Published:Updated:

இவன் தந்திரன் - சினிமா விமர்சனம்

இவன் தந்திரன் - சினிமா விமர்சனம்
பிரீமியம் ஸ்டோரி
இவன் தந்திரன் - சினிமா விமர்சனம்

இவன் தந்திரன் - சினிமா விமர்சனம்

இவன் தந்திரன் - சினிமா விமர்சனம்

இவன் தந்திரன் - சினிமா விமர்சனம்

Published:Updated:
இவன் தந்திரன் - சினிமா விமர்சனம்
பிரீமியம் ஸ்டோரி
இவன் தந்திரன் - சினிமா விமர்சனம்

ல்விக் கொள்ளை அமைச்சரின் கண்ணில் விரலைவிட்டு ஆட்டும் ரிச்சி ஸ்ட்ரீட் இளைஞனே ‘இவன் தந்திரன்.’

மத்தியக் கல்வி அமைச்சர் சூப்பர் சுப்பராயன் வீட்டில் கெளதம் கார்த்திக்கும், ஆர்.ஜே.பாலாஜியும் சி.சி.டி.வி மாட்டப் போகும்போது, அதற்கான பணத்தைத் தராமல் அவமானப்படுத்துகிறார் அவரின் மைத்துனர் ஸ்டன்ட் சில்வா. இந்தக் கொடுக்கல் வாங்கல் தகராறின்போது அமைச்சரின் தில்லாலங்கடித் திருட்டுத்தனங்கள் தெரியவருகின்றன. பணம் தராத அமைச்சரைப் பழிவாங்குவதற்காகக் கௌதம் செய்யும் ஒரு வேலையால், அமைச்சரின் பதவி காலி ஆகிறது. ஆவேச அமைச்சரின் கோபத்திலிருந்து தந்திரமாய்த் தப்பினாரா தந்திரன் என்பதுதான் கதை.

இவன் தந்திரன் - சினிமா விமர்சனம்

கௌதம் கார்த்திக்கின் நடிப்பில் இப்போதுதான் மாற்றம்; முன்னேற்றம். ஹீரோயினை விட அதிகக் காட்சிகளில் வரும் ஆர்.ஜே.பாலாஜி, அதற்கு ஏற்றாற்போல் ஸ்கோரும் செய்கிறார். ‘பொறந்த குழந்தைய பாக்க வரணும்னாகூட ஆறு மாசம் ஆகும்’ என்று ஐ.டி இளைஞர்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டுவது, ‘உன் சம்பளத்தை அமெரிக்காக்காரன் முடிவு பண்ணுவான், ஆனா இங்க நான்தான் ஓனர்’ என்று ஐ.டி-யைக் கலாய்ப்பது... இப்படி இன்ஜினீயரிங்கின் ப்ளஸ், மைனஸ் என எது பேசினாலும், ஆர்.ஜே.பாலாஜி அதிரடி. கன்னடத்திலிருந்து தமிழுக்கு ‘யூ-டர்ன்’ போட்டு வந்திருக்கும் ஷ்ரதா ஸ்ரீநாத் திறமையான அறிமுகம்.

தோற்றத்துக்கு ஏற்றபடி மிரட்டலான கதாபாத்திரம் இல்லாததால், சாதாரண அடியாள் போல வந்துபோகிறார் சூப்பர் சுப்பராயன்.

`ஃபேஷன் பசியை நிரப்பாது’, `சி.பி.ஐ-கிட்ட போனா அது மக்களுக்குத் தெரியாது - மக்கள்கிட்ட போனா, அது கண்டிப்பா சி.பி.ஐ-கிட்ட போகும்’, `மரணத்தைவிட கொடுமையானது ஒருத்தனோட திறமையை

இவன் தந்திரன் - சினிமா விமர்சனம்

மறுக்கிறதும், மறைக்கிறதும்தான்’ என்று வசனங்களில் கவனிக்க வைக்கிறார் இயக்குநர் கண்ணன். ரிவர்ஸ் இன்ஜினீயரிங், பொம்மை ஈ-யில் பக் கேமிரா, பணத்தைக் கண்டுபிடிக்க வைக்கும் ட்ரான்ஸ்மீட்டர் எனப் பல டெக்னிக்கல் விஷயங்களை வைத்து வடிவமைக்கப்பட்டிருக்கும் கதை நகர்வு சுவாரஸ்யம். இருந்தாலும், காட்சிகளில் இன்னும் நம்பகத்தன்மை கூட்டியிருக்க வேண்டும்.

தமனின் பின்னணி இசை  படத்தின் வேகத்தை அதிகரித்துப் பாடல்களில் ஸ்பீட் பிரேக் போடுகிறது. பிரசன்னா.எஸ்.குமாரின் ஒளிப்பதிவு படத்துக்குப் பலம்.

காலங்காலமாகத் தொன்றுதொட்டுத் தொடரும் ஹீரோ-வில்லன் மோதலுக்குள் போகாமல், புற்றீசல்போல பெருகிவரும் இன்ஜினீயரிங் கல்லூரிகள், வேலையில்லா அவலம், தரமற்ற கல்வி இப்படி சீரியஸ் விஷயங்களை  அழுத்தமாக அணுகியிருந்தால், இன்னும் கூட உயரம் தாண்டியிருப்பான் இந்தத் தந்திரன்.

- விகடன் விமர்சனக் குழு