Published:Updated:

“அஜித் இனி இன்டர்நேஷனல் ஹீரோ!”

“அஜித் இனி இன்டர்நேஷனல் ஹீரோ!”
பிரீமியம் ஸ்டோரி
“அஜித் இனி இன்டர்நேஷனல் ஹீரோ!”

ம.கா.செந்தில்குமார்

“அஜித் இனி இன்டர்நேஷனல் ஹீரோ!”

ம.கா.செந்தில்குமார்

Published:Updated:
“அஜித் இனி இன்டர்நேஷனல் ஹீரோ!”
பிரீமியம் ஸ்டோரி
“அஜித் இனி இன்டர்நேஷனல் ஹீரோ!”

“இது, இந்தியன் எமோஷன்ல ஒரு இன்டர்நேஷனல் படம். இதுல அஜித் சார் ஒரு இன்டர்நேஷனல் ஏஜென்ட். நாம சின்ன வயசுல நிறைய ஏஜென்ட் படங்களைப் பார்த்திருப்போம். அதில் த்ரில்லிங்கான நிறைய விஷயங்கள் இருக்கும். அப்படி இதிலும் உலகம் பூரா சுத்துற டிராவல், மைனஸ் டிகிரி பனிமலைக் காட்சிகள், பயங்கரமான பைக் சேஸிங், ஹெலிகாப்டர் துரத்தல்கள்னு நிறைய த்ரில் இருக்கும். ஃபிசிக்கலா ஃபிட்டா இருந்தா மட்டும்தான் இப்படி ஒரு படம் பண்ண முடியும். ஆனா, இந்தக் கதையை நான் அஜித் சார்கிட்ட சொன்னப்ப, அவர் முழங்கால்ல ரெண்டு ஆபரேஷன் செஞ்சிட்டு ஓய்வில் இருந்தார். கதை கேட்டுட்டு ‘நான் பண்றேன் சிவா’னு சொன்னார். ‘சார்...’னு நான் இழுத்தேன். ‘நான் நிச்சயம் பண்றேன் சிவா’ன்னார். அந்த ஆபரேஷன்களைக் கடந்துவந்து தன் உடம்பை ஃபிட்டாக்கி இன்னிக்கு இப்படி ஒரு படம் பண்ணியிருக்கார். அவரின் இந்தத் தன்னம்பிக்கைதான் ‘விவேக’த்துக்கான ஆக்ஸிஜன்’’ - ‘வீரம்’, ‘வேதாளம்’ தொடர்ந்து  ‘விவேக’த்தில் ஹாட்ரிக் அடிக்க உழைத்துக்கொண்டிருக்கிறார் இயக்குநர் சிவா. எடிட்டிங் இடைவெளியில் சிவாவிடம் பேசினேன்.

“அஜித் இனி இன்டர்நேஷனல் ஹீரோ!”

‘‘ ‘வீரம்’ கிராமம்னா, ‘வேதாளம்’ நகரம். இப்ப ‘விவேகம்’ இன்டர்நேஷனல். எந்தப் புள்ளியில் இந்தக் கதையை ஃபிக்ஸ் பண்ணீங்க?’’

‘‘நாம எல்லாருமே ஃபேமிலியை மையப்படுத்தின மனிதர்கள்தான். ‘எது முக்கியம்?’னு யாரைக் கேட்டாலும் கடைசியா குடும்பம்னுதான் சொல்வாங்க. அதனால, நான் குழந்தைப் பாசம், அப்பா-அம்மா பாசம், மனைவி பாசம்னு ஃபேமிலி எமோஷன்ஸை ஆணித்தரமா நம்புவேன். ஒவ்வொரு படத்துக்கும் ஒவ்வொரு எமோஷனை நம்பி கதையை ஃபார்ம் பண்ணுவேன். அப்படியான ஒரு எமோஷன்ஸை நம்பி ‘விவேக’த்தை அமைச்சிருக்கேன். அது எல்லாருக்கும் கனெக்ட் ஆகக்கூடிய எமோஷனா இருக்கும். அதே சமயம் பிரசன்டேஷன் இன்டர்நேஷனல் லெவல்ல இருக்கும். படத்தைப் பார்க்கிறவங்க எல்லாருக்குமே அது அழகா கனெக்ட் ஆகும். அஜித் சாருக்கு படம் ரொம்பப் பொருத்தமா அமைஞ்சிருக்கு.’’

“அஜித் இனி இன்டர்நேஷனல் ஹீரோ!”

“உலகத்தின் பல்வேறு நாடுகள்ல நடக்கிற அந்த ‘விவேக’த்தின் வியூகம் என்ன?’’

“ ‘இந்த உலகமே உன்னை எதிர்த்தாலும், எல்லாச் சூழ்நிலைகளும் `நீ தோத்துட்ட... நீ தோத்துட்ட...’னு உன் முன்னாடி நின்னு அலறினாலும், நீயா ஒப்புக்கிறவரைக்கும் எவனாலும் எங்கேயும் எப்பவும் உன்னை ஜெயிக்க முடியாது’ - டீஸர்ல வந்த இந்த கான்செப்ட்தான் கதைக்களம். முதல் பாடல் ‘சர்வைவா...’ சொல்ல வர்ற விஷயமும் இதுதான். ஒவ்வொரு மனுஷனும் தனக்குள் ஒரு போராட்டம்... வெளி உலகோடு வேறொரு போராட்டம்னுதான் இருப்பான். இப்படி எதுவா இருந்தாலும், ‘தோத்துட்டோம்’னு நினைச்சுட்டோம்னா, அவ்வளவுதான் கதை முடிஞ்சிடுச்சு. கடைசிவரைப் போராடினாத்தான் வெற்றி. இந்தக் கருத்தை, எல்லா மக்களுக்கும் சொல்ல எனக்கு ஒரு வாய்ப்பு கிடைச்சிருக்கு. அதை நான் சரியா பயன்படுத்தியிருக்கேன்னு நம்புறேன்.”

“அஜித் இனி இன்டர்நேஷனல் ஹீரோ!”

‘‘இன்டர்நேஷனல் ஏஜென்டா அஜித் எப்படி நடிச்சுருக்கார்?’’

‘‘இந்தப் படத்துக்காக அன்ஹ்யூமன் கண்டிஷன்ஸ்ல நிறைய ஷூட் பண்ணினோம். பனிமலை உச்சியில் ஷூட்டிங். எங்களுக்குக் கண்ணு முழியெல்லாம் தள்ளிடுச்சு. நாங்க மூணு லேயர் டிரெஸ் போட்டிருப்போம். ஆனா, காட்சிப்படி அவருக்குக் கிழிஞ்ச டிரெஸ்தான். அதைப் போட்டுக்கிட்டு மலை ஏறி அவர் நடிச்சதை என்னால் நம்பவே முடியலை. ஒருத்தரோடு தொடர்ந்து டிராவல் பண்ணும்போது நம்மையும் அறியாம அவர்மேல் அளவு கடந்த அன்பு செலுத்த ஆரம்பிப்போம். அப்போ அவர் படுற கஷ்டங்களைப் பார்க்கும்போது, நாம கண் கலங்கிடுவோம். மைனஸ் 12 டிகிரியில் நைட் எஃபெக்ட்ல ஒரு பைக் சேஸ். அதை எடுத்து முடிக்கிறதுக்குள்ள நாங்க பட்ட கஷ்டங்கள் வார்த்தைகள்ல சொல்ல முடியாதவை. குளிரைப் பொருட்படுத்தாமல் பைக் ஓட்டிட்டிருந்தார். அவர் நல்லா பைக் ஓட்டுவார்னு தெரியும். அது இந்தப் படத்துல ரொம்ப சூப்பரா பதிவாகியிருக்கு. பைக் ஸ்டன்ட் பயங்கரமா வந்திருக்கு. இப்படி எல்லாக் கஷ்டங்களையும் ரொம்பத் தைரியமா எதிர்கொண்டு நல்லபடியா நடிச்சுக்கொடுத்தவர், ஷூட்டிங் கடைசி நாளில் ‘நீ திருப்தியா சிவா?’னு கேட்டார். ‘இதுக்குமேல் வேற என்ன சார் எதிர்பார்க்க முடியும்?’னு சொன்னேன். ‘இல்லையில்ல... உனக்கு திருப்தியா?’னார். ‘திருப்தி சார்’னேன். ‘ஐ யம் ஓகே... ஐ யம் ஓகே’னு சிரிச்சார். இந்தப் படத்தின் டேக் லைனே, ‘பிலிவ் இன் யுவர்செல்ஃப்’தான். தன்னை நம்புறவன் என்னைக்கும் தோற்றதா சரித்திரமே கிடையாது. அதுக்கு அஜித் சாரே சிறந்த உதாரணம்.’’

‘‘ஒட்டுமொத்த படத்தையும் ஐரோப்பாவில் ஷூட் பண்ணின அந்த அனுபவம் எப்படியிருந்துச்சு?’’

‘‘செர்பியா,  பல்கேரியா, ஆஸ்திரியா, குரோஷியானு படத்தின் 97 சதவிகிதம் அங்கேதான் ஷூட் பண்ணினோம். இங்கே வெறும் மூணு சதவிகிதம்தான். அதுவும் பீரங்கி, ஹெலிகாப்டர்கள்னு அவங்களோட ராணுவத் தளவாடங்களை வெச்சு ஷூட் பண்ணினது மிகப்பெரிய விஷயம். இவ்வளவு பெரிய புராஜெக்ட்டை எங்க டீம் இல்லைன்னா பண்ணியிருக்கவே முடியாது. குறிப்பா, எங்க தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன் சார், அவரின் மகன்கள் செந்தில், அர்ஜுன், புரொடக்‌ஷன் டீம் ராகுல், நிர்மல், அன்பு, என் டீம், ராஜசேகர், பூபாலன்னு இவங்க இருந்ததால்தான் எந்தச் சிரமும் இல்லாமல் இந்தப் படம் இவ்வளவு சிறப்பா வந்திருக்கு.’’

“அஜித் இனி இன்டர்நேஷனல் ஹீரோ!”

‘‘இந்தப் படத்துக்குள் விவேக் ஓபராய் எப்படி வந்தார்?’’

‘‘இந்த கேரக்டர்ல நடிக்க ஸ்ட்ராங்கான நடிகர் தேவைப்பட்டார். தயாரிப்பாளர் செந்தில் சார்தான், ‘விவேக் பண்ணினால் நல்லா இருக்கும்’னு சொன்னார். கேட்டுப்பார்க்கலாமேனு மும்பைக்குப் போய் கதையைச் சொன்னேன். 15 நிமிஷம் கழிச்சு ‘பிரதர்’னு கூப்பிட்டார். ‘சார்’னு நிமிர்ந்தேன். ‘நான் பண்றேன் பிரதர்’னு தமிழ்லேயே சொன்னார். எனக்குப் பயங்கர ஆச்சர்யம். ‘இந்த ஸ்கேல்ல இந்த ஜானர்ல ஒரு இண்டியன் ஃபிலிம் அமைஞ்சிருக்கு. அதுதான் என்னை ஆச்சர்யப்படுத்துது’னு சொன்னார். அஜித் சாருக்கும் அவருக்கும் அப்படி ஒரு நட்பு; அன்பு. அஜித் சாரை அவர் `அண்ணா’ன்னுதான் கூப்பிடுவார். விவேக் ஓபராய்க்கு நெகட்டிவ் ரோல் கிடையாது. பவர்ஃபுல்லான ரோல்.’’

“அஜித் இனி இன்டர்நேஷனல் ஹீரோ!”

‘‘ஸ்ருதிஹாசன் தங்கை அக்‌ஷராஹாசனின் முதல் தமிழ்படம். எப்படி இருந்தது அவரின் நடிப்பு?’’

‘‘அவங்க கேரக்டர்தான் படத்துக்கான அச்சாணி. அவ்வளவு முக்கியமான கதாபாத்திரம். வெளிநாட்டிலேயே பிறந்து வளர்ந்த கேரக்டர். எனக்கு அவங்க கண்களின் கலர், பாடி லாங்வேஜ்னு அக்‌ஷராவைப் பார்க்கும்போது ஹாலிவுட் நடிகை மாதிரியே தெரிவாங்க. ‘அவங்க பண்ணினா நல்லா இருக்கும்’னு ஆரம்பத்திலேயே நான் ஃபிக்ஸ் ஆகிட்டேன். கேட்டேன். ‘இந்த ரோலா!?’னு ஆச்சர்யமா கேட்டுட்டு, ‘சூப்பரா இருக்கும். அஜித் சார் படம் வேற. பண்றேன்’னு ஒப்புக்கிட்டாங்க. பிரமாதமான, பாராட்டக்கூடிய நடிப்பைத் தந்திருக்காங்க. காஜல் அகர்வாலுக்கு ரொம்ப சவாலான கேரக்டர். வெளிநாட்டில் வாழக்கூடிய ஹோம்லியான தமிழ்ப்பெண் கேரக்டர். அது அவங்களுக்கு ரொம்ப அழகா பொருந்தியிருக்கு.இவங்களைத் தவிர அமிலினு ஒரு போஸ்னியன் நடிகை. செர்ஜ்னு ஒரு பிரஞ்சு நடிகர், ஸ்லோபான்னு ஒரு செர்பியன் நடிகர்னு திறமையான இன்டர்நேஷனல் நடிகர்கள் பலரும் நடிச்சிருக்காங்க.’’

‘‘அஜித்தின் படங்களில் அவரின் ரசிகர்கள் கனெக்ட் பண்ணிக்கிற மாதிரியான காட்சிகள், வசனங்கள் அதிகம் இருக்கும். இதில் அப்படி என்ன ஸ்பெஷல்?’’

‘‘இந்தப் பட திரைக்கதை டைம் ரன் ஸ்க்ரிப்ட். அதனால்தான் ‘விவேகம்’ங்கிற தலைப்பையே டைம் ஃபார்மெட்டில் அமைச்சிருக்கோம். கதைக்கும் டைமுக்கும் கனெக்ட் இருக்கு. அந்த டெம்போ, த்ரில் கடைசிவரை தொடரும் வகையில் திரைக்கதை அமைச்சது பெரிய சவால். அஜித் சாருக்கு வசனம் எழுதும்போது அவ்வளவு ஆசையாவும் ஆர்வமாவும் இருக்கும். நம்மை அறியாமல் அவரோட பெர்சனல் கேரக்டர் நமக்கு முன்னாடி வந்து நிற்கும். ‘இந்த உலகமே உன்னை எதிர்த்தாலும்...’ங்கிற அந்த டீஸர் வசனம்கூட அப்படி எழுதினதுதான். ‘இப்படி ஒரு டயலாக் எழுதியிருக்கேன் சார்’னு அவர்கிட்ட சொன்னேன். ‘இது பெருசா ரீச் ஆகும். எல்லாரும் ரிலேட் பண்ணிப்பாங்க. தோத்துட்டேன்னு நினைக்கிறவன்கூட இன்னொரு முறை முயற்சி பண்ணுவோம்னு நினைப்பான்’னு சொல்லி என் தோள்ல தட்டிக்கொடுத்தார். அதை மறக்கவே முடியாது. இப்படி நான் உண்மையா ஃபீல் பண்ணி எழுதுறதை அவரும் உண்மையா ஃபீல் பண்ணி ஆத்மார்த்தமா பேசி நடிச்சிருக்கார். அதனால்தான், அது ரசிகர்களுக்கு கனெக்ட் ஆகுது. ‘எண்ணம்போல் வாழ்க்கை’. இது அவர் அடிக்கடி சொல்ற விஷயம். இதை மிகச்சரியான இடத்தில் பயன்படுத்தியிருக்கேன். ஸ்பாட்ல டயலாக் சொல்லிட்டிருக்கும்போது, ‘இந்த இடத்துல இப்படிச் சொல்லுங்க சார்’னு ‘எண்ணம்போல வாழ்க்கை’னேன். சிரிச்சார்.’’

