Published:Updated:

சைத்தானுக்கு அடுத்து சத்யா

சைத்தானுக்கு அடுத்து சத்யா
பிரீமியம் ஸ்டோரி
சைத்தானுக்கு அடுத்து சத்யா

பா.ஜான்ஸன்

சைத்தானுக்கு அடுத்து சத்யா

பா.ஜான்ஸன்

Published:Updated:
சைத்தானுக்கு அடுத்து சத்யா
பிரீமியம் ஸ்டோரி
சைத்தானுக்கு அடுத்து சத்யா

``லயோலா காலேஜ்ல போட்டோ கிராஃபியும் டைரக்‌ஷனும் படிச்சேன். அதை முடிச்சுட்டு வெற்றிமாறன் சார்கிட்ட அசிஸ்டென்டா சேர்ந்தேன். அந்த மூணு வருஷ வேலை, இன்னொரு டிகிரி கிடைச்ச மாதிரி இருந்தது. அதுக்குப் பிறகு டி.வி-க்காக ஆவணப்படங்கள் இயக்கினேன். `எழுதப்படாத மனிதர்களின் கதை’னு மீனவர்கள் தொடங்கிப் பாலியல் தொழிலாளர் வரை பலருடைய  வாழ்க்கையை ஆவணப்படமா பதிவு பண்ணினேன். அந்தச் சமயத்தில்தான் விஜய்சாரதி சார் அறிமுகம் கிடைச்சது. அவர்கிட்ட `சைத்தான்’ கதையைச் சொன்னேன். விஜய் ஆண்டனி சார்கிட்ட கூட்டிட்டுப்போனார். `சைத்தான்’ உருவானது. இப்போ என் ரெண்டாவது படம் `சத்யா’ ரிலீஸுக்கு ரெடி’’ என ஆர்வத்துடன் பேசுகிறார் இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி. சிபிராஜ் நடிப்பில் ‘சத்யா’ இயக்கியிருக்கிறார்.  தெலுங்கில் சூப்பர்ஹிட்டான ‘ஷனம்’ படத்தின் ரீமேக் இது.

சைத்தானுக்கு அடுத்து சத்யா

``முதல் படம் சுஜாதாவுடைய நாவலைத் தழுவி எடுத்த படம், இரண்டாவதா ஒரு ரீமேக். எதனால் இப்படி?’’

`` ‘சைத்தான்’ படம் ஆரம்பிக்கிற சமயத்தில் விஜய் ஆண்டனி சார், சிபிகிட்ட பேசிட்டிருந்திருக்கார். அப்போ அவர் ஒரு ரீமேக் நடிக்கலாம்கிற ப்ளான்ல இருந்திருக்கார். விஜய் ஆண்டனி சார் எனக்கு கால் பண்ணி, `சிபி, ஒரு படம் பண்றார். அதை நீங்க டைரக்ட் பண்ணா, நல்லாயிருக்கும்னு எனக்குத் தோணுது. ரீமேக்குங்கிறதால சீக்கிரமாவும் முடிச்சுடலாம்’னு சொன்னார். அப்போவரைக்கும் ரீமேக் பண்ணணும்கிற ஐடியா எனக்கு இல்லை. அதுக்காக ரீமேக்கே பண்ணக் கூடாதுங்கிற ஐடியாவும் இல்லை.  `சைத்தான்’ ரிலீஸ் சமயத்திலேயே இந்தப் படத்தைப் பாதி முடிச்சுட்டேன். இப்போ முழுசா முடிச்சாச்சு. படமும் நல்லா வந்திருக்கு.’’

சைத்தானுக்கு அடுத்து சத்யா

``தெலுங்கு `ஷனம்’ தமிழ் `சத்யா’வா எப்படி மாறியிருக்கு?’’

``வழக்கமா `தமிழுக்கு ஏற்ற மாதிரி படத்தை மாற்றியிருக்கேன்’னு சொல்வாங்கல்ல. அந்த மாதிரி வம்படியா எதுவும் பண்ணலை. ஆனா, இதை எப்படி ப்ரசென்ட் பண்ணா, ஆடியன்ஸுக்குப் பிடிக்கும்னு யோசிச்சுப் பண்ணியிருக்கேன். ‘ஷனம்’ இயக்கிய ரவிகாந்த்கூட நிறைய பேசினேன். சிபிராஜ், வரலட்சுமி, ரம்யா நம்பீசன், ஆனந்தராஜ், சதீஷ், யோகிபாபு, நிழல்கள் ரவினு காஸ்ட்டிங்கே நல்லா அமைஞ்சிருக்கு. அடிச்சு சொல்றேன், இதில் சிபியோட நடிப்பு நிச்சயம் பேசப்படும்.’’

`` `சத்யா’னு டைட்டில், பழைய படங்களுடைய டைட்டில் வைக்கும் ஃபீவர்னாலயா?’’

`` `கண்ணை நம்பாதே’னு வைக்கலாம்னுதான் நினைச்சோம். ஆனா, கொஞ்சம் பவர்ஃபுல்லா வேணுமேன்னு யோசிச்சுட்டே இருந்தோம். படத்தில் சிபியுடைய பெயர் `சத்யா’ங்கிறதால, கமல் சார்கிட்ட முதல்ல கேட்போம். கிடைக்கலைன்னா, வேற யோசிக்கலாம்னு கேட்டுப்பார்த்தோம்.  கமல் சார் ஓகே சொல்லிட்டார். இதைவிடப் பொருத்தமான ஒரு டைட்டில் அமையாதுன்னு அதையே வெச்சுட்டோம்.’’

சைத்தானுக்கு அடுத்து சத்யா

``அடுத்த படம்?’’

``ஒரு  மிஸ்ட்ரி த்ரில்லர் கதை. நம்ம வழிபாடுகளை அடித்தளமா வெச்சு நான் எழுதிய கதை. நமக்கு மொத்தமா மூணுவிதமான வழிபாடுகள் இருக்கு.  முன்னோர் வழிபாடு, காவல் தெய்வங்களைக் கும்பிடுவது, கிரகங்களைக் கும்பிடுவது. இதைத் தொடர்புப்படுத்தி அமானுஷ்யங்களை மையமா வெச்சு நடக்கும் ஒரு கதைதான் என்னுடைய அடுத்த படம்.’’