பிரீமியம் ஸ்டோரி
ஜோக்ஸ் - 4

``ஆஸ்பத்திரி அக்கவுன்ட்ஸ் எல்லாம் டாக்டரே மெயின்டெயின் பண்ணிப்பாரா, பரவால்லையே!”

``ஆமா, அவர் பி.காம் படிச்சி டாக்டர் ஆனவர்!”

- அ.ரியாஸ்

ஜோக்ஸ் - 4

``தலைவரே... ஜெயில்ல இருந்து பில் வந்திருக்கு.’’

``எதுக்கு?’’

``ஜாமீன்ல வெளியே போகாம, அடம் புடிச்சு உள்ளே இருந்த நாள்களுக்கு ரூம் வாடகையும் சாப்பாட்டுக்கு உண்டான தொகைக்கும்!’’

- வி.சகிதாமுருகன்.

ஜோக்ஸ் - 4

``தலைவருக்குப் பாராட்டுக்கூட்டமா... எதுக்கு?’’

``ரேன்சம்வேரால் பாதிப்படையாமல் வெற்றிகரமா தப்பிச்சதுக்குத்தான்!’’

- பி.ஜி.பி.இசக்கி

ஜோக்ஸ் - 4

``நீங்க எங்க ரெகுலர் கஸ்டமர் ஆச்சே.’’

``அதுக்காக என் டெபிட் கார்டு பின் நம்பரையும் நீங்களே போடுறதா?’’

- அ.ரியாஸ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு