Published:Updated:

அழகை விட குழந்தை முக்கியம்!

அழகை விட குழந்தை முக்கியம்!
பிரீமியம் ஸ்டோரி
அழகை விட குழந்தை முக்கியம்!

ஆர்.வைதேகி

அழகை விட குழந்தை முக்கியம்!

ஆர்.வைதேகி

Published:Updated:
அழகை விட குழந்தை முக்கியம்!
பிரீமியம் ஸ்டோரி
அழகை விட குழந்தை முக்கியம்!

ரண்யா மோகன் என்றாலே ஒரு சின்னப் பெண்ணின் முகம்தான் நம் நினைவுகளில் பதிந்திருக்கிறது.  ஆனால், சாது சரண்யாவின் கோப முகத்தைச் சமீபத்தில் சமூக ஊடகங்கள் தரிசித்தன.  பிரசவத்துக்குப் பிறகு எடைகூடிவிட்ட சரண்யா மோகனின் புகைப்படங்கள், சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியதோடு ஏகப்பட்ட கேலிகள், கிண்டல்கள், உடலைப் பராமரிப்பதற்கான இலவச ஆலோசனைகளும் பரவின. “என் குடும்பத்தைக் கவனித்துக்கொள்வதிலும், அம்மாவாக இருப்பதிலும், என் குழந்தைக்குப் பால் கொடுப்பதிலும் நான் மகிழ்ச்சி யடைகிறேன், பெருமைகொள்கிறேன்’’ என, தாய்மைக்கே உரிய பூரிப்புடன் ட்ரோல் ஆசாமிகளுக்குப் பதிலடி கொடுத்து ஸ்டேட்டஸ் போட்டார் சரண்யா. கேரளாவில் வசித்துவரும் சரண்யாவோடு பேசினோம்.

அழகை விட குழந்தை முக்கியம்!

``உங்களின் தற்போதைய புகைப்படம் திடீரென வைரலானது எப்படி?’’

``குழந்தைகளின் ஹெல்த் பற்றிய விழிப்பு உணர்வு நிகழ்ச்சி ஒன்றைத் தொடக்கி வைத்துப் பேசினேன். அங்கே யார் யாரோ என்னை போட்டோ எடுத்தாங்க. அந்தப் புகைப்படங்கள்தான் இவ்வளவு தூரம் பரவியிருக்கு. எனக்குப் புகைப்படங்கள் பரவினது பற்றி எந்தப் புகாரும் இல்லை. ஆனால், மனிதர்களின் இயல்பும் நடவடிக்கைகளும்தான் எரிச்சலைக் கிளப்பின.

என் போட்டோவை வெச்சு கேலி பண்ணினவங்களுக்கும் அம்மா, அக்கா, தங்கச்சி, மனைவி, மகள், தோழினு எல்லோரும் இருப்பாங்க. அவங்களுக்குக் குழந்தை பிறந்தபோதும் இதே பிரச்னையைத்தான் சந்திச்சுருப்பாங்க. அதையெல்லாம் யோசிக்காம, இது என்னவோ எனக்கு மட்டுமே நடந்த அதிசயம் மாதிரி ட்ரோல் பண்ணினதை நினைச்சாக் கேவலமா இருக்கு” - வருத்தம் இழையோடுகிறது வார்த்தைகளில்.
“நான் நடிகையா இருந்தபோது 48 கிலோ இருந்தேன். திருமணத்துக்குப் பிறகு, கர்ப்பமானதும் என் அம்மாவும் மாமியாரும் என்னை முழு அக்கறையோடு பார்த்துக் கிட்டாங்க. என் குழந்தையோட ஆரோக்கி யத்துக்காக நான் நல்லா சாப்பிட்டாகணும். அதனால வெயிட் போட்டுட்டேன். இதுல பொய் சொல்ல ஒண்ணுமில்லை. `குழந்தைக்கு முதல் ஆறு மாசம் தாய்ப்பால் தான் பெஸ்ட் உணவு’னு சொல்றாங்க. அந்த டைம்ல நான் என்னுடைய அழகு பற்றியெல்லாம் யோசிச்சா, என் குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுக்க முடியாது.

நடிகைகளோட நிலைமை வேற. இப்போ நான் ஒரு அம்மா. இப்படித்தான் இருப்பேன். அப்போ நான் என்னை எவ்வளவு ரசிச்சேனோ, அதே அளவுக்கு இப்ப இந்த உடல்வாகையும் ரசிக்கிறேன்.’’

``படங்களில் பிஸியாக இருந்தபோதே திருமணம் செய்துகொண்டு நடிப்பிலிருந்து ஒதுங்கியது ஏன்?’’

``வாழ்க்கையில் எல்லாத்துக்கும் ஒரு டைம் இருக்கு. அந்தந்த டைம்ல அது அது நடக்கணும். 40 வயசுல கல்யாணம் பண்ணி, அப்புறம் குழந்தையில்லையேன்னு ஏங்குறவங்க எத்தனையோ பேர் இருக்காங்க. எங்க அம்மாவும் அப்பாவும் எனக்கு சீக்கிரமே  கல்யாணம் பண்ணி வைக்கணும்னு ஆசைப்பட்டாங்க. அம்மா-அப்பா பார்த்த மாப்பிள்ளைதான் அரவிந்த் கிருஷ்ணன். பல் டாக்டர். என்னையும் என் துறையையும் ரொம்பவே புரிஞ்சுக்கிட்டவர்.

``திருமணமான உடனே குழந்தை பெற்றுக்கொண்டது..?’’

``வாழ்க்கை முன்பைவிட இன்னும் சந்தோஷமா இருக்கு. இப்போ என் உலகமே அவன்தான். அம்மாங்கிற ஸ்தானம் மிகப்பெரிய ஆசீர்வாதம். அதை ஒவ்வொரு நொடியும் அனுபவிச்சுட்டிருக்கேன்.’’

சரண்யாவின் குரல் கேட்டு குழந்தை விழித்துக்கொள்ள, மீண்டும் ஒரு தங்கத் தாலாட்டுக்குத் தயாராகிறார் சரண்யா அம்மா.