“அஜித் இனி இன்டர்நேஷனல் ஹீரோ!”

‘‘பெரிய பட்ஜெட், பெரிய ஹீரோ, மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கையில் அது வெற்றிப்படமாவே அமைஞ்சாலும் சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. அப்படி இருக்கையில் அஜித்துடன் மூணு படங்கள் முடிச்சிட்டீங்க. எப்படி இது சாத்தியமாச்சு?’’

‘‘அவர் உழைப்பின்மேல் நான் வெச்சிருக்கிற மரியாதை; என் உழைப்பின் மேல் அவர் வெச்சிருக்கிற மரியாதை. இந்த காம்பினேஷன் தொடர இது மட்டும்தான் காரணம். ‘இதைச் செய்யுங்க சார்’னு ஒரு காட்சியை அவர்கிட்ட சொல்றேன்னா, அதுக்கு முன்னாடி ‘இந்தக் காட்சியில் அஜித் சார் பெர்ஃபார்ம் பண்ணினால் எப்படி இருக்கும்?’னு எனக்குள் 100 முறையாவது யோசிச்சு உறுதியா இறுதியா ஒரு முடிவுக்கு வந்திருப்பேன். உதாரணத்துக்கு, ஒரு காட்சியில  பனிமலையிலிருந்து அவர் உருண்டு வரணும்னு எழுதியிருந்தேன். ஸ்பாட்ல போய் அந்தக் காட்சியை அவர்கிட்ட விவரிக்கும்போதுதான், ‘இதை எப்படிப் பண்ண முடியும்? ஸ்டன்ட்மேன் வெச்சுப் பண்ணிக்கலாமா’னு என் மனசுக்குள் யோசனை. நான் நினைக்கிறதைப் புரிஞ்சுக்கிட்டவர், ‘பயப்படாதீங்க’னு சொன்னார். ‘இல்லை சார்...’னு இழுத்தேன். ‘பண்ணிடலாம் சிவா. ஒண்ணும் ஆகாது’னு சொல்லிட்டு, கிடுகிடுனு மலை ஏற ஆரம்பிச்சுட்டார். ‘இதை அவரால் செய்ய முடியும். அதுக்கான உடல் பலமும் மன பலமும் அவருக்கு இருக்கு’ங்கிற என் நம்பிக்கைமீது அவர் வெச்சிருக்கிற பரஸ்பர புரிதல்லதான் திரும்பத் திரும்பப் படங்கள் பண்றோம். இது எல்லாத்துக்கும் மேல கடவுள் நம்பிக்கை. இந்த ரெண்டும் இருக்கும்போது நிச்சயம் நமக்கு எந்த விதமான பிரஷரோ, மனஸ்தாபமோ, தடையோ, சண்டையோ வராது. பாசிட்டிவ்வா இருப்போம். நல்லதே பேசுவோம். நல்லதே நடக்கும்னு நம்வுவோம்.’’

‘‘விஜய்யை வெச்சு நீங்க படம் பண்ணப்போறதா சில செய்திகள் வந்ததே?’’

‘‘சின்ன வயசுல இருந்தே விஜய் சாரை எனக்குத் தெரியும். பலமுறை சந்திச்சிருக்கேன். நல்ல பழக்கம். நல்ல நண்பர். நிச்சயம் அவருக்கும் படங்கள் பண்ணுவேன். இவங்க ரெண்டு பேரும் இவ்வளவு உயரத்துல இருக்கிறதுக்கான பொதுவான குணமா நான் பார்க்கிறது, உழைப்பு. அதேபோல ரெண்டு பேருமே அவங்களோட பலத்தை அறிஞ்சவங்க. இருவருமே அதிகம் பேச மாட்டாங்க. உயரத்தில் இருப்பதற்கான குணங்கள்ல இதுவும் ஒண்ணுனு நினைக்கிறேன்.’’