Published:Updated:

“என் அப்பா சரியான முடிவெடுப்பார்!”

“என் அப்பா சரியான முடிவெடுப்பார்!”
பிரீமியம் ஸ்டோரி
“என் அப்பா சரியான முடிவெடுப்பார்!”

எம்.குணா

“என் அப்பா சரியான முடிவெடுப்பார்!”

எம்.குணா

Published:Updated:
“என் அப்பா சரியான முடிவெடுப்பார்!”
பிரீமியம் ஸ்டோரி
“என் அப்பா சரியான முடிவெடுப்பார்!”

வேகம்... பரபரப்பு... சுறுசுறுப்பு என எல்லாவற்றிலும் அப்படியே ரஜினியின் ஜெராக்ஸாக இருக்கிறார் செளந்தர்யா. `வேலையில்லா பட்டதாரி -2’ படத்தை இயக்கி முடித்து ரிலீஸ் வேலைகளில் பிஸியாக இருந்த செளந்தர்யாவிடம் பேசினேன்.

 `` ‘வி.ஐ.பி-1, ‘வி.ஐ.பி-2‘ இரண்டு படங்களுக்கும் இடையில் உள்ள வித்தியாசம் என்ன?’’

``வி.ஐ.பி முதல் பார்ட்ல வந்த ஹீரோ ரகுவரன் ரொம்ப சாதாரண, மிடில் கிளாஸ் குடும்பத்தைச் சேர்ந்தவர். அவர் கேரக்டர் ரொம்ப ஹம்பிளா, எளிமையா இருக்கும். முதல் பார்ட்டைவிட இரண்டாம் பார்ட்டில்  நடிக்கும் ரகுவரனின் லைஃப்ஸ்டைல் வேற லெவல்ல இருக்கும். அவர் சந்திக்கிற புதுப்புது சேலஞ்சஸ்தான் ‘விஐபி-2’.  அதை எப்படி அவர் சமாளிக்கிறார் என்பதை செம கமர்ஷியலா எடுத்திருக்கோம்.
‘வி.ஐ.பி.1’-ல் தனுஷ் சாரின் அப்பாவாக நடித்த சமுத்திரக்கனி சார்தான் இதிலும் அப்பா. காதலியா நடிச்ச அமலாபால் இதில் மனைவியா நடிச்சிருக்காங்க. அழகுசுந்தரம் கேரக்டர்ல நடிச்ச விவேக் சார் பார்ட்-2-விலும் நடிச்சுருக்கார்.

“என் அப்பா சரியான முடிவெடுப்பார்!”

ஆனால், டெக்னிக்கல் டீம் அப்படியே பார்ட்-2 வில் வேற. ஒளிப்பதிவாளர் சமீர் தாஹீர், கலை இயக்குநர் சதீஷ், எடிட்டர் பிரசன்னா, ஸ்டன்ட்ஸ் அனலரசு,  இசையமைப்பாளர் ஷான் ரோல்டன்னு இது புது டீம். எனது இயக்கத்துக்கு உதவிய இயக்குநர் சுப்ரமணிய சிவா அண்ணாவுக்கும் ஸ்பெஷல் நன்றி சொல்லணும்.’’

``இந்திப் படங்களில் நடிப்பதையே தவிர்த்துவந்த கஜோலைத் தமிழுக்குக் கூட்டிட்டு வந்திருக்கீங்க. அப்படி என்ன கேரக்டர் அவங்களுக்கு?’’

`` தனுஷ் சார்தான் இந்தப் படத்துக்குக் கதை எழுதியவர். அவர் கதையில் வசுந்த்ரான்னு ஒரு ஸ்ட்ராங் கேரக்டரை எழுதியிருந்தார். யாராலும் செய்ய முடியாததை வசுந்த்ரா ஈஸியா செஞ்சு முடிச்சுடுவாங்க. இந்த கேரக்டர்ல யாரை நடிக்க வெக்கலாம்னு தமிழ், தெலுங்கு, இந்தினு எல்லா ஃபீல்டுலயும் தேடினோம்.கடைசியில் எங்க டீம் எல்லோருமே வசுந்த்ரா கேரக்டருக்கு சரியான சாய்ஸ் கஜோல் மேம்தான்னு தோணுச்சு. அவங்கிட்ட பேசினோம். உடனே ஓகே சொல்லி நடிக்க வந்தாங்க.

 நாங்க எதிர்பார்த்ததைவிட கம்பீரமாகவும், சுறுசுறுப்பாகவும், ஸ்டைலாவும் நடிச்சு வசுந்த்ரா கதாபாத்திரத்துக்கு உயிர் கொடுத்திருக்காங்க கஜோல் மேம். தனுஷ் சார்- கஜோல் மேம் காம்பினேஷன் காட்சிகள் அப்படி ஒரு ஃபயர்ல இருக்கும்.

 சினிமாவைத் தாண்டி இயல்பாவே கஜோல் மேம் ஒரு சூப்பர் லேடி. ப்ரொஃபஷனல், பர்சனல்னு இரண்டு வாழ்க்கையையும் அவ்ளோ அழகா மேனேஜ் பண்றாங்க. அவங்ககிட்ட இருந்து நான் ஏகப்பட்ட விஷயங்கள் கத்துக்கிட்டேன். `மின்சாரக் கனவு’ படத்துக்குப் பிறகு, ‘வி.ஐ.பி-2’ மூலமா அதுவும் என் இயக்கத்தில் திரும்பவும் தமிழில் நடிச்சிருக்காங்கிறது எனக்கு மிகப்பெரிய பெருமை.’’

``ஹீரோ தனுஷ் பற்றிச் சொல்லுங்க?’’

`` நான் இயக்கும் ரெண்டாவது படத்திலேயே அவரை ஹீரோவா இயக்கும் வாய்ப்பு கிடைச்சதுக்கு ரொம்பவும் சந்தோஷப்படுறேன். தனுஷ் சார் நடிக்கும் ஒவ்வொரு காட்சியையும் படமாக்கும்போது பலமுறை கட் சொல்ல மறந்து அவரது நடிப்பை அப்படியே பார்த்துட்டே இருந்திருக்கேன்.  ‘வி.ஐ.பி-2 ‘ படத்துல அவரோட சேர்ந்து வேலை செஞ்சது இப்ப நினைச்சாலும் பிரமிப்பா இருக்கு.’’

`` ‘வி.ஐ.பி-2’ படப்பிடிப்புக்கு வந்தபோது ரஜினி என்ன சொன்னார்?’’

``அப்பா எப்பவுமே என் கட்சிதான். திடீர்னு அவர் ஷூட்டிங் ஸ்பாட் வந்தப்ப, எனக்கே பெரிய சர்ப்ரைஸ்.  சூப்பர் ஸ்டாரான அப்பா முன்னாடியே நான் ஆக்‌ஷன்- கட் சொல்லிட்டி ருந்தேன். ரொம்பவும் சந்தோஷப்பட்டார். திடீர்னு மானிட்டர் முன்னாடி உட்கார்ந்து நான் படமாக்கிய சில காட்சிகளை அப்பா பார்த்தபோது, எனக்குக் கொஞ்சம் படபடப்பா இருந்துச்சு. தாணு அங்கிள், தனுஷ் சார்கிட்ட கொஞ்ச நேரம் பேசிட்டுப் போயிட்டார். என்கிட்ட எதுவுமே பேசல. வீட்ல பார்த்ததும், ``தேர்ந்த இயக்குநருக்கான திறமையை உன்கிட்ட பார்த்தேன். உன்மேல எனக்குப் பெரிய நம்பிக்கை வந்துருக்கும்மா’’ன்னு சொன்னார். நெகிழ்ந்து போயிட்டேன். வாழ்க்கையில் என்னைக்குமே மறக்க முடியாத வார்த்தைகள் அவை.’’

“என் அப்பா சரியான முடிவெடுப்பார்!”

``உங்களைக் கவர்ந்த இயக்குநர்கள் யார்?’’

``இப்போதைய இயக்குநர்கள் எல்லாருமே செம திறமையோட இருக்காங்க. வேற வேற ஜானர்ல, புதுசு புதுசா கதை சொல்றாங்க. நல்ல படம் எது பார்த்தாலும், உடனே இயக்குநருக்கு போன் பண்ணி பாராட்டிடுவேன். இவங்க இல்லாம எப்போதுமே என்னோட ஃபேவரிட் இயக்குநர்கள் சங்கர் சாரும், ராஜ மெளலி சாரும்தான்.’’

``உங்களால் அப்பாவுக்கு அறிமுகம் செய்யப்பட்ட பா.இரஞ்சித் இப்போ ‘கபாலி’க்கு அடுத்து `காலா’ இயக்குறாரே?’’

``என்னுடைய நல்ல நண்பர் இரஞ்சித். தமிழ் சினிமாவில் தனக்குன்னு ஓர் அடையாளத்தை அவர் தக்க வெச்சிருக்கிறது எனக்கு ரொம்பப் பெருமையா இருக்கு. ரஞ்சித்தின் திறமை மீது எனக்கு மிகப்பெரிய நம்பிக்கை இருக்கு. ‘காலா’ படம் இதை இன்னமும் அழுத்தமா நிரூபிக்கும்.’’ 

 ``உங்கள் மகன் எப்படி இருக்கார்?’’

``என் மகன் வேத் கிருஷ்ணாவுக்கு ரெண்டு வயசு. எங்க வீட்டின் வெளிச்சமும், என் வாழ்க்கையின் பிடிப்பும் அவன்தான்.  என் அம்மா அவனை அவ்ளோ அழகாகப் பாத்துக்குறாங்க. அவங்க உதவியால்தான் நான் இயக்குநரா வேலை செஞ்சுட்டு இருக்கேன். பாட்டியின் அன்பிலும், சந்தோஷமான சூழலிலும் என் மகன் வேத் கிருஷ்ணா வளர்ந்து வர்றான்.’’

“என் அப்பா சரியான முடிவெடுப்பார்!”

``உங்கள் அப்பாவின் அரசியல் பிரவேசம் குறித்து?’’

``என் அப்பா எல்லா விஷயத்திலும், எந்த நேரத்திலும் சரியான முடிவைத்தான் எடுப்பார்.’’