Published:Updated:

ஒரு கிடாயின் கருணை மனு - சினிமா விமரசனம்

ஒரு கிடாயின் கருணை மனு - சினிமா விமரசனம்
பிரீமியம் ஸ்டோரி
ஒரு கிடாயின் கருணை மனு - சினிமா விமரசனம்

ஒரு கிடாயின் கருணை மனு - சினிமா விமரசனம்

ஒரு கிடாயின் கருணை மனு - சினிமா விமரசனம்

ஒரு கிடாயின் கருணை மனு - சினிமா விமரசனம்

Published:Updated:
ஒரு கிடாயின் கருணை மனு - சினிமா விமரசனம்
பிரீமியம் ஸ்டோரி
ஒரு கிடாயின் கருணை மனு - சினிமா விமரசனம்

ரு கிராமமே சேர்ந்து செய்யும் குற்றமும் குளறுபடிகளும்தான் ‘ஒரு கிடாயின் கருணை மனு’.

போலியான கிராமத்தைக் காட்டி எரிச்ச லாக்காமல், விருதுப்படம் எனும்  வேடம் தரிக்காமல், மிகமிக இயல்பாக மனிதர்களை உலவவிட்டு அதகளப்படுத்தியிருக்கிறார் அறிமுக இயக்குநர் சுரேஷ் சங்கையா.

35 வயதுவரை திருமணம் நடக்காமல், பாட்டியின் வேண்டுதலுக்குப் பிறகு விதார்த்துக்குத் திருமணம் நடக்கிறது. வேண்டுதலை நிறைவேற்ற முனியாண்டி சாமிக்கு கிடாய் வெட்டி நேர்த்திக்கடன் கொடுக்க, ஒரு லாரியில் கிளம்புகிறது விதார்த்தின் கிராமம். செல்லும்வழியில் எதிர்பாராமல் ஒரு  `சம்பவம்’ நடந்துவிட, கோயிலுக்குப் பக்கத்திலேயே இருந்தாலும் குலசாமிக்கு நேர்த்திக்கடனை நிறைவேற்ற முடியாமல் தவிக்கிறார்கள். அப்படி என்ன ‘சம்பவம்’ நடந்தது, எப்படி அதை எதிர்கொள்கிறார்கள் என்பதே ஒ.கி.க.ம.

வேல்முருகனின்`கொலைச்சிந்து’ பாடலோடு படம் தொடங்குவது, கிடாயின் பார்வையிலேயே தொடக்கக்காட்சிகள் விரிவது என ஆரம்பத்திலேயே நிமிர்ந்து உட்கார வைக்கிறார் இயக்குநர்.  கொண்டி, ஏழரை, அரும்பாடுபட்டு, வக்கீல் மாமா என்று விதவிதமான பட்டப்பெயர்களுடன் திரியும் யதார்த்தமான கிராமத்து மனிதர்களைச் சித்தரித்த விதத்தில் நாமே ஒரு கிராமத்துக்குச் சென்று சிலமணி நேரங்கள் வாழ்ந்துவிட்ட திருப்தி.

ஒரு கிடாயின் கருணை மனு - சினிமா விமரசனம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அந்தச் ‘சம்பவத்திற்கு’ப் பிறகு ஐந்தாவது கியருக்கு மாறும் படம், க்ளைமாக்ஸ் வரைக்கும் விறுவிறுப்பு குறையாமல் சீறிப்பாய்கிறது. கிராமத்துக் கதையை அந்த மனிதர்களுக்கே உரிய நக்கல் நையாண்டிகளோடு படைத்திருக்கும் இயக்குநர் சுரேஷ் சங்கையாவுக்கு அழுத்தமான கைகுலுக்கல்கள்.

கல்யாணம் ஆனபிறகு மனைவியுடன் நெருங்க முடியாமல் தவிப்பது, சிக்கலில் மாட்டிக்கொண்டு குற்றஉணர்வில் துடிப்பது, செய்த குற்றத்தை இறுதியில் ஒப்புக்கொண்டு மன்றாடுவது என ‘ராமமூர்த்தி’யாகவே மாறியிருக்கிறார் விதார்த். அத்தனை பிரச்னைகளுக்கு மத்தியிலும் ‘`எனக்கு 35 வயசுன்னு யார்டா சொன்னது?” என்று விதார்த் எகிறுவது சோக கலாட்டா. நாயகியாக ரவீணா ரவி. கணவனுடன் தனிமையைப் பகிர்ந்துகொள்ள முடியாத ஏக்கமும், இத்தனை சிக்கலுக்கும் அவரே காரணம் என்கிற பரிதவிப்புமாக கனமான கதாபாத்திரம். முடிந்தவரை முயற்சித்திருக்கிறார்.

சமையல்காரர் சேவலாக வரும் சித்தன் மோகன், கவிஞர் விக்ரமாதித்யன், ஜெயராஜ், வக்கீலாக வரும் ஜார்ஜ், சமையல் கான்ட்ராக்ட்டுக்குக் கிளம்பி வரும் ராஜா, கொண்டியாக வயது வித்தியாசம் இல்லாமல் எல்லோரையும் வறுத் தெடுக்கும் ஆறுபாலா, “அரும்பாடுபட்டு அடக்கம் பண்ணணும்பா” என்று எல்லா வாக்கியங்களுடன் ‘அரும்பாடு’ சேர்த்துப் பேசும் ஹலோ கந்தசாமி, கசாப்புக் கடைக்காரர், முனகிக்கொண்டே திரியும் அந்த லாரி ஓனர் என்று ஒவ்வொருவரும் நடிகர்களாக இல்லாமல் அசல் மனிதர்களாகவே நினைவில் நிற்கிறார்கள்.

ஒரு கிடாயின் கருணை மனு - சினிமா விமரசனம்

இவ்வளவு இயல்பான, சரளமான, நக்கலான கிராமத்து வசனங்களை தமிழ் சினிமாவில் சமீபத்தில் கேட்டதாக நினைவில்லை. சினிமாத்தனமாக இல்லாமல் இயல்பாக விழுந்து கொண்டே இருக்கும் வசனங்களால் தியேட்டர் அதிர்ந்து கொண்டேயிருக்கிறது. “இவன் என்ன உப்புமாக்கு கத்திரிக்கா கேக்குறான்”, “கொன்னவனுக்கு நாலு மிதின்னா, நின்னவனுக்கு ரெண்டு மிதி விழத்தான் செய்யும்” என்று  காட்சிக்கு காட்சி  வசனங்களில் ஸ்கோர் பண்ணுகிறார்கள் குருநாதனும் சுரேஷ் சங்கையாவும். ரகுராமின் அந்த டைட்டில் பாடலும், பின்னணி இசையும் நிறைவு. ஒரு பறவையைப்போல பொட்டல்காட்டை பறந்து பறந்து படம் பிடித்திருக்கும் ஆர்.வி.சரணின் கேமரா பக்குவமாக கதைக்கான பதட்டத்தைக் கூட்டுகிறது.

ஒரு கிடாயின் கருணை மனு - சினிமா விமரசனம்

  

கிராமத்து மனிதர்களை இத்தனை அறமற்றவர்களாக, அறிவற்றவர்களாகவும் காட்டியிருப்பது பெரிய நெருடல். இத்தகைய சூழல்களில் நகரத்து மனிதர்களைவிடவும் கிராமத்துப் பெரியவர்கள் சிறப்பாகவும் அதே சமயம் மனிதாபிமானத்தோடும், மாண்போடும் தடாலடியாவும் செயல்படக்கூடியவர்கள்.  கூடவே அத்தனை பெண்களையும் குழந்தை களையும் வைத்துக்கொண்டு இப்படியெல்லாம் யாரும் நடந்துகொள்வார்களா என்கிற கேள்வியும் எழுகிறது. அதனாலேயே திரைக்கதை உருவாக்க வேண்டிய நம்பகத்தன்மை, உரிய அளவில் திரள மறுக்கிறது. அப்படி ஒரு விஷயத்தைச் செய்துவிட்டு எல்லோரும் கூட்டாக உட்கார்ந்து உப்புமா கிண்டி தின்பது, இரவில் உறங்குவது, லாரி ஓனரிடம் எகிறுவது என நம்பகத்தன்மை அற்ற காட்சிகள் சில.

ஆட்டை அவிழ்த்துவிடுவதுடன் படத்தை முடித்திருந்தால் கவிதையாக இருந்திருக்கும்!

- விகடன் விமர்சனக் குழு

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism