டை ஆண்டார்.’’

‘‘எம்.ஜி.ஆர் அப்படி அரசியலுக்கு வந்திருந்தாலும் அவர் திறம்படத்தானே ஆட்சி செய்தார்?’’

‘‘யார் வந்தாலும் பத்து ஐ.ஏ.எஸ் இருக்கப்போறாங்க. அவங்க, இந்த நாட்டினுடைய நிர்வாகத்தைப் படிச்சுட்டு வந்தவங்க. அவங்க உங்க முன்னாடி திட்டங்களைக் கடை விரிப்பாங்க. அதுல, ‘இது நல்லா இருக்கு. இதை வெச்சுக்கலாம். அது வேணாம்’னு சொல்லப்போறீங்க. எம்.ஜி.ஆரைப் பற்றிச் சொல்றேன்னு தப்பா எடுத்துக்காதீங்க. அவர்,  தனிப்பட்ட முறையில் நல்ல நண்பர். என்னைத் தூக்கிவெச்சுக் கொண்டாடியவர்; அரசியலுக்கு வந்த பிறகே நிர்வாகம் கத்துக்கிட்டார்; பிழையில்லாமல் ஆட்சி செய்தார். ஆனால், அதை மட்டுமே முன்னுதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது.’’

"வேஷம் போட்டவரை தேவதூதனாகப் பார்ப்பதுதான் அவலம்!”

‘‘எம்.ஜி.ஆர் ஆட்சிக்கு வந்தபிறகு கற்றுக்கொண்ட மாதிரி ரஜினி கற்றுக்கொள்ள முடியாதா?”

‘‘ரஜினி, என் மிகப்பெரிய நண்பன்; அற்புதமான மனிதன்; நல் இதயம் கொண்டவன்; யாரையும் நோகடிக்க மாட்டான்; பேராசை இல்லாதவன்; ஆன்மிகவாதி. ஆனால், இருப்பதை விட்டுக்கொடுக்க மாட்டான். உழைச்சு சம்பாதிச்சதை விட மாட்டான். வீண் விரயம் செய்ய மாட்டான். பேசிக்கலி ஹி இஸ் வெரிகுட் ஹ்யூமன் பீயிங். வெரிகுட் மேன்.  சின்னக் குழந்தையைக்கூட மரியாதையோடு நடத்துவான்.
கிழவன் முதல் சின்னப்பசங்க வரை அவரை விரும்புறாங்க. சம்திங் ஹி ஹேஸ் காட். ஆன்மிகத்தின் உச்சம். நான் அவர் கிட்டயே, ‘நல்ல பாதம் உன்னுடையது. புல்வெளியில் நடந்திருக்க. பூக்களின் தோட்டங்களில் இருந்திருக்க. மக்கள் வெள்ளத்தில் மிதந்து வந்திருக்க. அப்படிப்பட்ட நீ ஏன் இந்த சாக்கடைக்குள்ள காலை விடணும்னு நினைக்கிற?’னு கேட்கப்போறேன்.

இதுல நுழைஞ்சுட்டாலே எந்த நல்ல மனிதனும் வேறு வழியில்லாமல் கெட்டுப்போவான். ஏன்னா, கட்சியைக் கைக்காசு போட்டு நடத்த முடியாது. அரசியல் பண்ணணும்னா கைநீட்டிக் காசு வாங்கியே ஆகணும். அங்கேதான் ஊழல் ஆரம்பிக்கும். ஒவ்வொருத்தனுக்கும் ஒருமாதிரி நடிக்கக்கூடிய அந்தப் போலித்தனமான வாழ்க்கை உனக்குத் தேவையா? அவர் வந்தால் வரட்டும். ஆனால், அந்த நல் இதயம் கெட்டுப்போய்விடுமே எனப் பயப்படுறேன்.’’

‘‘ ‘பெரியார், கருணாநிதி, வைகோ இவங்க யாரும் தமிழர் இல்லை’னு சொல்றார் சீமான். ‘காமராஜருக்குப் பிறகு தமிழர் யாரும் வரவில்லை’னு நீங்களும் சொல்றீங்க. இதுல சீமானுடன் உடன்படுறீங்கன்னு சொல்லலாமா?’’

‘‘வீரமா முனிவர், கால்டுவெல் ஐயா... மதம் பரப்ப வந்தவர்கள். ‘இந்த மொழியைக் கற்றுக்கொள்ளவில்லை என்றால், மதம் பரப்ப முடியாது’ங்கிற காரணத்துக்காகத் தமிழைக் கத்துக்கிட்டாங்க. அதே சமயம் இந்த மொழிக்கு விசுவாசமா இருந்தாங்க. தே லவ்டு திஸ் லாங்வேஜ். தே ஆர் ஸ்காலர்ஸ் இன் தமிழ். ஆனால், அவர்கள் தமிழர்களா?

