
ஆர்.வைதேகி, படங்கள்: ரோஹித் சாபு
சாண்டல்வுட் ஸ்டேட்டில் இருந்து தமிழ் பேச வந்திருக்கும் ஸ்வீட்டி ஷ்ரத்தா ஸ்ரீநாத். ‘காற்று வெளியிடை’, ‘இவன் தந்திரன்’... இப்போது ‘விக்ரம் வேதா’, அடுத்து ‘ரிச்சி’ என ஷ்ரத்தா செம்ம்ம பிஸி!
‘` `காற்று வெளியிடை’ படம் மாதிரிதான் என் லைஃபும். அப்பா ஆர்மி ஆபீஸர். அம்மா ஸ்கூல் டீச்சர். எனக்கு ஓர் அக்கா இருக்கா. காஷ்மீர்ல பிறந்தேன். அப்பாவோட வேலை காரணமா ரெண்டு வருஷத்துக்கு ஓர் ஊர் மாறிட்டே இருப்போம். ஸ்கூல் முடிச்சிட்டு சட்டம் படிக்கிறதுக்காக பெங்களூரு வந்தேன். தியேட்டர்ல ஆர்வம் வந்தது. ட்ரை பண்ணினேன். வாய்ப்புகள் வந்தன. அப்படியே நடிப்புல இன்ட்ரெஸ்ட் அதிகமாயிருச்சு.
‘யு டர்ன்’ படம் என் வாழ்க்கையிலும் யு டர்னா அமைஞ்சதுன்னு சொல்லலாம். அந்தப் படத்துல நடிக்கிறபோதே அது எனக்கு பிரேக் கொடுக்கும்னு எதிர்பார்த்தேன். அப்படியே நடந்தது.’’

’`மணிரத்னம் படத்தில் நடித்த அனுபவம் சொல்லுங்க?’’
`` ‘யு டர்ன்’ ரிலீஸானதும் மெட்ராஸ் டாக்கீஸ்ல இருந்து போன் வந்தது. நான் மணி சாரின் பயங்கரமான ரசிகை. அவர் படத்துல தலைகாட்டுற அந்த எக்ஸ்பீரியன்ஸுக்காகவே யெஸ் சொன்னேன். ‘ஒரு படத்துல கேமியோ கேரக்டர் பண்ணிட்டா, அடுத்தடுத்த படங்கள்லேயும் அதே கேரக்டருக்குக் கூப்பிடுவாங்க’னு நிறைய பேர் அட்வைஸ் பண்ணினாங்க. மணி சார் மேஜிக்கை ஃபீல் பண்றதுக்காகவே அந்த ரிஸ்க்கை எடுக்கத் தயாரா இருந்தேன். அந்தப் படத்துக்குப் பிறகு, என் கரியரே முடிஞ்சு போயிடும்ங்கிற நிலைமை வந்தாலும், எனக்குக் கவலையில்லைனு சொல்லிட்டுத்தான் அதுல நடிச்சேன். என் ஆசை நிறைவேறிடுச்சு. ‘காற்றுவெளியிடை’யில நடிச்சது மணி சார்கிட்ட இன்டர்ன்ஷிப் பண்ணின மாதிரி இருந்தது.’’
``விக்ரம் வேதா?’’
‘’இந்தப் படமும் `யு டர்ன்’ பார்த்துட்டு வந்ததுதான். எனக்குப் பெரிய நம்பிக்கையைக் கொடுத்திருக்கிற படம். மாதவன் மாதிரி ஸ்வீட்டான ஹீரோகூட வொர்க் பண்றது அதிர்ஷ்டம். எனக்குத் தமிழ் தெரியாது. எனக்குத் தமிழ் கத்துக்கொடுத்து உச்சரிப்பை சரி செய்தவர் மாதவன்தான்.
விஜய் சேதுபதிகூட படத்துல எனக்கு ஒரே ஒரு சீன்தான். மாதவன்கூட நிறைய சீன்ஸ் இருந்ததால ஒரு கம்ஃபர்ட் லெவல் இருந்தது. ஆனா, விஜய் சேதுபதியைப் பார்த்ததும் நெர்வஸாயிட்டேன். அப்புறம்தான் அவர் ரொம்ப சாஃப்ட்னு தெரிஞ்சது. எந்த பந்தாவும் அவர்கிட்ட இல்லை. அவ்ளோ நல்ல மனுஷன். சீக்கிரமே அவர்கூட ஒரு படம் பண்ணணும்.’’

``நிவின் பாலி என்ன சொல்றார்?’’
`` ‘ரிச்சி’ படத்துல அவர்கூட நடிக்கிறேன். எனக்கு க்ரைம் ரிப்போர்ட்டர் கேரக்டர். போனமாசம் வரைக்கும் நான் நிவின் பாலியோட ரசிகை. இப்போ அவருடைய ஹீரோயின். கனவா, நனவானு தெரியலை. லவ் ஸ்டோரி இல்லைன்னாலும் படத்துல எனக்கும் நிவினுக்கும் சின்னதா ஒரு கெமிஸ்ட்ரி இருக்கும்.’’
``உங்க பொழுதுபோக்கு என்ன?’’
‘`பாடுவேன். ஹேண்ட்மேடு போட்டோ ஃப்ரேம், லேம்ப் ஷேடு, பொம்மைகள் செய்யத் தெரியும். யாருக்கு கிஃப்ட் பண்றதுன்னாலும் நானே என் கையால பண்ணின கிராஃப்ட் ஐட்டங்களைத்தான் கொடுப்பேன். மூடு வந்தா கேக், பீட்சா பண்றதுனு இறங்கிடுவேன். நான் ரொம்ப கூல்!’’