`வனமகன்’ தேவதை சாயிஷா ஃபீவரில் கோலிவுட்டே சிலிர்க்கிறது. பாலிவுட் ஜோடி திலீப்குமார் - சாய்ரா பானு குடும்பத்திலிருந்து வந்திருக்கும் ஆறாம் தலைமுறை நடிகை சாயிஷா.
``மும்பை தேவதை, கோடம்பாக்கத்தில் கால் பதித்தது எப்படி?’’
‘`16 வயசுல முதல் படம். படிச்சுக்கிட்டே நடிக்கவும் ஆரம்பிச்சேன். ரொம்ப நல்லா படிப்பேன். சயின்ஸ் ஸ்டூடன்ட். அதே நேரம் டான்ஸ் ஆடவும் ரொம்பப் பிடிக்கும். லாட்டின் அமெரிக்கன் டான்ஸ், கதக், ஒடிசினு எல்லா ஸ்டைல் டான்ஸும் கத்துக்கிட்டேன். சினிமா அதுவா அமைஞ்சது. தெலுங்குல ‘அகில்’தான் என் முதல் படம். ‘அகில்’ படத்துல என் நடிப்பைப் பார்த்துட்டுதான் இயக்குநர் விஜய் சார் ‘வனமகன்’ல எனக்கு வாய்ப்புக் கொடுத்தார்.

* சயீஷா

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
``அடுத்த படம்?’’
``பிரபுதேவா சார் டைரக்ஷன்ல ‘கருப்பு ராஜா... வெள்ளை ராஜா...’ படத்தில் நடிக்கிற வாய்ப்பு வந்திருக்கு. கார்த்தி, விஷால்னு ரெண்டு ஹீரோ... நான் ஒரே ஹீரோயின். பிரபுதேவா சார் கொரியோகிராஃபரா ஒரு லெவல்ல இருக்கிறவர், டைரக்டரா வேற லெவல்ல இருக்கார். செம ஃபாஸ்ட்டான வொர்க்கிங் ஸ்டைல். யாருடைய நேரத்தையும் வீணாக்க மாட்டார். ரொம்ப யுனீக்கான டைரக்ஷன் ஸ்டைல் உள்ளவர். காமெடி, எமோஷன்ஸ் எல்லா உணர்வுகளையும் பக்காவா அவரால வாங்க முடியுது. என்னை இந்தப் படத்துக்காக யோசிச்சதுக்கு என் நன்றிகள்.’’
``கார்த்தியும் விஷாலும் என்ன சொல்றாங்க?’’
``இப்பதான் ஷூட் ஆரம்பிச்சுப் போயிட்டிருக்கு. ரெண்டுபேர்கிட்டயும் அதிகம் பேச சான்ஸ் கிடைக்கலை. ஆனா, ரெண்டு பேரும் திறமையான நடிகர்கள்னு கேள்விப்பட்டிருக்கேன். ரெண்டு பேரும் என்னைப் பற்றி நல்லவிதமா பேசுறாங்க. அதைவிட வேற என்ன வேணும்?
``சாயிஷாவுக்கு நடிப்பு பொழுதுபோக்கா? சீரியஸான புரொஃபஷனா?’’
``நான் நடிப்பை ரொம்ப சீரியஸா நினைச்சுதான் வந்திருக்கேன். எனக்கு நடிப்பைத் தவிர வேற ஆப்ஷனும் இருந்ததில்லை. வெறுமனே ஆசை மட்டும் படாம, அதுக்காக ஹார்டுவொர்க் பண்றேன். அந்த ஹார்டுவொர்க் எனக்கு நிறைய வாய்ப்புகளைக் கொண்டு வந்து சேர்க்கும்னு நம்புறேன்.’’

``தமிழ்ல எந்தெந்த ஹீரோக்களைப் பிடிக்கும்?’’
``விஜய், அஜித் இரண்டு பேரையுமே பிடிக்கும். இரண்டு பேரோடவும் சேர்ந்து நடிக்க ஆசை.’’
``சாயிஷாவின் விஷ் லிஸ்ட்டுல என்னவெல்லாம் இருக்கு?’’
``சரியான வயசுல நடிக்க வந்திருக்கிறதா நினைக்கிறேன். நல்ல படங்கள், நல்ல ஹீரோஸ்னு எல்லாமே நல்லதா அமைஞ்சிட்டிருக்கு. ‘வனமகன்’ என்னைக் கவனிக்க வெச்சிருக்கு. `கருப்பு ராஜா வெள்ளை ராஜா’ என்னைப் பற்றிப் பேச வைக்கும்னு நம்புறேன். நாலஞ்சு பெரிய படங்களுக்குப் பேசிட்டிருக்கேன். மணிரத்னம் சார், ராஜமவுலி சார் டைரக்ஷன்ல நடிக்கணும். இந்தி, தெலுங்குப் படங்களைவிடவும் இப்போதைக்கு எனக்குத் தமிழ்தான் ஸ்பெஷல்.’’