Published:Updated:

“தெனிஷாவைப் பார்த்ததும் ஃபீலாகிட்டேன்!”

“தெனிஷாவைப் பார்த்ததும் ஃபீலாகிட்டேன்!”
பிரீமியம் ஸ்டோரி
“தெனிஷாவைப் பார்த்ததும் ஃபீலாகிட்டேன்!”

பா.ஜான்ஸன், படங்கள்: க.பாலாஜி

“தெனிஷாவைப் பார்த்ததும் ஃபீலாகிட்டேன்!”

பா.ஜான்ஸன், படங்கள்: க.பாலாஜி

Published:Updated:
“தெனிஷாவைப் பார்த்ததும் ஃபீலாகிட்டேன்!”
பிரீமியம் ஸ்டோரி
“தெனிஷாவைப் பார்த்ததும் ஃபீலாகிட்டேன்!”

``பரவாயில்லையே... வீட்டு அட்ரஸை கரெக்டா கண்டுபிடிச்சு வந்துட்டீங்க போல! வழக்கமா கேப் புக் பண்ணா, அது பக்கத்துத் தெருவுக்குதான் போகும். கேப் டிரைவர் கன்னாபின்னான்னு கோபப்படுவார். ஒருத்தனுக்கு எப்படியெல்லாம் சோதனை வருது பார்த்தீங்களா ஜி?’’ என்றபடியே வரவேற்கிறார் டேனியல் ஆனி போப். ``ஃப்ரெண்ட் ஃபீலாகிட்டாப்ல...’’ எனச் சிரிக்கவைத்தவர், `ரங்கூன்’ படத்தில் வில்லத்தனம் காட்டியிருந்தார்.

``என்ன பிரதர்... வில்லனா புரமோட் ஆகிட்டீங்கபோல?” எனக் கேட்டால், ``அட, அதை ஏன் கேட்கிறீங்க பிரதர்? `ரங்கூன்’ படம் தியேட்டர்ல பார்த்திட்டிருந்தேன். இன்டர்வெல்ல, ஒரு பாட்டி என்னைக் கண்டுபிடிச்சு `நல்லா நடிச்சிருக்கப்பா’ன்னு சொல்லிப் பாராட்டினாங்க. `அப்படியா ஆயா, இன்டர்வெல்லுக்கு அப்புறமும் படம் பார்த்துட்டுச் சொல்லு’ன்னு சொன்னேன். படம் முடிஞ்சதும் என்னைப் பார்த்து, `சே! உன்னைப்போய் நல்லவன்னு நினைச்சேனே. இப்படிப் பழகின பையனையே ஏமாத்துறியே’ன்னு செம திட்டு. அவங்களைச் சமாதானப்படுத்தி அனுப்புறதுக்குள்ள ஒருவழியாகிட்டேன். படம்கிறதையே மறந்துட்டு இப்படித் திட்டுற அளவுக்கு நாம நடிக்கிறோம்னு நினைச்சு சந்தோஷமா இருந்தது. ஆனா, `இனிமே வில்லன்தானா?’னு எல்லோரும் கேட்க ஆரம்பிச்சதும் பயமா இருந்தது. அந்த நேரம் பார்த்து `மரகத நாணயம்’ ரிலீஸ் ஆகி, அதைச் சரி செஞ்சிருச்சு” என்றபடி தன் குடும்பத்தினரை அறிமுகம் செய்யத் தொடங்குகிறார்.

“தெனிஷாவைப் பார்த்ததும் ஃபீலாகிட்டேன்!”

``அம்மா பேரு லீமா, என்னையும் என் சேட்டை களையும் பொறுத்துக்கிட்டு இப்போ இந்த அளவுக்கு வளர்த்திருக்காங்க. அம்மா மாதிரியே அப்பாவும் என் வாழ்க்கையில் ரொம்ப முக்கியம். அவருக்கும் எனக்கும் எப்பவுமே செட் ஆகாது. அவர் சொல்றது எதையும் செய்யவே மாட்டேன். அவர் இறக்கிறதுக்கு எட்டு வருஷம் முன்னாடிதான் அவர்கூட கொஞ்சம் நெருக்கமா இருந்தேன். `இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்துக்குப் பிறகு, அடுத்து எந்தப் படமும் வரலையே... அடுத்த படம் எப்போ?னு கேட்டுட்டே இருப்பார். அடுத்த படத்தைப் பார்க்க அவர் இப்போ இல்லையேங்கிறது எனக்கு ரொம்ப வருத்தம்.

அதுக்குப் பிறகு, எனக்கு ஆதரவா இருக்கிறது என் அண்ணன்கள். ஒருத்தர் வெளிநாட்டில் இருக்கார். இன்னொரு அண்ணன் இங்கே இருக்கார். இவர் பேரும் டேனியல்தான். என்ன பண்றதுன்னு தெரியாம சுத்திக்கிட்டிருந்தப்போ, என் கரியரையே மாற்றி சப்போர்ட் பண்ணது அண்ணன்தான்” என டேனியல் சொல்லும்போது, ``அதெல்லாம் ஒண்ணும் இல்லைங்க. வீட்டைப் பொறுத்தவரை இவனுக்கு  ஜீரோ சப்போர்ட்தான்.    ப்ள்ஸ் டூவுக்குப் பிறகு விஸ்காம் சேரணும்னு ஆசைப்பட்டான். ஆனா, லயோலா காலேஜ்ல அட்மிஷன் முடிஞ்சிருந்தது. ஆனா, இவனுடைய முயற்சிகளைப் பார்த்து எக்ஸ்ட்ராவா ஒரு சீட் சேர்த்தாங்க. அப்படி ஒவ்வொரு முயற்சியும் இவனாத்தான் பண்ணுவான்” என்கிறார் டேனியலின் அண்ணன் டேனியல்.

``எல்லாமே நானா பண்ணேன்னு சொல்ல முடியாது’’ எனப் பேச்சைத் தொடர்கிறார் டேனியல். ``என்னோட நடிப்பு ஆர்வத்தைத் தொடங்கி வெச்சது என்னுடைய சயின்ஸ் டீச்சர்தான். ஹோம்வொர்க் செய்யாதவங்களை அடிப்பார். அப்படி என்னை அடிக்க வரும்போது மட்டும் வயித்தவலி, தலைவலின்னு நடிச்சு ஏமாத்திடுவேன். அங்கே தொடங்கிய என் நடிப்பு ஆர்வம், 72 மணி நேரம் நாடகம் நடிச்சு கின்னஸ் ரெக்கார்ட் பண்ற அளவு போச்சு.

சரி ஓகே, இனி சினிமாவுல நடிக்கலாம்னு முடிவுபண்ணேன். வெற்றிமாறன் சார் தனுஷை வெச்சு, `பொல்லாதவன்’ படம் பண்றார்னு கேள்விப்பட்டு, அவரைப் பார்த்து வாய்ப்பு கேட்டேன்.   `எல்லா கேரக்டர்களும் முடிவாகிடுச்சு, பேட்ச் வொர்க் இருக்கும். அதுல வேணும்னா பண்ணு’ன்னார். முதல் வாய்ப்பாச்சேனு மறுக்காம பண்ணேன். அதுக்குப் பிறகு, ஃப்ரேம்ல காலி இடம் நிரப்பறதுக்கு நிற்கவைக்கும்படியான ரோலாவே வந்தது. கொஞ்சம் கேப் எடுத்துக்கலாம்னு டி.வி பக்கம் போயிட்டு, நிறைய நிகழ்ச்சிகள் பண்ணேன். அப்போதான் `இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ வாய்ப்பு வந்தது. அதுக்குப் பிறகு, கடைக்குப்போனாகூட, `வாங்க சுமார் மூஞ்சி குமாரு, சாப்பிடுறீங்களா?’னு கேட்பாங்க. `நான் குமாரு இல்லீங்க, என் பேரு டேனியல்’னு சொன்னாலும் நம்ப மாட்டாங்க. அந்த அளவுக்கு ரீச்.

“தெனிஷாவைப் பார்த்ததும் ஃபீலாகிட்டேன்!”

இவங்க தெனிஷா, எங்க ரெண்டுபேருக்கும் காலேஜ்ல இருந்தே பழக்கம். நான் ரொம்பக் கஷ்டப்பட்டுக்கிட்டிருந்தப்போ படம் வரல. எதுவும் சரியா நடக்கலைனு குழப்பத்தில் இருந்தப்போ, எனக்கு ரொம்ப சப்போர்ட்டா இருந்தது தெனிஷாதான். அதான் ஃபீலாகிட்டேன். சீக்கிரமே ரெண்டு பேருக்கும் கல்யாணம்’’ என தெனிஷாவை அறிமுகப்படுத்துகிறார் டேனியல்.

“தெனிஷாவைப் பார்த்ததும் ஃபீலாகிட்டேன்!”

``டேனியல் நிஜத்திலும் செம ஜாலி டைப்தானா?’’ என தெனிஷாவிடம் கேட்டால், ``டேனியல் என்ன பேசினாலும் எனக்குச் சிரிப்புதான் வரும்’’ என்ற தெனிஷாவிடம், ``ஜோக்கர் மாதிரி தெரியறேனா உனக்கு?’’ எனச் செல்லமாகத் தட்டுகிறார் டேனியல். ``அதெல்லாம் இருக்கட்டும். நீங்க படம் இயக்கறதுக்குக் கதையெல்லாம் எழுதியிருக்கீங்களாமே?’’ எனக் கேட்டார் டேனியலின் அண்ணி டயானா,  ``அதைப்பற்றிச் சொல்லியே ஆகணும். நடிப்புல ஓரளவு வந்திட்டேங்கிறது சந்தோஷம். அதே மாதிரி எனக்குப் படம் இயக்கணும்னு ஆர்வம் இருக்கு. போன வருஷத்திலிருந்து தொடங்கி, ஒரு கதை எழுத ஆரம்பிச்சேன். இப்போ முழுசா தயாராகிடுச்சு. சீக்கிரமே டைரக்‌ஷன் வேலைகளையும் தொடங்கிடுவேன். கூடிய சீக்கிரமே என்னை ஒரு இயக்குநரா பேட்டி எடுப்பீங்க. நம்புங்க பாஸ்’’ எனச் சிரிக்கிறார் டேனியல்.

டேனியல் ஃபீலாகிட்டாப்ல!