Published:Updated:

“ஸ்ருதிக்கும் கோபம் வரும்!”

“ஸ்ருதிக்கும் கோபம் வரும்!”
பிரீமியம் ஸ்டோரி
“ஸ்ருதிக்கும் கோபம் வரும்!”

ஆர்.வைதேகி

“ஸ்ருதிக்கும் கோபம் வரும்!”

ஆர்.வைதேகி

Published:Updated:
“ஸ்ருதிக்கும் கோபம் வரும்!”
பிரீமியம் ஸ்டோரி
“ஸ்ருதிக்கும் கோபம் வரும்!”

``சின்ன வயசுலேர்ந்தே எனக்கு டிராவல்னா ரொம்பப் பிடிக்கும். ஃபிளைட்ல மாறி மாறி டிராவல் பண்றது தான் எனக்கு ஹாபியே. ஒரே இடத்துல பத்து நாளுக்கு மேல இருக்கச் சொன்னாதான் போரடிக்கும். அதனால்தான், அப்பாவுக்காக நான் நடிச்ச `பெஹன் ஹோகி டேரி’ இந்திப் படத்துக்கான ஸ்பெஷல் ஷோவை சென்னையில் அரேஞ்ச் பண்ணிட்டு, மும்பையில் இருந்து பறந்து வந்துட்டேன்’’ தனக்கே உரிய டைனமிக் வாய்ஸில் சிரிக்கிறார் ஸ்ருதிஹாசன்.

“ஸ்ருதிக்கும் கோபம் வரும்!”

`` ‘சிங்கம் 3’ படத்துக்குப் பிறகு தமிழில் ஸ்ருதியைப் பார்க்க முடியவில்லையே?’’

‘`ஒரே லேங்வேஜ்ல படங்கள் பண்றது சிலரோட ஃபார்முலா. எனக்கு அப்படி எந்த ஃபார்முலாவும் கிடையாது.   வீட்டுக்குள்ளேயே நாங்க ஒரு மொழி பேச மாட்டோம். தமிழ், இங்கிலீஷ், தெலுங்கு, இந்தி எல்லாம் எங்க வீட்டுக்குள் இருக்கு. மலையாளம், பெங்காலினு  எல்லா மொழிப் படங்கள்லயும் நடிக்கணும் என்பதுதான் என் ஆசை.’’

`` ‘சங்கமித்ரா’ படத்துக்காக  வாள் வீச்சு, குதிரையேற்றம்  கற்றுக் கொண்டது, கேன்ஸ் சென்றது, அங்கே `சங்கமித்ரா’வின் ஃபர்ஸ்ட் லுக்கை ரிலீஸ் செய்தது... என இத்தனைக்குப் பிறகு ‘சங்கமித்ரா’ படத்திலிருந்து ஏன் விலகிட்டீங்க?’’

‘`அந்தப் படம்  இனிமே என் வாழ்க்கையில் சம்பந்தமில்லாத விஷயம்னு நினைக்கிறேன். யார் வேணும்னாலும் என்ன வேணும்னாலும் சொல்லிட்டுப் போகட்டும். அதுக்கெல்லாம் என்கிட்ட பதில் இல்லை.  உண்மையைச் சொல்லணும்னா, நான் அதைப்பற்றிப் பேசவே விரும்பலை. குதிரையேற்றம், வாள் வீச்சு எல்லாம் தற்காப்புக் கலைகள். கத்துக்கிட்ட கலைகள் எதுவும் என்னைக்குமே வீணாப் போயிடாது.’’

 ``நீங்க ரொம்ப கோபப்படுவீங்கன்னு `சங்கமித்ரா’ டீம்ல சொல்றாங்களே?’’

‘`கோபப்படறது மனுஷ இயல்பு. ஸ்ருதிக்கும் கோபம் வரும். ஆனா, அதை அவசியம் வெளிப்படுத்தியாகணும்னு இல்லை. முன்னெல்லாம் சட்டுசட்டுனு கோபம் வரும். இப்பெல்லாம் இந்த விஷயத்துக்குக் கோபப்பட்டே ஆகணுமான்னு  யோசிக்கத் தோணுது. ஒரு விஷயம் பிடிக்கலையா... அந்த இடத்தை விட்டுக் கிளம்பிடுவேன், அவ்வளவுதான்.’’

“ஸ்ருதிக்கும் கோபம் வரும்!”

``கமல்ஹாசனின் மகளா நீங்க பார்த்த சினிமா இண்டஸ்ட்ரிக்கும், ஒரு நடிகையா நீங்க பார்க்கிற சினிமா இண்டஸ்ட்ரிக்கும் ஏதாவது வித்தியாசம் இருக்கா?’’

‘`அதை கம்பேர் பண்ணவே முடியாது. அப்பாவை ஒரு நடிகரா பார்த்த அந்த நாள்கள் எக்ஸைட்டடா இருந்தது. நான் நடிகையான பிறகு, அதே எக்ஸைட்மென்ட் வேற மாதிரி மாறியிருக்கு. பக்கத்துல இருந்து பார்க்கும்போது சினிமா இண்டஸ்ட்ரி கஷ்டமானதா தெரியுது.’’

`` ‘சபாஷ் நாயுடு’ படத்தில உங்க அப்பா கமல்கூட நடிச்ச அனுபவம் எப்படி இருந்துச்சு?’’

‘`ரொம்ப நல்ல எக்ஸ்பீரியன்ஸ். ஒரு நடிகையா என் கேரியர்ல முக்கியமான அனுபவம் அது. ஒரு மகளா எனக்குப் பெருமையைக் கொடுத்த படம். அப்பாகிட்ட கத்துக்க நிறைய விஷயங்கள் இருக்கு. தினம் தினம் கத்துக்கிட்டே இருக்கேன். குறிப்பா அப்பாகிட்ட எனக்கு ரொம்பப் பிடிச்ச விஷயம்னா, அவர் சக நட்சத்திரங் களுக்குக் கொடுக்கிற சுதந்திரம். கூட நடிக்கிறவங்களோட பலம் என்னன்னு தெரிஞ்சுக்கிட்டு அதை வெளியில கொண்டுவரப் பார்ப்பார். ஐ லவ் தட்.’’

``ஸ்ருதிக்குக் கல்யாணத்தில் நம்பிக்கை உண்டா?’’

‘`கல்யாணம் என்பது வாழ்க்கையில ஓர் அங்கம்.  ஆனா, அது என் பெர்சனல். அதைப்பற்றி நான் ஏன் வெளியே பேசணும்?’’