பிரீமியம் ஸ்டோரி
ஜோக்ஸ் - 2

``உங்க மனைவியை ஏன் டைவர்ஸ் பண்றீங்கன்னு தெரிஞ்சுக்கலாமா?’’

``எதை சமைச்சாலும் எனக்குப் போடாம, போட்டோ பிடிச்சு ஃபேஸ்புக்ல போடுறா மைலார்ட்!’’

- அபிசேக் மியாவ்.

ஜோக்ஸ் - 2

``சம்மர் கொடுமை, சம்மன் கொடுமை இரண்டையும் ஏக காலத்தில் அனுபவிக்கும் தலைவர் அவர்களே..!’’

 - பர்வீன் யூனுஸ்

ஜோக்ஸ் - 2

வீரர் 1: ``புகழ்ந்து பாடும் புலவருக்குப் பரிசு தருவதில்லை மன்னர் என்று எப்படிக் கூறுகிறாய்?’’

வீரர் 2: ``பாடலுக்கு நடுவே `ஸ்பான்சர்ட் பை'னு விளம்பரதாரர்கள் பெயரை ஒப்புவிக்கிறாரே புலவர்..!’’

- பாப்பனப்பட்டு வ.முருகன்

ஜோக்ஸ் - 2

``அரசியலின் ஐநூறே...அனுபவத்தில் ஆயிரமே...’’

``உங்களை செல்லாக்காசுன்னு அந்தப் பேச்சாளர் சொல்றாரு பாருங்க!’’

- வெ.ராம்குமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு