Published:Updated:

ஜீவிதா பொண்ணு நான்!

ம.கா.செந்தில்குமார், படங்கள்: ஜி.வெங்கட்ராம்

பிரீமியம் ஸ்டோரி

‘‘அம்மா-அப்பா வழியில நானும் சினிமாவுக்கு வர்றேன். ‘தமிழ்த் தழைக்க வைக்கும்’னு அப்பா சொல்லுவார். நானும் அப்படித் தழைக்கணும்னு வாழ்த்துங்க’’ ஷிவானியின் தமிழ் அவ்வளவு அழகு. டாக்டர் ராஜசேகர்-ஜீவிதா தம்பதியின் மூத்த மகள் ஷிவானி நடிக்க வருகிறார். படிப்பில் அப்பாவைப் பின்பற்றி மருத்துவம் படிப்பவர், நடிப்பிலும் அவரைப் பின்பற்றி சினிமாவுக்கு வருகிறார்.

‘‘ ‘வால்டார்ஃப் மெத்தட் ஆஃப் டீச்சிங்’. இது, இங்கிலாந்தில் பின்பற்றப்படும் கல்வி முறை. இதில் டெஸ்ட், மார்க், ரேங்கிங்னு யாரையும் கம்மி பண்ணிப் பார்க்கிற எதுவும் இருக்காது. இதே மாதிரிக் கல்வி அமைப்போட இருந்து நான் படிச்ச ஸ்கூலை ஹைதராபாத்ல இருந்து ஊருக்கு வெளியில ரொம்ப தூரத்துக்கு இடம் மாற்றினாங்க. அவ்வளவு தூரம் போக முடியாதேனு நினைச்ச அப்பா, அதே கல்விமுறைகொண்ட ஸ்கூலை எங்களுக்காக சிட்டிக்கு நடுவுல ஆரம்பிச்சார். அதில்தான் நான் பள்ளிப்படிப்பை முடிச்சேன். பிறகு ஹைதராபாத் அப்போலோ மெடிக்கல் காலேஜில் மெடிசின் சேர்ந்தேன். இப்ப மூணாவது வருஷ கிளாஸ் ஆரம்பிக்கப்போகுது. அதோட என் சினிமா கரியரும் தொடங்கப்போகுது.’’

ஜீவிதா பொண்ணு நான்!

‘‘நடிக்கணும்னு முடிவு பண்ணிட்டீங்க. எப்படித் தயாரானீங்க?’’

‘‘சின்ன வயசுல இருந்தே கதக், குச்சுப்புடி கத்துக்கிட்டேன். தவிர கடவுள் புண்ணியத்தில் நானும் தங்கச்சியும் நல்லாப் பாடுவோம். படங்கள்லகூட பாடச்சொல்லி கேட்டாங்க. நடிப்பு, படிப்பு இரண்டுமே அப்பாவைப் பார்த்து வந்ததுதான். ஜீவிதா பொண்ணு நான். நடிப்பிலும் கலக்கிடுவேன்.’’

ஜீவிதா பொண்ணு நான்!

‘‘அப்பா-அம்மா என்ன சொல்றாங்க. அவங்க அனுபவத்தை உங்ககிட்ட பகிர்ந்துப்பாங்களா?’’

‘‘தமிழ், தெலுங்கு சினிமாவில் உள்ள பெரும்பாலானவங்களை எனக்கு பெர்சனலா தெரியும். அதுக்கு காரணம் அப்பா-அம்மாதான்.  வெளிநாடோ, உள்நாடோ அப்பாவோட ஷூட்டிங் எங்கே இருந்தாலும் எங்க எல்லாரையும் அழைச்சிட்டுப் போவார். பெரும்பாலான சினிமா நிகழ்ச்சிகளுக்கு ஃபேமிலியாதான் போவோம். இப்படி அடிக்கடி போய், ‘எல்லாருமே நம்ம ஆளுங்க’னு நினைக்கிறதால ஃபிலிம் இண்டஸ்ட்ரி மேல எங்களுக்கு எந்தப் பயமோ தயக்கமோ இல்லை. இப்பக்கூட இந்த போட்டோஷூட் முடிச்சதும், ‘இப்படி ஒரு ஐடியா இருக்கு’னு அம்மா சிலருக்கு என் போட்டோக்களை வாட்ஸ்அப் பண்ணினாங்க. எல்லாருமே ‘ஷிவானியை நான்தான் லான்ச் பண்ணுவேன்’னு சொன்னாங்க. இதில் எங்க ஃபேமிலி ஃப்ரெண்டான லிங்குசாமி சார், விஷால் சார்  உள்பட பலர் எங்களுக்கு ஆலோசனை சொல்றது பெருமையான விஷயம். இந்த அன்பு வட்டதுக்குக் காரணம் அம்மா-அப்பா எங்களுக்குத் தந்த சுதந்திரம்தான்.’’

ஜீவிதா பொண்ணு நான்!

‘‘தமிழ்ல பிடிச்ச நடிகர்கள், நடிகைகள்னா யாரைச் சொல்வீங்க?’’

‘‘எனக்கு விஜய் சேதுபதி படங்கள் ரொம்பப்பிடிக்கும். விஷால் ஹீரோயிக்கா தெரிவார். சிவகார்த்திகேயனின் ஃபன் பிடிக்கும். தனுஷ் ரொம்பப்பிடிச்ச நடிகர். ‘மூணு’ படம் பார்த்துட்டு அரைமணி நேரத்துக்கும்மேல தியேட்டர்ல அழுதுட்டே இருந்தேன். இப்ப உள்ள ஹீரோயின்ஸ்ல சமந்தா, தமன்னா, ஸ்ருதிஹாசனைப் பிடிக்கும்.’’

ஜீவிதா பொண்ணு நான்!

‘‘நடிப்பையும் படிப்பையும் எப்படி மேனேஜ் பண்ணுவீங்க?’’

‘‘ `டாக்டர்ங்கிறவன் கடவுளுக்கு நிகரானவன். நோபல் ப்ரொஃபஷன்’னு அப்பா சொல்வார். நான் கண்டிப்பா இதை விடமாட்டேன். மெடிக்கலையும் சினிமாவையும் மேனேஜ் பண்ணிடுவேன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு. அப்பா-அம்மாவும் நம்புறாங்க. நீங்களும் நம்புங்க.’’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு