பிரீமியம் ஸ்டோரி
ஜோக்ஸ் - 1

``பார் வேந்தே... எம்மைப் பார் வேந்தே’’

``உம்மைப் போன்ற புலவர்களைப் பார்த்துப் பார்த்துதான் சக்கரவர்த்தியாக இருந்த நான் இன்று குறுநில மன்னனாய் இருக்கிறேன்!”

- வி.சகிதாமுருகன்

ஜோக்ஸ் - 1

``தலைவர் இணைச்சுட்டார்!’’

``ரெண்டு அணிகளையுமா?’’

``ம்ஹூம்... பான் அண்ட் ஆதார்!’’

- அ.ரியாஸ்

ஜோக்ஸ் - 1

``தமிழ்நாட்டில் மழை வரவழைக்க, ஒரே ஒரு  வழிதான் இருக்கு!’’

``என்ன அது?’’

``சாம்பியன்ஸ் ட்ராஃபி மேட்ச்சை, தமிழ்நாட்டிலே நடத்தணும்!’’

- தே.ராஜாசிங் ஜெயக்குமார், தஞ்சாவூர்.

ஜோக்ஸ் - 1

``போனைப் பார்த்தே உன் மனைவி கோச்சுகிட்டு அம்மா வீட்டுக்குப் போயிட்டானு எப்படிச் சொல்ற?''

``குடும்ப வாட்ஸ்அப் குரூப்ல லெஃப்ட் ஆகிருக்கா.''

-அம்பை தேவா

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு