Published:Updated:

பீச்சாங்கை - சினிமா விமர்சனம்

பீச்சாங்கை - சினிமா விமர்சனம்
பிரீமியம் ஸ்டோரி
News
பீச்சாங்கை - சினிமா விமர்சனம்

பீச்சாங்கை - சினிமா விமர்சனம்

ன்னுடைய மூளையின் உத்தரவுகளைத் தன் ‘கை’யே கேட்காமல் போனால்... அதுதான் ‘பீச்சாங்கை.’

பிக்பாக்கெட் திருடன் ஹீரோ ‘ஸ்மூத்து’வுக்கு  அவரின் பீச்சாங்கைதான் பெரிய பலம். திருட்டு ட்யூட்டிக்கு நடுவில் அஞ்சலி ராவைக் காதலிக்கிறார். எதிர்பாராமல் ஒரு விபத்தில் சிக்கும் ஸ்மூத்துவுக்குத் தலையில் அடிபட்டு, மூளை சொல்லும் ஆணையை இடது கை கேட்காத ‘ஏலியன் ஹேண்ட் சிண்ட்ரோம்’ பாதிப்பு வருகிறது. அதைக் குணப்படுத்தும் பணத் தேவைக்காகப் பெரிய புராஜெக்டை ஒப்புக்கொள்கிறார். அதை முடித்தாரா, பீச்சாங்கையைச் சமாளித்தாரா என்பது மீதிக்கதை.

பீச்சாங்கை - சினிமா விமர்சனம்

நாயகன் ஆர்.எஸ்.கார்த்திக்கின் கதாபாத்திரத்தை விளக்கிய ஆரம்பக் காட்சிகள் சிறப்பு. கெட்டவன் என்றாலும் கொஞ்சம் நல்லவன் என்ற பழக்கப்பட்ட டெம்ப்ளேட்தான், இருந்தாலும் அதை மான்டேஜ் காட்சிகளில் காட்டிய விதம் அழகு!

பிக்பாக்கெட்காரனாக கெத்தாகவும், இடதுகையோடு மல்லுக்கட்டும்போது வெத்தாகவும் ஆர்.எஸ்.கார்த்திக்கின் பவர்ப்ளே பக்கா! வில்லன் பொன்முடியும் அவரது சகாக்களும் சிரிக்க வைக்க முயல்கிறார்கள்.

எம்.எஸ்.பாஸ்கர், வில்லத்தனத்திலும் வெரைட்டி காட்டுகிறார்.

`ஏலியன் ஹேண்ட் சிண்ட்ரோம்’ என்ற புது விஷயத்தை எடுத்துக்கொண்டு அதை பிக்பாக்கெட், குழந்தைக் கடத்தல், அரசியல், காதல் என முடிச்சுப்போட்டு  அழகாகப் பொருத்தியிருக்கிறார் அறிமுக இயக்குநர் அஷோக். ஆனால் சுவாரஸ்யமான குட்டிக்குட்டி விஷயங்களில் காட்டிய கவனத்தை,  திரைக்கதை வழி கோத்ததில் கோட்டை விட்டிருக்கிறார்.

பீச்சாங்கை - சினிமா விமர்சனம்



டாக்டரே விளக்கிய பிறகு வரும் மான்டேஜ் பாடல் காட்சி எதற்கு? எஸ்.டி.டி பூத் காட்சிகள் ‘படம் எந்தக் காலத்தில் நடக்கிறது’ என்ற குழப்பத்தை உண்டுபண்ணுகின்றனவே? பழைய நெடி அடிக்கும் இரண்டாம் தர காமெடிகளையும் வசனங்களையும்கூட தவிர்த்திருக்கலாமே பாஸூ!

சண்டைக்காட்சிகளில் ஒளிப்பதிவாளர் கௌதம் ராஜேந்திரனும், ஸ்டன்ட் மாஸ்டர் விமல் ராம்போவும் ஓவர் டைம் பார்த்திருக்கிறார்கள். பாலமுரளி பாலுவின் பின்னணி இசை காட்சிக்குத் தேவையான அளவு தொந்தரவின்றி ஒலிக்கிறது.

க்யூட்டான ஐடியாவைப் பிடித்தவர்கள், அதைப் புதுமையான கதை வழியே சொல்லி இருந்தால், பீச்சாங்கைக்கு அழுத்தமான முத்தமே கொடுத்திருக்கலாம்.

- விகடன் விமர்சனக் குழு