தொடர்கள்
Published:Updated:

ஜோக்ஸ் - 1

ஜோக்ஸ் - 1
பிரீமியம் ஸ்டோரி
News
ஜோக்ஸ் - 1

ஓவியங்கள்: கண்ணா

“வரும் ஜனாதிபதித் தேர்தலில்...”

ஜோக்ஸ் - 1

“என்ன செய்யப்போறீங்க தலைவரே?”

“எப்பவும்போல வேடிக்கைப் பார்க்க வேண்டியதுதான்!”

- வி.சகிதாமுருகன்.

ஜோக்ஸ் - 1

``ஊழல் என்று தேடினாலே, எங்கள் தலைவர் பற்றியே காட்டும் கூகுளை வன்மையாக கண்டிக்கிறேன்...’’

 - அ.ரியாஸ்

ஜோக்ஸ் - 1

``மன்னரின் சொந்த சேனல்ங்கிறதுக்காக இப்படியா?’’

``என்ன?’’

``நம் படை புறமுதுகிட்டு ஓடி வர்றதை மாரத்தான் ஓட்டம்னு திரித்துச் சொல்றாங்க!’’

- அ.ரியாஸ்

ஜோக்ஸ் - 1

``அண்டை அரசர் அனுப்பிய காசோலை எங்கே அமைச்சரே?''

``போர் ஓலை என்று நினைத்து அவசரப்பட்டு கிழித்து எறிந்துவிட்டேன் மன்னா!''

- அ.ரியாஸ்