நான் சென்னையில் 60 ஆண்டுகாலம் வசிக்கிறேன். 18 ஆண்டுகள்தான் தேனி அல்லிநகரத்தில் இருந்தேன். இப்ப நான் அல்லிநகரத்துக்காரனா, சென்னைக்காரனா? 18 ஆண்டுகள்தான் என்றாலும் நான் அல்லி நகரத்துக்காரன்தானே. காமராஜர் காலத்துல ‘கூத்தாடிகள் நாடாள முடியுமா?’னு ஒரு வார்த்தை சொன்னதற்கு கோபப்பட்டு, ‘ஆட்சியைப் பிடிக்கணும்’னு அண்ணாவும் கலைஞரும் வந்தாங்க. அதை முன்னுதாரணமா எடுத்துக்க முடியாது. கலைஞர், இஸ் எ நைஸ் மேன். அவரை ஏத்துக்கிட்டோம். அதுக்குப் பிறகும் அப்படியே போயிட்டே இருந்தால் அடையாளம் தொலைத்துவிடுவான் தமிழன். ஆமாம், சீமான் சொல்வதில் தவறே கிடையாது.’’

‘‘ `தமிழ் உணர்வுள்ள அனைவருமே தமிழன்தான்’ இது கமல். ‘50 வருஷங்களுக்கும்மேல தமிழ்நாட்லதான் இருக்கேன். நான் பச்சைத் தமிழன்’ இது ரஜினி. இவர்கள் அரசியலுக்கு வரக் கூடாதுனு சொல்வது எந்த வகையில் நியாயம்?’’

‘‘அரசியலுக்கு வருவது நியாயம் இல்லைனு நான் சொல்லலை. ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். ஆனால், தலைமைப்பொறுப்பில் தமிழன்தான் இருக்கணும். `ஒட்டுமொத்த இந்தியாவையும் மத்திய அரசு ஆளுது’னு சொல்றீங்க. அப்படின்னா உங்களால் காவிரியை இங்கே விட முடியலையே ஏன்? இதைக் கேட்ட சத்யராஜ் கொடும்பாவியை எரிக்கிறீங்க? தேசியம் பேசும் நீங்க, முதல்ல இதை அடக்குங்க; மாநிலங்களுக்குள்ளான வித்தியாசங்களைத் தூக்கி எறிங்க; எல்லாரும் ஒண்ணுதான்னு நிரூபிச்சிக்காட்டுங்க; எந்த மொழி எந்தக் கலாசாரமா இருந்தாலும் இந்தியா, இந்தியன்னு முதல்ல நிரூபிங்க. பிறகு, நீங்க சொல்றதை நாங்க கேட்கிறோம். எல்லாப் பயலும் ரோஷமா எழுந்திரிப்பான். தமிழன் எழுந்திரிச்சா மட்டும் தட்டுவீங்களா?’’

"வேஷம் போட்டவரை தேவதூதனாகப் பார்ப்பதுதான் அவலம்!”

‘‘உங்க டைரக்‌ஷன்ல அடுத்த படத்தை எப்ப எதிர்பார்க்கலாம்?’’

‘‘ ‘ஓம்’. இது நான் நடிச்சிருக்கிற படம். சில காரணங்களால் அது தடைபட்டுச்சு. அதனுடைய இறுதிக்கட்டக் காட்சிகளை முடிக்க, வரும் 15-ம் தேதியிலிருந்து பத்து நாள் ஐரோப்பா போறோம். அடுத்து என் டைரக்‌ஷன்ல ரெண்டு படங்களுக்கான வேலைகள் தொடங்கியிருக்கேன். ஆயிரம் ரூபாய் நோட்டு செல்லாதுனு அறிவிச்சதை அடிப்படையா வெச்சு ஒரு படம். பாதி படம் ஷூட் பண்ணிட்டேன். இன்னொண்ணு லவ் சப்ஜெக்ட். அதைப் பத்து நாள்கள் ஷூட் பண்ணி வெச்சிருக்கேன். இந்த மூணுதான் என் புராஜெக்ட். இது இல்லாம ‘குரங்கு பொம்மை’, ‘படைவீரன்’னு நான் நடிச்ச படங்கள் ரிலீஸுக்குத் தயார்.’’

‘‘இயக்குநர் பாலாவுக்கும் உங்களுக்குமான கருத்துவேறுபாடு எதில் தொடங்கிச்சு?’’

‘‘அது மிஸ் கம்யூனிகேஷன்ல வந்த கருத்துவேறுபாடு. ஆனால் அன்னிக்கும் இன்னிக்கும் என்னிக்கும் ஐ லவ் பாலா. அவன் என் புள்ளைமாதிரி. பாலா, சச் எ கிரேட் ஃபெலோ. அவன் ஒரு நல்ல கலைஞன். நான் பண்ணினது தப்பா இருக்கலாம். அவன் பண்ணினது தப்பா இருக்கலாம். யோசிச்சுப்பார்த்தால் அவனும் தப்பா தெரியலை. நானும் தப்பா தெரியலை. அவனும் ரியலைஸ் பண்ணியிருப்பான். நானும் ரியலைஸ் பண்ணினேன். அந்தத் தருணத்தில்தான் நாங்கள் நேரில் சந்திச்சுப் பேசிக்கிட்டோம்.

அது ஈரம் கசியற மாதிரியான சந்திப்பு. நெஞ்சுல இருந்து ஈரம் கசிந்தால் எப்படி இருக்குமோ, அந்த மாதிரி இருந்துச்சு. ஐ லவ் ஹிம். ஹி லவ்ஸ் மீ. அவ்வளவுதான். ஒருநாள் உங்க எல்லாரையும் கூப்பிட்டு உட்காரவெச்சு, நாங்க ரெண்டு பேருமே பேசுவோம். நிச்சயம் சேர்ந்து பேசுவோம்.’’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism