
“இரண்டு இட்லிக்கு மேல சாப்பிட முடியலை டாக்டர்”
“ஜி.எஸ்.டி-யை மனசுல ஏத்திக்காதீங்க”
- சிவகுமார் நடராஜன்
“பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப அல்பமா?”
“ பின்ன... `பொண்ணு வீட்டுக்காரங்க அல்பம்’னு யாரும் சொல்லக்கூடாதுன்னு இப்பவே கண்டிஷன் போடுறாங்களே!”
- பி.ஜி.பி.இசக்கி
“உன் ஃபேமிலி வாட்ஸ்அப் குரூப்ல யாரு அட்மின்..?”
“அட்மின் நான்தான்... ஆனா, என் ஒய்ஃப்தான் ‘செயல்’ அட்மின்!”
- பர்வீன் யூனுஸ்.
``பேய் படம் ஒண்ணு எடுத்துட்டிருந்தாரு...படம் பாதியிலே நின்னுடுச்சு...’’
``ஏன்..?’’
``அதுங்களும் கால்ஷீட் சொதப்ப ஆரம்பிச்சுடுச்சாம்..?!’’
- ஜெ.மாணிக்கவாசகம்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism