Published:Updated:

டூரிஸ்ட் கைடு ஷாருக்... பேயாக சமந்தா... மூத்தோன் நிவின் பாலி!

டூரிஸ்ட் கைடு ஷாருக்... பேயாக சமந்தா... மூத்தோன் நிவின் பாலி!
பிரீமியம் ஸ்டோரி
டூரிஸ்ட் கைடு ஷாருக்... பேயாக சமந்தா... மூத்தோன் நிவின் பாலி!

பா.ஜான்சன்

டூரிஸ்ட் கைடு ஷாருக்... பேயாக சமந்தா... மூத்தோன் நிவின் பாலி!

பா.ஜான்சன்

Published:Updated:
டூரிஸ்ட் கைடு ஷாருக்... பேயாக சமந்தா... மூத்தோன் நிவின் பாலி!
பிரீமியம் ஸ்டோரி
டூரிஸ்ட் கைடு ஷாருக்... பேயாக சமந்தா... மூத்தோன் நிவின் பாலி!

`காலா’, `2.0’, `மெர்சல்’, `விவேகம்’ எனத் தமிழில் அதிக எதிர்பார்ப்பு உள்ள படங்கள் தயாராகிக்கொண்டிருக்க, இவற்றுக்குப் போட்டியாக மற்ற மொழிகளிலும் படங்கள் வெளியாக உள்ளன. தெலுங்கு, இந்தி, மலையாளம், ஆங்கிலம் மற்ற மொழிகளில் எதிர்பார்ப்பை எகிறவைத்துக்கொண்டிருக்கும் படங்களின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!

டூரிஸ்ட் கைடு ஷாருக்... பேயாக சமந்தா... மூத்தோன் நிவின் பாலி!

ராஜூ காரி கதி-2

2015-ம் ஆண்டில் ஓம்கார் இயக்கி வெளியான `ராஜூ காரி கதி’ படத்தின் இரண்டாம் பாகம்தான் இது. பேய் பங்களா ஒன்று. அங்கு சென்ற 34 பேரும் இறந்துவிட்டார்கள். இந்தச் செய்தியைக் கேள்விப்படும் டி.வி சேனல் ஒன்று, `பிக் பாஸ்’போல ஒரு ஸ்கெட்சைப்போட்டு, போட்டி ஒன்றை அறிவிக்கிறது. `அந்தப் பேய் பங்களாவுக்குள் சென்று ஏழு நாள்கள் தைரியமாகத் தங்கித் திரும்பி வருபவர்களுக்கு மூன்று கோடி ரூபாய் பரிசு’ என அறிவிக்கிறது. மூன்று கோடி ரூபாய்க்காகப் பேய் பங்களாவுக்குள் போனவர்களின் நிலை என்ன என்பதே முதல் பாகத்தின் கதை. மிகக் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு ஹிட்டடிக்க, அதன் அடுத்த பாகத்தை எடுக்க ஓம்காருக்கு ஆர்டர் போட்டு  நாகார்ஜுனா தன் கால்ஷீட்டையும், தன் வருங்கால மருமகளின் கால்ஷீட்டையும் கொடுக்க, படுவேகமாகத் தயாராகிக்கொண்டிருக்கிறது படம். இந்திய சினிமா வரலாற்றில் சமந்தா பேயாக நடிக்கும் படத்துக்காக, ஆந்திராவே காத்திருக்கிறது!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

டூரிஸ்ட் கைடு ஷாருக்... பேயாக சமந்தா... மூத்தோன் நிவின் பாலி!

ஜெய் லவகுசா

மகேஷ் பாபுவின் `ஸ்பைடர்’ படத்துக்கு டஃப் கொடுக்கும்படி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது ஜூனியர் என்.டி.ஆரின் `ஜெய் லவகுசா.’ காரணம், ஜெய் என்கிற ஆபத்தான க்ரிமினல், லவகுமார் என்கிற பேங்க் மேனேஜர், குசா என்கிற நாடக நடிகர் எனப் படத்தில் ஜூனியர் என்.டி.ஆருக்கு மூன்று ரோல்கள். வங்கிக்கொள்ளை ஒன்றுக்காக லவகுமார் கைதாகிறார். உருவ ஒற்றுமையை வைத்து, அதற்கு உடந்தையாக இருந்தார் எனக் குசாவும் கைது செய்யப்படுகிறார். ஆனால்,  இதற்கெல்லாம் மாஸ்டர் மைண்ட் ஜெய். ஏன்... எதற்கு... எப்படி? என்பதுதான் கதை எனக் கிசுகிசுக்கிறது டோலிவுட். படம் செப்டம்பரில் ரிலீஸ்.

டூரிஸ்ட் கைடு ஷாருக்... பேயாக சமந்தா... மூத்தோன் நிவின் பாலி!

பைசா வசூல்

மாஸ் மசாலா படங்களில் கெத்து காட்டுபவர் பூரி ஜெகன்னாத். ஆக்‌ஷனில் காட்டுக் காட்டு எனக் காட்டுபவர் பாலகிருஷ்ணா. இந்த இருவரும் ஒரு படத்தில் இணைந்தால் என்ன ஆகும்? `பைசா வசூல்’ ஆகும். ராஜமௌலி க்ளாப் அடித்துத் தொடங்கிவைக்க, படத்தைப் பரபரப்பாக இயக்கிக்கொண்டிருக்கிறார் பூரி. படத்தின் கதை, அட விடுங்க பாஸ்! பூரி வகைவகையா பன்ச் டயலாக் எழுத, பாலகிருஷ்ணா ஃபைட்டர்ஸை அடிச்சுப் பறக்கவிட்டபடி அதைப் பேச, பார்க்கிறதுக்கே கண்கொள்ளாக் காட்சிதான். இது பாலகிருஷ்ணாவின் 101-வது படம் என்பதால், படம் காரசாரமாக இருக்க வேண்டும் என ஸ்க்ரிப்ட் பேப்பரில் ஆந்திரா மிளகாய்ப்பொடித் தூவி வெறித்தனமாக எடுத்துக்கொண்டிருக்கிறார் பூரி. படத்தில் பாலையாவுக்கு ஜோடி ஸ்ரேயா சரண். இந்தப் படமும் செப்டம்பர் ரேஸில் இணைந்திருக்கிறது.

டூரிஸ்ட் கைடு ஷாருக்... பேயாக சமந்தா... மூத்தோன் நிவின் பாலி!

தேர்டு வேர்ல்டு பாய்ஸ்

எல்லா நண்பர்கள் கூட்டத்திலும் மாறாத ஒரே ஒரு விஷயம் எங்கேயாவது பயணப்பட வேண்டும். அப்படித் திட்டமிடும் ஏழு நண்பர்கள் பற்றிய கதைதான், `தேர்டு வேர்ல்டு பாய்ஸ்.’ ``கிளம்புவோம்டா... எங்கேயாவது மனசையும் உடலையும் ஃப்ரெஷ்ஷாக்கிட்டு, நிம்மதியாத் திரும்பி வருவோம்’’ எனத் திட்டமிடுகின்றனர் பஷி, சௌபின், பிரேம், ஷைன், வில்சன், பாலு, சுதி ஆகிய ஏழு நபர்கொண்ட நண்பர் குழுவினர். குடும்பம், வேலை, பணம் எனப் பல தடைகளைத் தாண்டி, அவர்களின் பயணக் கனவு என்ன ஆகிறது என்பதுதான் கதை. ரோட் மூவி குறைந்துவிட்டதை நிவர்த்தி செய்யும்படி வர இருக்கிறது ஐயப்ப ஸ்வரூப் - ஷஹால் சசிதரன் என்கிற இரட்டை இயக்குநர்களின் `தேர்டு வேர்ல்டு பாய்ஸ்.’

டூரிஸ்ட் கைடு ஷாருக்... பேயாக சமந்தா... மூத்தோன் நிவின் பாலி!

மூத்தோன்

`நளதமயந்தி’ படத்தில் ஹீரோயினாக நடித்த கீது மோகன்தாஸ் இயக்கும் படம்தான் `மூத்தோன்.’ `கம்மாட்டிபாடம்’ இயக்குநர் ராஜீவ் ரவியின் மனைவி கீது இதற்கு முன் `ஐ.டி’, `லையர்ஸ் டைஸ்’ படங்கள் இயக்கி, பல சர்வதேசத் திரை விழாக்களில் கவனம் பெற்றவர். நிவின் பாலி நடிக்கும் `மூத்தோன்’, மலையாளம், இந்தி என பைலிங்குவலாக உருவாகிறது. தன் மூத்த சகோதரனைத் தேடிப்போகும் பதின்வயதுக்காரனின் பயணம்தான் கதை. கதையாகவே சூடான்ஸ் திரைவிழாவில் `குளோபல் ஃபிலிம் மேக்கிங்’ விருதைப் பெற்றிருக்கிறது `மூத்தோன்.’ படத்தின் இந்தி வெர்ஷனுக்கு அனுராக் காஷ்யப் வசனம், கணவர் ராஜீவ் ரவி ஒளிப்பதிவு என மிரட்டலான டீமுடன் இணைந்து படம்பிடித்துக்கொண்டிருக்கிறார் கீது. நிவினும் முரட்டு தாடி, புருவத்தில் தழும்பு, மூக்கில் வளையம் என வித்தியாசமான கெட்அப்பில் நடித்துக்கொண்டிருக்கிறார்.

டூரிஸ்ட் கைடு ஷாருக்... பேயாக சமந்தா... மூத்தோன் நிவின் பாலி!
டூரிஸ்ட் கைடு ஷாருக்... பேயாக சமந்தா... மூத்தோன் நிவின் பாலி!

பாபுமோஷாய் பந்தூக்பாஸ்

பாபு, ஓர் ஒப்பந்தக் கொலைகாரன். அந்த ஊரில் அவனை அடித்துக்கொள்ள ஆள் கிடையாது. அப்படி நினைத்துக்கொண்டிருக்கும்போது ஒரு பிரச்னை எழுகிறது. தன்னைத் தக்கவைத்துக்கொள்ள பாபு என்ன செய்கிறான் என்பதை நிறைய வன்முறை, கொஞ்சம் காமெடி சேர்த்துச் சொல்லவிருக்கும் படம் `பாபுமோஷாய் பந்தூக்பாஸ்.’ பாபு ரோலில் நடித்திருப்பது நவாஸுதீன் சித்திக். கண்களிலேயே குரூரத்தைக் காட்டும் நவாஸின் நடிப்பை, ட்ரெய்லர், டீஸரில் பார்த்துவிட்டு, ஆகஸ்ட் 25-ம் தேதிக்காக வெயிட்டிங்கில் இருக்கிறார்கள் ரசிகர்கள்.

டூரிஸ்ட் கைடு ஷாருக்... பேயாக சமந்தா... மூத்தோன் நிவின் பாலி!
டூரிஸ்ட் கைடு ஷாருக்... பேயாக சமந்தா... மூத்தோன் நிவின் பாலி!

சீக்ரெட் சூப்பர் ஸ்டார்

தன் குரலை உலகமே கேட்க வேண்டும் எனப் பாடகியாகும் கனவில் இருக்கிறாள் இன்ஷூ. அதற்குத் தடையாக இருக்கிறார் அவளின் தந்தை. தன் கனவுக்காக இன்ஷூ செய்யும் செயல்...  அதனால், மாறும் சிலரின் வாழ்க்கையைப் பற்றிச் சொல்ல இருக்கிறது `சீக்ரெட் சூப்பர் ஸ்டார்.’ `டங்கல்’ படத்தில் சின்ன வயது கீதா போகத்தாக நடித்த ஸாய்ரா வாசீம்தான் ஹீரோயின். அத்வைத் சந்தன் இயக்கியிருக்கும் இந்தப் படத்தைத் தயாரித்து, சின்ன ரோலில் நடித்தும் இருக்கிறார் அமீர் கான். தீபாவளி வெளியீடாக வர இருக்கிறது படம்.

டூரிஸ்ட் கைடு ஷாருக்... பேயாக சமந்தா... மூத்தோன் நிவின் பாலி!

இட்

ஸ்டீபன் கிங் எழுதிய நாவலின் சினிமா வடிவம்தான் `இட்.’ வழக்கமான ஹாரர் வகையிலிருந்து கொஞ்சம் விலகி நிற்கிறது `இட்.’ டெர்ரி நகரத்தில் திடீரெனக் குழந்தைகள் காணாமல் போவது தொடர்கிறது. அப்போது இதற்குச் சம்பந்தமான ஒரு பொருள் அந்த நகரத்துச் சிறுவர்களுக்குக் கிடைக்கிறது. சிறுவர்களின் மறைவுக்கு, பில் ஸ்கேர்ஸ்கார்ட்தான் காரணம் எனத் தெரியவருகிறது. யார் அந்த பில், எதற்காகச் சிறுவர்கள் கடத்தப்படுகிறார்கள்? என பயமுறுத்தியபடி கதை சொல்ல இருக்கிறது `இட்.’ நைட் எஃபெக்ட் எதுவும் இல்லாமல் சிவப்பு கலர்  ஹீலியம் பலூன் வைத்தே பதறவிட்டிருக்கிறார் இயக்குநர் ஆண்ட்ரூஸ் முஷீட்டி.

டூரிஸ்ட் கைடு ஷாருக்... பேயாக சமந்தா... மூத்தோன் நிவின் பாலி!

எமோஜி மூவி

சிரிக்கும் எமோஜி, முறைக்கும் எமோஜி, தம்ஸ்அப் எமோஜி என எல்லா உணர்வுகளையும் காட்ட நாம் பயன்படுத்தும் எமோஜிகளுக்கு ஒரு வாழ்க்கை இருந்தால்? `கேன்’ என்கிற எமோஜிதான் ஹீரோ. அதாவது கேன் சலிப்பு உணர்வைக் காட்டவேண்டிய எமோஜி. ஆனால், அவனால் எல்லா உணர்வுகளையும் வெளிப்படுத்த முடிகிறது. `பையன் இவ்வளவு சந்தோஷமா இருக்கானே!’ என அம்மா எமோஜிக்கும் அப்பா எமோஜிக்கும் ஒரே கவலை. கேனின் வட்டமுகத்தில் சலிப்பை ஒட்டவைக்கும் முயற்சிகள் தான் படம். அனிமேஷன் படம் என்றாலும், டோனி லியோண்டிஸ் வித்தியாசமான கான்செப்ட்டை எடுத்து இயக்கியிருப்பதால், படத்துக்கு டிக்கெட் போடக் காத்திருக்கிறது ரசிகர் கூட்டம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism