Published:Updated:

அஜித் அன்பானவர்... விஜய் அசராதவர்!

அஜித் அன்பானவர்... விஜய் அசராதவர்!
பிரீமியம் ஸ்டோரி
அஜித் அன்பானவர்... விஜய் அசராதவர்!

ஆர்.வைதேகி

அஜித் அன்பானவர்... விஜய் அசராதவர்!

ஆர்.வைதேகி

Published:Updated:
அஜித் அன்பானவர்... விஜய் அசராதவர்!
பிரீமியம் ஸ்டோரி
அஜித் அன்பானவர்... விஜய் அசராதவர்!

விஜயுடன் ‘மெர்சல்’, அஜித்துடன் ‘விவேகம்’ எனத் தமிழ் சினிமாவின் இப்போதைய ட்ரெண்டிங் தேவதை காஜல் அகர்வால்.

``ரொம்பவே சந்தோஷமா இருக்கேன். விஜய் சார்கூட இது எனக்கு மூணாவது படம். கம்ஃபர்ட் லெவல் இன்னும் அதிகமாயிருக்கு. அஜித் சார்கூட முதல் படம்.  முதல் படம்னு தெரியாத அளவுக்கு அதே கம்ஃபர்ட் லெவலை ஃபீல் பண்ண வெச்சார். ரெண்டு பேருமே பிரமாதமான ஹீரோஸ். ரொம்ப புரொஃபஷனல்.  அவங்க மட்டுமில்லை. ரெண்டு படத்தோட டைரக்டர்ஸ், மொத்த டீம்,  என்னோட கேரக்டர்ஸ்னு ரெண்டு படங்களுமே என் கரியர்ல ரொம்ப ஸ்பெஷலா ஃபீல் பண்ண வெச்சிருக்கு” உற்சாகமாகப் பேசுகிறார் காஜல்.

அஜித் அன்பானவர்... விஜய் அசராதவர்!

``கிளாமர் டாலாவே இருக்கீங்களே... நடிப்புக்காகப் பேசப்படணும்னு நினைப்பில்லையா?’’

``ஸ்ட்ராங்கான பெண்களைப் பற்றிய கேரக்டர்ல நடிக்கணும்னு எனக்கும் ஆசை இருக்கு. அப்படியொரு வாய்ப்பு வந்தா, எக்ஸ்பரிமென்ட் பண்ண நானும் ரெடியாதான் இருக்கேன். ‘பிங்க்’ படத்துல டாப்ஸி பண்ணின மாதிரியான கேரக்டர் பண்ணணும்.”

``நடிகையா உங்களுக்கு இருக்கிற முக்கியமான பிரச்னை?’’

``தூக்கமில்லாத இரவுகள். ட்ராவல்லையே  வாழ்க்கையோட பெரும்பகுதி போயிட்டிருக்கு. நல்லா தூங்கிப் பல வருஷங்களாச்சு. அளவுக்கு அதிகமான ஹார்டுவொர்க் தேவைப்படற ஃபீல்டு இது. ஆனா, உழைப்புக்கேத்த அங்கீகாரமோ, பாராட்டோ கிடைக்காது. அப்பல்லாம் நம்மளை மோட்டிவேட் பண்ண சில ஆட்கள் தேவை. மேக்னட் மாதிரி அப்படிச் சில பேர் எனக்கு நண்பர்களா இருக்கிறார்கள்.”

``சினிமாவைச் சேர்ந்த ஒருத்தரை லைஃப் பார்ட்னரா தேர்ந்தெடுப்பீங்களா?

“அதைப்பற்றி நான் யோசிக்கலை. உண்மையைச் சொல்லணும்னா,  இதுவரைக்கும் அப்படி யாரையும் சந்திக்கலை. சினிமான்னு இல்லை, எந்த ஃபீல்டுலேயுமே ஒரே துறையைச் சேர்ந்தவங்களைவிட, வேற வேற துறைகளைச் சேர்ந்தவங்க லைஃப்ல இணையறபோது அவங்களுக்குள்ள அண்டர்ஸ்டாண்டிங் பெட்டரா இருக்கும்னு நினைக்கிறேன். என்னோட லைஃப் பார்ட்னர் சின்சியரா இருக்கணும். என்னைப் புரிஞ்சுக்கணும். என்னை அப்படியே ஏத்துக்கணும். சொந்தக்கால்ல நின்னு ஜெயிக்கிறவரா இருக்கணும். இவ்வளவுதான் என் எதிர்பார்ப்புகள்.’’

``தமிழ் சினிமாவின் டாப் ஸ்டார்ஸ் அஜித், விஜய், சூர்யா என மூன்று பேர்கூடவும் நடிச்சிருக்கீங்க. அவங்களைப் பற்றிச் சொல்லுங்க?’’

“விஜய்னா ஹார்டுவொர்க்கிங். ஸ்பாட்ல அமைதியா இருப்பார். ஆனால், கேமரா ரோல் ஆக ஆரம்பிச்சதும் நடிப்புல அசரடிப்பார். வெற்றிகளைத் தலையில ஏற்றிக்கொள்ளாத அந்தப் பக்குவத்தை நானும் கத்துக்கணும்னு நினைக்கிறேன்.

அஜித் அன்பானவர்... விஜய் அசராதவர்!

அஜித்னா அன்பு, மரியாதை. செட்ல உள்ள எல்லோரையும் சமமா நடத்துற அந்த அன்பும், மரியாதையும்தான் அவரோட ஸ்பெஷல். அட்வைஸ் பண்ற டைப் இல்லை அவர். சும்மா அவரைக் கவனிச்சுக்கிட்டு இருந்தாலே நிறைய கத்துக்கலாம். அப்புறம் அவரோட பிரியாணி; எனக்கும் செய்து கொடுத்தார். ப்பா... சான்ஸே இல்லை.

சூர்யா, பிரமாதமான நடிகர். நடிப்புல மாஸ்டர். ஒரு கேரக்டருக்காக அவ்வளவு மெனக்கெடுவார்.’’

`` `விவேகம்’ படம் பற்றி விஜய்யோ, `மெர்சல்’ படம் பற்றி அஜித்தோ உங்ககிட்ட விசாரிப்பாங்களா?’’

“சான்ஸே இல்லை. அவங்க ரெண்டு பேருமே ஒருத்தர் மேல ஒருத்தர் நிறைய அன்பும் மரியாதையும் வெச்சிருக்காங்க. என்னோட அடுத்த படங்களைப் பற்றி கேஷுவலா விசாரிப்பாங்களே தவிர, அதைத் தாண்டி என் பட ஹீரோஸ் பற்றி ரெண்டு பேருமே கேட்டதில்லை.”