பிரீமியம் ஸ்டோரி

``ஒரு தனியார் மருத்துவமனையோட விழாவுக்கு `அறம் செய்து பழகு’னு டைட்டில் வெச்சிருந்தாங்க. ‘செய் அல்லது செத்து மடி’னு சொல்வாங்கல்ல... இந்த வார்த்தைகளில் இருந்த பவர் ‘அறம் செய்து பழகு’ங்கிற டைட்டிலுக்கும் இருந்துச்சு. ‘அட நல்லா இருக்கே?’னு நான் பயன்படுத்திக்கிட்டேன். இந்தச் சமூகத்துல அறம் இல்லைனா, நீங்களோ நானோ இருக்க முடியாது. சில நேரம் மறைவா இருக்கும், சில நேரம் வெளிச்சத்துக்கு வருமே தவிர, அறம் என்னைக்கும் சாகாது. சமீபத்துல நடந்த ஜல்லிக்கட்டுப் போராட்டத்தை இதுக்கு சிறந்த உதாரணமா சொல்லலாம். இந்தப் படமும் ஓர் அறம் சார்ந்த விஷயத்தை கமர்ஷியலா சொல்ற கதை!’’ - `மாவீரன் கிட்டு’வில் சாதிக்கு எதிரான குரலை அழுத்தமாகப் பதிவு செய்த இயக்குநர் சுசீந்திரன், அடுத்து அறம் பேச வருகிறார்.

"அறம் என்னைக்கும் சாகாது!”

‘’அறம் சார்ந்த விஷயத்திற்கு எப்படி கமர்ஷியல் வடிவம் கொடுத்திருக்கீங்க?”

‘`ஒரு மிடில் கிளாஸ் ஹீரோ. அவனைச் சுற்றி நடக்கிற சம்பவங்கள்தான் கதை. இங்கே பல பேர் நேர்மையா,

"அறம் என்னைக்கும் சாகாது!”

உண்மையா மத்தவங்களுக்கு நல்லது பண்ணணும்னு நினைக்கிறோம். அப்படி நல்லது பண்ண நினைக்கிற சிலரை, பல பேர் பண்ணவிடாம தடுக்கிறாங்க. இந்தத் தடைக்கு அரசியல் சூழல், சிஸ்டம் பிரச்னை, தனிப்பட்ட மனிதர்கள்னு பல காரணங்கள் இருக்கு. அப்படி நல்லது பண்ணணும்னு நினைக்கிற ஒருவன் என்ன மாதிரி தடைகளையெல்லாம் சந்திக்கிறான், அந்தத் தடைகளை எப்படியெல்லாம் கடக்கிறான், நல்லது நடந்ததா, இல்லையாங்கிற கதைக்கு ஆக்‌ஷன் முலாம் பூசியிருக்கேன்.’’

‘`எந்த சிச்சுவேஷன்ல இந்தக் கதையைப் பிடிச்சீங்க?”

‘`ஒரு நோயாளிக்கோ, ஸ்கூல் படிக்கிற பையனுக்கோ நான் உதவி பண்ணணும்னு நினைக்கிறேன்னு வெச்சுக்கோங்க. என்னால முடிஞ்ச பணத்தை ஒருத்தர் மூலமா அவங்களுக்குக் கொடுக்கிறேன். ஏன்னா, என்னால சம்பந்தப்பட்ட ஆள்களை நேரடியா பார்த்துக் கொடுக்கமுடியாத சூழல். என்னைப் பொறுத்தவரை நான் நல்லது பண்ணணும்னு நினைச்சேன், பண்ணிட்டேன். ஆனா, நான் பண்ண உதவி சம்பந்தப்பட்ட நோயாளிக்கோ, ஸ்கூல் ஃபீஸ் கட்ட முடியாத பையனுக்கோ போய்ச் சேர்ந்ததானு பார்த்தா... இல்லை. நல்லது நடக்கட்டும்னு கொடுக்கிற உதவிகள், நல்லது நடக்கணும்னு நினைக்கிற மனிதர்கள் மூலமாத்தான் போகணும். ஆனா, இங்கே அது பிரச்னையா இருக்கு. அதனாலேயே உண்மையாவே உதவி தேவைப்படுற ஆள்களுக்கு உதவ முடியாம, உதவி கேட்கிற ஆட்கள்மீது நம்பிக்கை இல்லாமப் போற சூழல் வருது, வந்தது. நல்ல கதையை ஏன் விடணும், விறுவிறுனு திரைக்கதை எழுதிட்டேன்.’’

‘`விக்ராந்த் - சந்தீப் கிஷன்னு ரெண்டு ஹீரோக்கள் ஏன்?”

‘`ரெண்டு பேருக்குமே சமமான கேரக்டர்ஸ். விக்ராந்த், சந்தீப் கிஷன், சூரி, அப்புக்குட்டி... படத்துல இருக்கிற எல்லோருமே ஒரே ஏரியாவில் இருக்கும் நண்பர்கள். ‘பாண்டியநாடு’க்குப் பிறகு விக்ராந்த் இந்தப் படத்துல இன்னும் அதிகம் உழைச்சிருக்கார். ‘மாநகரம்’, ‘மாயவன்’ படங்களுக்குப் பிறகு சந்தீப் இந்தப் படத்துல நடிச்சிருக்கார். படத்துல எல்லோரும் மிடில் கிளாஸ். காலேஜ்ல ஒண்ணா படிச்ச பசங்க. ஒரு கேட்டரிங் நடத்தி, ஐ.டி கம்பெனி, கல்லூரிகளுக்கு எல்லாம் சப்ளை பண்ணிக்கிட்டு இருப்பாங்க. இவங்க வாழ்க்கையில நடக்கிற சம்பவங்கள்தான் ‘அறம் செய்து பழகு’ படம்.’’

"அறம் என்னைக்கும் சாகாது!”

‘`ஹீரோயின் மெஹ்ரீன் பிர்ஜதா பற்றிச் சொல்லுங்க?”

‘` ‘கிருஷ்ணா காடி வீர பிரேம கதா’ங்கிற தெலுங்குப் படத்துல நானியோட நடிச்ச பொண்ணுதான் மெஹ்ரீன் பிர்ஜதா. ‘ஃபில்லவ்ரி’ங்கிற பாலிவுட் படத்திலேயும் நடிச்சிருக்காங்க. இப்போ இந்தப் படம் மூலமா தமிழுக்கு என்ட்ரி கொடுத்திருக்காங்க. ‘சின்ன குஷ்பு’ ஹன்சிகாவோட இன்னொரு வெர்ஷனா வருவாங்கனு நம்புறேன். ரொம்ப சின்சியரான பொண்ணு. ஆக்சுவலா, ‘அறம் செய்து பழகு’ ஒரே நேரத்துல தமிழ், தெலுங்குல தயாரான படம். மெஹ்ரீனுக்குத் தமிழும் தெரியாது, தெலுங்கும் தெரியாது. ஆனா, ரொம்ப உற்சாகமா நடிச்சாங்க. இதுவரை என் படங்களில் நடிச்ச ஹீரோயின்களிலேயே பெஸ்ட் இவங்க. அவங்ககிட்ட இருக்கிற சின்சியருக்காகவே தமிழ் சினிமாவில் பெரிய இடம் கிடைக்கும்.’’

‘`விக்ரமுக்குப் பிறகு பெரிய ஹீரோக்கள் பக்கம் போகவே இல்லையே... ஏன்?”

‘`விஜய், அஜித்தை வெச்சுப் படம் பண்ண விருப்பம் இல்லைனு நான் சொல்லலை. ‘ராஜபாட்டை’ பண்ணும்போதே ரெண்டு, மூணு பெரிய ஹீரோக்கள் படம் பண்ணலாம்னு சொன்னாங்க. ஆனா, ‘ராஜபாட்டை’ சரியா போகாததனால, பிறகு யாரும் என்கிட்ட வரலை. நானே தயாரிச்சு, இயக்கிய ‘ஆதலால் காதல் செய்வீர்’ மூலமா எனக்கு நானே ‘கம்-பேக்’ கொடுத்துக்கிட்டேன். பிறகு, சூர்யாவுக்குக் கதை எழுதினேன். சந்திக்கிறதுல சில பிரச்னைகள்.  ‘நான் மகான் அல்ல’ ஹிட் ஆனதுமே விஜய் சார் வீட்டுக்குக் கூப்பிட்டுப் பாராட்டினார், படம் பண்ணலாம்னு சொன்னார். ஆனா, நான் சொன்ன கதை அவருக்கு செட் ஆகலை.  ‘நல்ல ஸ்க்ரிப்ட் அமையும்போது, கண்டிப்பா பண்ணலாம்’னு சொல்லிட்டு வந்தேன். ‘பாண்டியநாடு’ வெற்றிக்குப் பிறகு விஜய் சாரைச் சந்திச்சேன். ‘சீக்கிரமே சேர்ந்து ஒரு படம் பண்ணலாம்’னு சொன்னார். பிறகு என்ன அரசியல் நடந்துச்சோ, அதுக்குப் பிறகு விஜய் சாரை மீட் பண்ண முடியலை. அஜித் சார்கிட்ட கதை சொல்றதுக்கும் இதே நிலைதான். அவருக்காகவும் ஒரு கதை ரெடி பண்ணி வெச்சுட்டுக் காத்துக்கிட்டு இருக்கேன். இப்போவரைக்கும் ரீச் பண்ண முடியலை. பொதுவாகவே நான் காத்துக்கிட்டு இருக்கிற டைப் கிடையாது. அடுத்தடுத்து மூவ் ஆகிட்டே இருப்பேன்.’’

"அறம் என்னைக்கும் சாகாது!”

‘`இயக்குநர், தயாரிப்பாளர்னு பரபரப்பா இயங்கிக்கிட்டு இருக்கீங்க. வீட்ல என்ன சொல்றாங்க?”

‘`வரமா அமைஞ்ச மனைவி. அவங்க இருக்கிறதனாலதான், எந்தப் பிரச்னையும் இல்லாம, சுதந்திரமா சினிமாவுல இயங்கிக்கிட்டு இருக்க முடியுது. அவங்களுக்கு எப்பவும் நன்றி சொல்லலாம். தவிர, என் படத்தைப் பார்த்து ‘நல்லா இருக்கு; கமர்ஷியலா ஹிட் ஆகும்; நல்ல பெயர் கிடைக்கும்’னு குட்டி குட்டி கமென்ட்ஸ் கொடுப்பாங்க. பசங்க ரெண்டு பேரும் படுசுட்டி. பெரியவன் ஸ்கேட்டிங்ல ஆர்வமா இருக்கான். சின்னவனை இப்போதான் பிளே-ஸ்கூல்ல சேர்த்துவிடலாம்னு பிளான் பண்ணிக்கிட்டு இருக்கோம்.’’

‘`சமீபத்துல வருத்தப்பட்ட விஷயம் ஏதாவது..?”


‘` ‘ராஜபாட்டை’க்குப் பிறகு விக்ரம் சாரை வெச்சு ஒரு சரித்திரப் படம் நான் பண்ணியிருக்க வேண்டியது. அந்தப் படம் ஓடாததனால பண்ண முடியலை. ‘பாகுபலி’ படத்தைப் பார்க்கும்போது, என் கதைக்கு நான் யோசிச்சு வெச்சிருந்த சில காட்சிகள் அந்தப் படத்துல இருந்தது. ‘ஆஹா... நாம யோசிச்சோமே, பண்ணியிருக்கலாமே?’னு கொஞ்சம் பொறாமையாவே இருந்துச்சு. பைபிளில் வர்ற ஒரு கதையை மையப்படுத்தி எழுதுன திரைக்கதை அது. கதையில ஹீரோவோட உயரம் வெறும் நாலு அடிதான்!’’

‘’அடுத்து?”

‘` ‘அறம் செய்து பழகு’ பண்ணிக்கிட்டு இருந்த சமயத்துலேயே, முழுக்க முழுக்கப் புதுமுகங்களை வெச்சு ஒரு படம் பண்ண ஆரம்பிச்சுட்டேன். இதுவரை நான் தொடாத மாடர்ன் ஏரியா அது. இப்போதைக்கு ‘இளமை ஊஞ்சலாடுகிறது’னு டைட்டில் வெச்சிருக்கேன்.’’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு