Published:Updated:

“தனுஷும் நானும் அப்கிரேட் ஆகிட்டோம்!”

“தனுஷும் நானும் அப்கிரேட் ஆகிட்டோம்!”
பிரீமியம் ஸ்டோரி
“தனுஷும் நானும் அப்கிரேட் ஆகிட்டோம்!”

ம.கா.செந்தில்குமார்

“தனுஷும் நானும் அப்கிரேட் ஆகிட்டோம்!”

ம.கா.செந்தில்குமார்

Published:Updated:
“தனுஷும் நானும் அப்கிரேட் ஆகிட்டோம்!”
பிரீமியம் ஸ்டோரி
“தனுஷும் நானும் அப்கிரேட் ஆகிட்டோம்!”

‘‘எப்பவுமே நம்ம சமூகத்துக்குப் பெண்கள்தான் இலக்கு. அது, காதலன்-காதலி பிரிவு, விவாகரத்துனு எதுவா இருந்தாலும் ‘பெண்ணின் தவறுதான்’னு சொல்லிடுவாங்க. இரண்டு தரப்பு சம்பந்தப்பட்ட விஷயத்தில் எப்படி ஒரு தரப்பை மட்டும் குற்றம் சொல்ல முடியும்? அதனால் என்னைக் குற்றம்சாட்டி வந்த எந்தச் செய்திக்கும் நான் பதில் கொடுக்கலை. ஆனால், ‘இப்படியெல்லாம் எழுதுறாங்களே’னு அந்தச் சமயம் வருத்தமா இருந்துச்சு.’’ ஆதங்கத்துடன் பேசுகிறார் அமலாபால். பெர்சனல் பிரச்னைகளை எல்லாம் கடந்து மீண்டும் ‘விஐபி-2’,  ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’, `மின்மினி’ என அடுத்தடுத்து பல படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார்.

‘‘மீண்டும் நிறையப் படங்கள்ல நடிக்க ஆரம்பிச்சிட்டீங்களே?’’

‘‘ஆமாம். சினிமாவில் இருக்கிறதால என்னைச் செய்தியாக்குறாங்க. மிகைப்படுத்திப் பேசுறாங்க. ஆனால், நான் ப்ரொஃபஷனல். என் வேலையில் சின்சியரா இருக்கேன். என் லைஃப்ல என்னென்ன விஷயங்கள் பண்ணணும், என்ன பண்ணக் கூடாதுங்குற தெளிவு எனக்கு இருக்கு. அப்படியான தெளிவோடத்தான் நான் சினிமா பண்ணிட்டு இருக்கேன். ஆமாம் இப்போதைக்கு சினிமா... சினிமா... சினிமா மட்டும்தான்...’’

‘‘இயக்குநர் விஜய் உடனான நட்பு தொடருதா?’’

‘‘ஆமாம், ஏன் நட்பு இருக்கக் கூடாதா? இப்போ பிரேக்அப் ஆகிட்டாலும் அவர் என் வாழ்க்கையில முக்கியமான அங்கமா இருந்தவர். இருவரும் சேர்ந்து பயணப்பட்டுருக்கோம். அவர்கூட இருந்திருக்கேன். அந்தச் சமயத்தில் அவருடன் நிறைய விஷயங்களை ஷேர் பண்ணியிருக்கேன். பிரிஞ்சிட்டாலும் அந்த நினைவுகள் இப்பவும் இருக்கு. அதையெல்லாம் நாம வெளியில் எடுத்து வைக்க முடியாதே?’’

“தனுஷும் நானும் அப்கிரேட் ஆகிட்டோம்!”

‘‘உங்களுடைய விவாகரத்துக்குக் காரணம் தனுஷ்தான் என்று பரவிய செய்திகளை எப்படி எடுத்துக்கிட்டீங்க?’’

‘‘அது என்னைப் பெருசா பாதிக்கலை. ஏன்னா அப்படி ஒண்ணுமே இல்லைனு எனக்கும் தெரியும். விஜய், தனுஷுக்கும் தெரியும். நாங்க மூவருமே நல்ல நண்பர்கள். ஆனால், இதையெல்லாம் கவனிச்சிட்டு இருந்தோம்னா வாழ்க்கையில் முன்னேறவே முடியாது.’’

‘‘சுசித்ரா விவகாரத்தில்கூட... ‘அடுத்து அமலாபால் வீடியோ’னு அவங்க பேர்கொண்ட ட்விட்டர் ஐ.டி-யில் இருந்து ட்வீட் பண்ணியிருந்தாங்களே?’’

‘‘எனக்கு என்ன கஷ்டமாயிடுச்சுன்னா, ‘ஞாயிற்றுக்கிழமை அமலாபால் வீடியோ’னு சொன்னாங்க. ‘சரி அப்படி என்ன வீடியோதான் வருது. பார்க்கலாம்’னு நானும் எதிர்பார்த்துட்டு இருந்தேன். ஆனால் ஞாயிற்றுக்கிழமை காலைல அவங்க அக்கவுன்ட்டை டிஆக்டிவேட் பண்ணிட்டாங்க. ‘ஐயய்யோ... என் வீடியோவைப் பார்க்க முடியலையே’னு எனக்கு ரொம்ப வருத்தமா இருந்துச்சு. (சிரிக்கிறார்).’’

``மலையாள ‘பாஸ்கர் தி ராஸ்கல்’ தமிழில் ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ ஆகிறது. அங்கு நயன்தாரா நடிச்ச கேரக்டரில் நீங்க தமிழில் நடிக்கிறீங்க. அனுபவம் எப்படி இருக்கிறது?’’

‘‘டைரக்டர் சித்திக் சாரின் படங்கள் ரொம்பப் பிடிக்கும். ஹியூமர், ஃபேமிலி சென்டிமென்ட்னு நம்ம வீட்ல நடக்கிற மாதிரி அவ்வளவு இயல்பான படமா இருக்கும். படத்தின் ஹீரோ அரவிந்த் சுவாமியை ஷூட்டிங் ஸ்பாட்லதான் முதன்முதல்ல சந்திச்சேன். செட்ல அவர் வழக்கமான ஒரு நடிகர் மாதிரி கிடையாது. சினிமா மட்டுமல்லாமல் நிறைய விஷயங்கள் பேசுவோம். `பம்பாய்’ படத்தின் ‘உயிரே...’ பாட்டுல அவரோட எக்ஸ்பிரஷன்ஸ் அப்படி இருக்கும். ‘நீங்க இந்த மாதிரி உண்மையாவே யாரையாவது லவ் பண்ணியிருக்கீங்களா’னு கேட்டேன். சிரிச்சார். இந்தப் படத்தில் நடிக்கிறது உண்மையிலேயே எனக்கு நல்ல அனுபவம்.’’

‘‘மறுபடியும் விஐபி ஃபேமிலியில் சேர்ந்திருக்கீங்க. ‘விஐபி-2’ எப்படிப் போகுது... கூடுதலா கஜோலும்  சேர்ந்திருக்காங்களே...’’

‘‘முதல்பாகத்தில் நான் தனுஷின் காதலினா இதில் அவரின் மனைவி. ஆமாம், நாங்க அப்கிரேட் ஆகிட்டோம். கஜோல்கிட்ட பிடிச்சதே அவங்களோட எனர்ஜி லெவல்தான். பெரிய நடிகைங்கிற பந்தா இல்லாம ஜாலியா சத்தமா பேசிட்டு இருப்பாங்க. ‘விஐபி-2’க்கு அவங்க பெரிய பலம். அவங்ககிட்ட நிறைய கத்துக்கிட்டேன்.’’

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism