Published:Updated:

குழந்தைவேலுவும் கல்யாணமும்!

குழந்தைவேலுவும் கல்யாணமும்!
பிரீமியம் ஸ்டோரி
குழந்தைவேலுவும் கல்யாணமும்!

ம.கா.செந்தில்குமார்

குழந்தைவேலுவும் கல்யாணமும்!

ம.கா.செந்தில்குமார்

Published:Updated:
குழந்தைவேலுவும் கல்யாணமும்!
பிரீமியம் ஸ்டோரி
குழந்தைவேலுவும் கல்யாணமும்!

‘‘பாண்டிராஜ் சார் இல்லைனா அன்னைக்கு நான் அசிஸ்டென்ட் டைரக்டரும் கிடையாது. இன்னைக்கு

குழந்தைவேலுவும் கல்யாணமும்!

டைரக்டராவும் ஆகியிருக்க முடியாது. ஆமாம், அவரின் அசிஸ்டென்டான நான் அவரின் தயாரிப்பிலேயே படம் பண்றேன். பட பூஜை அன்னைக்குத் திருச்சிக்கு வந்தவர், ‘எல்லாம் அவன் பார்த்துப்பான்’னு சொல்லிட்டுச் சென்னை திரும்பிவிட்டார். பிறகு ஒருநாள்கூட ஷூட்டிங் நடந்த இடம் பக்கம் வரவே இல்லை.’’- நம்பிக்கையுடன் பேசுகிறார் இயக்குநர் வள்ளிகாந்த். ‘செம’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

‘‘காஞ்சிபுரம் பக்கத்துல செய்யாறு சொந்த ஊர். பி.இ படிக்கும்போதே விகடன் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டத்தில் இருந்தேன். சினிமா ஆர்வம். சென்னை வந்து உதவி இயக்குநராக முயற்சி. பிறகு நாளிதழ் ஒன்றில் கொஞ்சநாள் ரிப்போர்ட்டர் வேலை. தொடர்ந்து டெல்லியில் நான் படித்த இன்ஸ்ட்ருமென்டேஷன் தொடர்பான வேலை. பிறகு சென்னை இன்ஜினியரிங் கல்லூரி ஒன்றில் லெக்சரர். தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழகத்தில் எலக்ரானிக் மீடியா படிப்பு. பகுதிநேர ஆர்ஜே-னு நான் பார்த்த எல்லா வேலைகளும் சினிமாவுக்காகப் பண்ணினதுதான்.’’

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

குழந்தைவேலுவும் கல்யாணமும்!

‘‘ ‘செம’ படம் என்ன கதை?’’

‘‘கலகலப்பான கதை. என் ஃப்ரெண்ட் கல்யாணத்துல நடந்த ஒரு சம்பவத்தை மையமா வெச்சுப் பண்ணியிருக்கேன். கதைக்களம் திருச்சி. நாயகன் குழந்தைவேலு, மைக் பிடித்துப் பேசிக் காய்கறி வியாபாரம் செய்யும் இளைஞன். இந்த வேலையாலேயே கல்யாணத்துக்குப் பொண்ணு கிடைப்பதில் அவருக்குச் சிக்கல். ‘மூணு மாசத்துக்குள்ள கல்யாணம் பண்ணணும். இல்லைனா மூணு வருஷமானாலும் பொண்ணு கிடைக்காது’ என்பார் ஜோஸியர். கடைசியில் விடாப்பிடித் தேடலில் ஒரு பொண்ணு கிடைக்கும். அதிலும் ஒரு சிக்கல் வரும். அதைச் சமாளித்து அந்தப்பெண்ணைக் குழந்தைவேலு கரம் பிடித்தானா இல்லையா என்பதுதான் மீதிக்கதை. குழந்தைவேலுவாக ஜி.வி.பிரகாஷ், ‘தொண்டன்’ படத்தில் நடித்த அர்த்தனா ஹீரோயின்.’’

குழந்தைவேலுவும் கல்யாணமும்!

‘‘ஜி.வி.பிரகாஷ் கிட்டத்தட்ட ஒருடஜன் படங்களில் நடித்துக்கொண்டு இருக்கிறாரே?’’

‘‘ஆமாம். இளைஞர்கள்தான் அவரின் டார்கெட். அதனால் லேடீஸ் ஆடியன்ஸ் அவருக்குக் குறைவு. ஆனால் இந்தப்படம் அவரைப் பெண்கள் மத்தியிலும் கொண்டுபோய்ச் சேர்க்கும். எவ்வளவு அடிச்சாலும் தாங்குவார். மிகச்சிறந்த உழைப்பாளி. நைட் ஷூட் முடிச்சிட்டு அனுப்பினால் நேரா தன் ஸ்டுடியோவில் போய் உட்கார்ந்து மியூசிக் போட்டுட்டு இருப்பார்.’’

குழந்தைவேலுவும் கல்யாணமும்!

‘‘நீங்க அட்லி, சிவகார்த்திகேயனின் ஆரம்ப நாட்களில் அவர்களுடன் இருந்திருக்கீங்க. இப்போ எப்படி இருக்கு அந்த நட்பு?’’

‘‘அண்ணா யுனிவர்சிட்டியில படிக்கும்போதே அட்லி பழக்கம். அட்லி வீட்டில் நான், சூரிய பாலகுமாரன், ரெமோ டைரக்டர் பாக்கி எல்லாரும் அடிக்கடி கூடுவோம். ‘5இ’னு ஒரு லவ் ஸ்டோரியை டிஸ்கஸ் பண்ணிட்டு இருப்போம். பிறகு ஒரு குறும்படம் பண்ணுவோம்னு ‘முகப்புத்தகம்’ ஷார்ட் ஃபிலிம் டிஸ்கஷன் போச்சு. அதில் சிவகார்த்திகேயனை நடிக்க வைக்கலாம் என்பது அட்லியின் ஐடியா. அப்படித்தான் சிவா அதில் நடித்தார். பிறகு சாரதிங்கிற அட்லியின் ஃப்ரெண்ட் மூலமா சதிஷ் வந்தார். பிறகு நான் பாண்டிராஜ் சாரிடம் உதவி இயக்குநரா சேர்ந்தேன். ‘மெரினா’ பண்ணும்போது பாண்டிராஜ் சாரை ‘முகப்புத்தகம்’ ஷார்ட் ஃபிலிமைப் பார்க்கவைத்தேன். அப்படித்தான் சிவா ‘மெரினா’வுக்குள் வந்தார். ‘மெரினா’வில் சிவா கமிட் ஆனதும் அவர் சொன்ன வார்த்தைகள் இன்னமும் ஞாபகத்தில இருக்கு. ‘நீங்க மிகப்பெரிய விஷயம் பண்ணியிருக்கீங்க வள்ளி. அது உங்களுக்குப் போகப்போகத் தெரியும்’னார். ‘என்ன பிரதர் சொல்றீங்க’னேன். ‘பாருங்க’னார். இப்ப ‘பாரு... பாரு...’னு பார்க்கவெச்சுட்டு இருக்கார். தன் திறமையின் மீதுள்ள நம்பிக்கை, அந்த உழைப்புதான் சிவாவை இந்த உயரம் தொட வெச்சிருக்கு. ஆனாலும் இன்னைக்கும் அதே ‘முகப்புத்தக’ நட்புதான்.’’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism