Published:Updated:

“கடைசி வரைக்கும் சினிமா சோறுதான் சாப்பிடணும்!”

“கடைசி வரைக்கும் சினிமா சோறுதான் சாப்பிடணும்!”
பிரீமியம் ஸ்டோரி
“கடைசி வரைக்கும் சினிமா சோறுதான் சாப்பிடணும்!”

முத்து பகவத், படங்கள்: க.பாலாஜி

“கடைசி வரைக்கும் சினிமா சோறுதான் சாப்பிடணும்!”

முத்து பகவத், படங்கள்: க.பாலாஜி

Published:Updated:
“கடைசி வரைக்கும் சினிமா சோறுதான் சாப்பிடணும்!”
பிரீமியம் ஸ்டோரி
“கடைசி வரைக்கும் சினிமா சோறுதான் சாப்பிடணும்!”

``என்னைப் பார்க்கிற எல்லோருமே ‘ஹலோ முனிஸ்காந்த்’னு கூப்பிட்டுட்டு, ‘ஆமா உங்க பேர் என்ன?’னு கேட்பாங்க. என் பெயர் ராமதாஸ்னு பலருக்கும் தெரியாது. மக்களுக்கு எந்தப் பெயர் பிடிக்குதோ, அந்தப் பெயரே நமக்குப் போதும்னே” - யதார்த்தமாகப் பேசுகிறார் முனிஸ்காந்த் என்கிற ராமதாஸ். `மாநகரம்’, `மரகத நாணயம்’ என சமீபத்திய படங்களில் வெரைட்டி காட்டியவர்.

“அப்பாவுக்கு நிலக்கோட்டைல வேலை கிடைக்கவே, அங்கேயே செட்டிலாகிட்டோம். நான் எட்டாவது படிக்கும்போதே அப்பா தவறிட்டார். அவர் வேலை என் அண்ணனுக்குக் கிடைச்சது. அம்மாதான் எங்களை வளர்த்தாங்க.  எட்டாவது வரைக்கும்தான் படிச்சேன். படிப்பு ஏறலை. ஊர்ல கொஞ்சநாள் வேலை செய்துட்டிருந்தேன். அப்புறம் மலேசியாவுக்குப் போனேன்.

“கடைசி வரைக்கும் சினிமா சோறுதான் சாப்பிடணும்!”

மலேசியா - சிங்கப்பூர் பார்டர்லதான் வேலை. இந்திய அரசு எடுத்திருந்த கான்ட்ராக்ட் அது. ரயில்வே டிராக் போடுற வேலை. நிறைய படங்கள் பார்ப்பேன். நடிக்கணும்னு ஆசை இருந்ததால, அங்கே இருந்து நேரா சென்னைக்கு வந்துட்டேன். சினிமான்னா எனக்குத் தெரிஞ்சது வடபழனியும் கோடம்பாக்கமும்தான். மீனம்பாக்கம் ஏர்போர்ட்ல இறங்கவும் வெளியே வடபழனி பஸ்தான் நின்னுச்சு. கிளம்பிட்டேன்.

ஏ.வி.எம்-ஸ்டூடியோவுக்கு எதிர்ல இருந்த நண்பர் வீட்டில் தங்கியிருந்தேன். ஆரம்பத்தில் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை தேடி அலைஞ்சேன். `நாளைய இயக்குநர்’ வந்த சமயம், ‘முண்டாசுப்பட்டி’ குறும்படத்தில் முனிஸ்காந்த் கேரக்டருக்கு நாடகக் கலைஞர் ஒருத்தர் நடிச்சிருந்தார். அவரால டப்பிங் பேச வர முடியலை. அவருக்கு பதில் நான் டப்பிங் பேசினேன். ‘தைக்குப் பிறகு தமிழ் சினிமாவுல மூணே பேருதான்...’ இதுதான் நான் பேசிய முதல் டயலாக். எனக்கும் இயக்குநர் ராம்குமார் சாருக்கும் அதிகப் பழக்கம் கிடையாது. அவரிடம் அடிக்கடி வாய்ப்புக் கேட்பேன். ஒருநாள் முனிஸ்காந்த் கேரக்டருக்கான ஸ்க்ரிப்ட் கொடுத்துப் படிக்கச் சொன்னார். ஆயிரம் ரூபாய் கொடுத்து, 80-களின் காஸ்ட்யூமோடு வரச் சொன்னார். நடிச்சும் காட்டினேன். எல்லோருக்கும் பிடிச்சுப்போச்சு. முனிஸ்காந்த் கேரக்டர் இன்றுவரைக்கும் என்னோட அடையாளமாகிடுச்சு” என்றபோது, அவரின் அம்மா தேநீருடன் வந்தார்.

“சின்ன வயசுல படின்னு சொன்னா படிக்கவே மாட்டான். இவன் பண்ணின சேட்டைக்கு இவ்வளவு தூரம் வருவான்னு நினைச்சுக்கூடப் பார்க்கலை. மலேசியாவுல இருந்து நேரா ஊருக்கு வருவான்னு பார்த்தா, சென்னைக்குப் போயிட்டான். சினிமாவுல நடிக்கிறாங்கிற விஷயம்கூட ஆரம்பத்துல எனக்குத் தெரியாது. `முண்டாசுப்பட்டி’ படம் பார்த்தபிறகுதான் நம்பினேன்.” என்று சொல்லும்போதே அவர் கண்களிலிருந்து ஆனந்தக் கண்ணீர். அம்மாவைத் தேற்றியபடியே பேசுகிறார் ராமதாஸின் தம்பி ராம்குமார்.

“கடைசி வரைக்கும் சினிமா சோறுதான் சாப்பிடணும்!”

“எனக்கு அப்பா மாதிரிதான் என் அண்ணன். நான் ஆறாவது படிக்கும்போது இவரைப் பார்த்தது. அதுக்கு அப்புறம் கல்லூரி படிக்கும்போதுதான் மறுபடியும் சந்திச்சேன். முதல்ல யார்னு அடையாளம் தெரியலை. அந்தக் கஷ்டமெல்லாம் எங்களுக்கு அப்போ தெரியலை. அவர் பேட்டிகள் பார்த்துதான் இப்போ எங்களுக்கே தெரியும். அவரோட கஷ்டங்களை வீட்டுல சொன்னதே கிடையாது. `வீட்டோட ஆதரவு இருந்தா, சினிமாவில் ஜெயிச்சுடலாம்’னு நண்பர்கள் சொல்வாங்க. நாங்க அப்படி எதுவும் அவருக்குப் பண்ணதில்லை.” என்ற தம்பியின் ஃபீலிங்குக்கு பின்னணி இசை கொடுத்துச் சிரிக்கவைத்தார் ராம்தாஸ்.

``கல்யாணம் மட்டும் பண்ணிவெச்சுட்டோம்னா, கொஞ்சம் ஹேப்பியாகிடுவோம். சினிமாக்காரன்கிறதனால பொண்ணு கொடுக்கப் பயப்படுறாங்க. சொந்தத்துலேயே சினிமாவுக்குப் போன முதல் ஆள் இவர்தான்.

ஊர்ல இருக்கும் குலசாமி கோயிலுக்குக் குடும்பத்தோடு போயிருந்தோம். சொந்தக்காரங்க மத்தியில அண்ணனுக்கு செம வரவேற்பு. உடனே எங்க அம்மா, `அப்படியே பொண்ணு இருந்தா சொல்லுங்க’னு சொல்லவும், `சின்னவனுக்குத்தானே பார்த்திடலாமே’னு சொன்னாங்க. `இல்லைங்க ராமதாஸுக்குப் பொண்ணு பார்த்திட்டி ருக்கோம்’னு சொல்லவும், சொந்தக்காரங்க பின்வாங்கிட்டாங்க” என்றார் தம்பி.

“பார்த்திபன் சார் ஒருநாள் கூப்பிட்டுப் பேசினார். `மாநகரம்’ படம் பார்த்தேன். ரொம்ப நல்லா இருந்துச்சு. கதை பண்ணிட்டிருக்கேன். சீக்கிரமே கூப்பிடுறேன்’னு சொன்னார். ‘கண்டிப்பா கூப்பிடுங்க சார்’னு சொன்னேன். ‘எதுக்குக் கண்டிப்பா கூப்பிடணும்? அன்பாவே கூப்பிடுறேன். வாங்க’னு அவர் ஸ்டைல்ல பேசினார்.

சினிமாவைப் பொறுத்தவரைக்கும் நாம ஒண்ணு நினைப்போம், வேற ஒண்ணு நடக்கும்.  என்னவானாலும் கடைசிவரைக்கும் சினிமா சோறுதான் சாப்பிடணும். என்னோட எதிர்காலம் பற்றி இப்போதைக்கு யோசிக்கலை. காலம் போறபோக்குல போயிட்டே இருக்கவேண்டியதுதான். இந்த மகிழ்ச்சி இன்றைக்குப் போதும். நான் சொல்றது சரிதான்னே” தன்னுடைய ஸ்டைலில் சிரிக்கிறார் முனிஸ்காந்த்!