Published:Updated:

“மாற்று சினிமா அல்ல... இது மாற்றும் சினிமா!’’

“மாற்று சினிமா அல்ல... இது மாற்றும் சினிமா!’’
பிரீமியம் ஸ்டோரி
“மாற்று சினிமா அல்ல... இது மாற்றும் சினிமா!’’

கே.ஜி.மணிகண்டன் - படம்: மீ.நிவேதன்

“மாற்று சினிமா அல்ல... இது மாற்றும் சினிமா!’’

கே.ஜி.மணிகண்டன் - படம்: மீ.நிவேதன்

Published:Updated:
“மாற்று சினிமா அல்ல... இது மாற்றும் சினிமா!’’
பிரீமியம் ஸ்டோரி
“மாற்று சினிமா அல்ல... இது மாற்றும் சினிமா!’’
“மாற்று சினிமா அல்ல... இது மாற்றும் சினிமா!’’

``பாலுமகேந்திரா சார் சொல்வார், `அம்மாவோட சமையல் ஏன் நல்லா இருக்குன்னா, யாருக்குச் சமைக்கிறோம்கிற அவங்க மனநிலை. சினிமாவும் அது மாதிரிதான் இருக்கணும். ஆடியன்ஸ்மேல அக்கறை இருந்தா, நிச்சயமா நல்ல படம் உருவாகும்!’ அதை அப்படியே ஃபாலோ பண்ணி, `அருவி’யை உருவாக்கியிருக்கேன்’’ - நிதானமாகப் பேசுகிறார், அருண் பிரபு புருஷோத்தமன். பல்வேறு திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு கவனம் ஈர்த்திருக்கும் `அருவி’ படத்தின் இயக்குநர்.

“மாற்று சினிமா அல்ல... இது மாற்றும் சினிமா!’’

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

`` `அருவி’ ஒரு மாற்று சினிமா என்று சொல்கிறார்களே?”

``மாற்று சினிமான்னா கதை மெதுவா நகரும், காட்சிகளை ஜவ்வு மாதிரி இழுப்பாங்கனு எல்லோரும் நினைப்பாங்க. `அருவி’ அப்படியில்லை. ஷாங்காய், மும்பை, பஞ்சாப், டெல்லி, கேரளானு ஸ்க்ரீன் பண்ணின அனைத்து இடங்கள்லேயும் `அருவி’யை எல்லா தரப்பு ஆடியன்ஸும் கனெக்ட் பண்ணிக்கிட்டாங்க. உலகமயமாக்கலுக்குப் பிறகு, மூன்றாம் உலக நாடுகளில் இருக்கும் பிரச்னைகளைப் படத்துல பேசியிருக்கோம். ஏராளமான பாட்டு, டான்ஸ், ஃபைட்னு கமர்ஷியல் ரூட்டுக்கும் இடம் கொடுத்திருக்கோம். முக்கியமா, இன்றைய இளைஞர்களோட மனநிலையைப் பிரதிபலிச்சிருக்கோம். டிராமா, அரசியல் நையாண்டி, மியூஸிகல், ஆக்‌ஷன்னு எல்லா வகைகளையும் கடந்த ஒரு படம் இது. தவிர, கடந்த பத்து வருடங்கள்ல தமிழ் சினிமாவில் யாரும் பரிசோதனை முயற்சிகள் பண்ணலாம்கிற கதவு திறக்கப்பட்டிருக்கு. நிறைய வாய்ப்புகளும் இருக்கு. மாற்று சினிமா மூலமாகவும் வியாபாரரீதியான வெற்றியைக் கொடுக்க முடியும்கிற சூழல் சீக்கிரமே இங்கே உருவாகும்.’’

“மாற்று சினிமா அல்ல... இது மாற்றும் சினிமா!’’

``இவ்வளவு விஷயங்களையும் எப்படி ஒரே கதையில் கொண்டு வந்தீங்க?”

``ஒரு பெண்ணோட வாழ்க்கையில நடக்கிற சுவாரஸ்யமான சம்பவங்களின் தொகுப்புதான் இந்தக் கதை. அதுக்குள்ளேதான் இத்தனை விஷயங்களும் வருது. ஒரு கோணத்துல பார்த்தா, அந்தப் பெண்ணோட சுயசரிதை மாதிரியும் இருக்கும். லக்‌ஷ்மி கோபாலசாமி என்பவரைத் தவிர, படத்துல நடிச்சிருக்கிற எல்லோருமே புதுமுகங்கள்தான். ஹீரோயின் அதிதி பாலன். சட்டம் படிச்சவங்க. நல்ல நடிகையாகவும் வருவாங்க. நடிச்சோம் போனோம்னு இல்லாம, இந்தக் கதைக்காக நாங்க சொன்ன பல மனிதர்களைச் சந்திச்சு நிறைய விஷயங்கள் கத்துக்கிட்டாங்க.’’

“மாற்று சினிமா அல்ல... இது மாற்றும் சினிமா!’’

``படத்துக்கு இரண்டு இசையமைப்பாளர்கள் ஏன்?”

``பிந்துமாலினி - வேதாந்த் பரத்வாஜ் இருவருமே உலகம் முழுக்கப் பாடும் தெருப்பாடகர்கள். சினிமாவுக்கும் அவங்களுக்கும் தொடர்பே கிடையாது. `ஸ்நோ பாய்ஸ்’ங்கிற அவங்களோட ஆல்பத்தைக் கேட்டு என் தேவையைச் சொன்னேன். பண்ணிக்கொடுத்தாங்க. இசையைத் தாண்டி உலகம் முழுக்கச் சுற்றின அனுபவம் அவங்களுக்கு இருக்கு. படத்துக்கும் அவங்களோட அனுபவம் எனக்குத் தேவையா இருந்தது. படத்துல குட்டிக்குட்டியா நிறைய பாடல்கள் இருக்கு.’’
 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism