Published:Updated:

கலைஞரும் ஜெயலலிதாவும் எனக்கு இரண்டு கண்கள்!

க.நாகப்பன்படங்கள் : கே.ராஜசேகரன்

கலைஞரும் ஜெயலலிதாவும் எனக்கு இரண்டு கண்கள்!

க.நாகப்பன்படங்கள் : கே.ராஜசேகரன்

Published:Updated:
##~##

மீதா பேட்டிக்குக் காரணங்கள் எதுவும் வேண்டுமா என்ன?

 இப்போது இன்னும் கும்மென இருக்கிறார். ஆனால், இன்னும் அழகாக!

''என்ன மச்சான்... எப்புடி இருக்குது?'' என்று நமிதா வரவேற்கும் அழகுக்கே இன்னும் சில நூறு பேட்டிகள் எடுக்கலாம்!  

''கொஞ்ச நாள் மும்பைல இருந்தேன். அங்க பாலாஜினு ஒரு கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனி நான் ஆரம்பிச்சிருக்கு. ரியல் எஸ்டேட், இன்டீரியர் டிசைனிங்னு பிஸி பிஸி. இப்போ கம்பெனி நல்லா ரன் ஆகுது. சென்னை மிஸ் பண்ணுதுனு கிளம்பி வந்துட்டேன். இனி நீங்க நமீதாவை அடிக்கடி பார்க்கலாம்!''

''திடீர்னு வெயிட் போட்டுட்டீங்கபோல?''

''ஒரே வாரத்துல என்னால பதினஞ்சு கிலோ வெயிட் ஏத்தவும் குறைக்கவும் முடியும். அதுலாம் ஒரு மேட்டரே இல்லை மச்சான்!''  

''நமீதா ஃபீவர் ஓவர்னு சொல்றாங்களே... அப்படியா?''

''அப்படியா என்ன? இப்பவும் ஃபங்ஷன்களில் என்னைப் பார்த்ததுமே மச்சான்ஸ் சந்தோஷப்படுது. சென்னையில் ஒரு ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் போனேன். லிஃப்ட்ல ஒரு மச்சான் பார்த்துட்டு,  'நான் நமீதாவை நேர்ல பார்த்துட்டேன்’னு ஜம்ப் பண்ணிட்டே இருந்தார். நான் அவரை கூல் பண்ணினேன். ஐ யம் ஹேப்பி அண்ட் ஐ யம் பேக்!''

கலைஞரும் ஜெயலலிதாவும் எனக்கு இரண்டு கண்கள்!

''ஷூட்டிங் இல்லாத நாட்களில் அப்படி என்னதான் பண்ணுவீங்க?''

''நல்லா சாப்பிடுவேன். ஹாயா தூங்குவேன். யோகா பண்ணுவேன். டி.வி-யில் கார்ட்டூன், அனிமேஷன், கிரைம் த்ரில்லர் படங்கள் பார்ப்பேன்!''

''உங்களுக்குப் பிடிச்ச கிளாமர் ஹீரோயின்?''

''நான்தான். எனக்கு யாரும் ஆல்டர்னேட்டிவ் கிடையாது. 'தி டர்ட்டி பிக்சர்’ படத்துல சில்க் கேரக்டருக்கு வித்யாபாலன் தப்பு சாய்ஸ்னு சொல்வேன். 'அந்த கேரக்டருக்கு நீதான் ஃபிட்’னு என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் சொல்லிச்சு. யோசிச்சா அதுதான் கரெக்ட். தமிழ்ல அந்தப் படத்தை யாராச்சும் எடுத்தா... நான் சூப்பர் கிளாமரா நடிப்பேன்!''  

''உங்க சினிமா ஃப்ரெண்ட்ஸ் யார் யார்?''

''ஃப்ரெண்ட்ஸ்லாம் அதிகம் இல்லை. நான் ஜாஸ்தி பேச மாட்டேன். பரத், சினேகா, ரீமா சென்கிட்ட அப்பப்போ பேசுவேன். அப்புறம் குஷ்பு எனக்கு அக்கா மாதிரி. அவ்ளோதான்!''

''போன ஆட்சிக் காலத்தில் முன் னாள் முதல்வர் கருணாநிதி திரைக் கதை அமைத்த படத்தில் நடிச்சிருக்கீங்க... இப்போ ஆட்சி மாறியிருச்சு. ஜெயலலிதா அரசாங்கம் பத்தி என்ன ஃபீல் பண்றீங்க?''

''நான் கலைஞர் சார் படத்துல தானே நடிச்சேன். கட்சியில் சேரலையே? இப்பவும் கலைஞர் படத்துல நடிப்பேன். அம்மா சார்பா படம் எடுத்தாலும் நடிப்பேன். நான் நியூட்ரல் பொண்ணு. தமிழ்நாட்டுக்கு அவங்க ரெண்டு பேரும் ரெண்டு கண் மாதிரி. எனக்கு ரெண்டு கண்களும் பிடிக்கும்!''

கலைஞரும் ஜெயலலிதாவும் எனக்கு இரண்டு கண்கள்!

''விழாக்களுக்கு நடிகைகள் குட்டைப் பாவாடை அணிந்து வரக் கூடாதுனு சர்ச்சை ஆகியிருக்கே. ஆனா, குஷ்பு இதை எதிர்த்து இருக்காங்க. உங்க கருத்து என்ன?''

''மினி ஸ்கர்ட் எனக்கு ரொம்ப வசதியா இருக்கு. நான் ஷார்ட் டிரெஸ் போட்டாதான்... மச்சான்ஸ் ரசிக்குது. அதுதான் என் லேபிள். ஆடியோ ரிலீஸ், பட ரிலீஸ்னு போனா ஜீன்ஸ், டி-ஷர்ட்தான் போட்டுப்பேன். ஆனா, ஃபேஷன் ஷோவுக்கு மினி ஸ்கர்ட்தான் ஃபிட்!''  

''எப்போ கல்யாணம்?''

''இப்போ இல்லை. எனக்கு நல்ல கல்ச்சர் ஃபேமிலியில் இருந்துதான் மாப்பிள்ளை வேணும். பையன் கறுப்பா இருந்தாலும் நோ பிராப்ளம். ஆனா, தலையில் முடி நிறைய இருக்கணும். என்னைவிட பத்து வயசு ஜாஸ்தியோ கம்மியோ இருந்தாலும் ஓ.கே-தான். எனி ஒன் ரெடி ஃபார் தி கேம்?!''