Published:Updated:

இப்ப இவங்கதான்!

இப்ப இவங்கதான்!
பிரீமியம் ஸ்டோரி
இப்ப இவங்கதான்!

பா.ஜான்சன்

இப்ப இவங்கதான்!

பா.ஜான்சன்

Published:Updated:
இப்ப இவங்கதான்!
பிரீமியம் ஸ்டோரி
இப்ப இவங்கதான்!

ந்த ஆண்டு பாலிவுட்டைக் கலக்கிய மிரட்டல் ஹீரோயின்ஸ் இவர்கள். `யாரும்மா நீ இத்தன நாளா எங்கிருந்த’ என ஒட்டுமொத்த இந்தியாவையும் திரும்பிப்பார்க்க வைத்த புதுவரவுகள் இந்த ஆறுபேர். அவர்களைப் பற்றிய மினி டேட்டா இங்கே...

இப்ப இவங்கதான்!

சஜல் அலி

பாகிஸ்தானின் லஹோர் பகுதியைச் சேர்ந்தவர் சஜல் அலி. டி.வி சீரியல்களில் நடித்துக் கொண்டிருந்தவருக்கு அப்போதே பாகிஸ்தானில் திரும்பிய பக்கம் எல்லாம் விசிறிகள். ஜியோ, அரி, ஹம், ஏ-ப்ளஸ், எக்ஸ்பிரஸ் என பாகிஸ்தானி சேனல்கள் எதை மாற்றினாலும் அதில் சஜல் முகம்தான் ரிப்பீட்டில் ஓடும். இந்தப் பிரபலம், சஜலுக்கு ‘ஜிந்தகி கித்னி ஹசீன் ஹை’ என்கிற பாகிஸ்தானியப் படத்தில் நடிக்கும் வாய்ப்பைப் பெற்றுத்தந்தது. இந்தப் படத்தின் வெற்றி சஜல் புகழை பாலிவுட்டுக்கு பார்சல் செய்ய, ‘மாம்’ பட வாய்ப்பைப் பெற்றார். ‘மாம்’ படத்தில் லீட் ரோல் ஸ்ரீதேவிதான் என்றாலும், சஜலின் நடிப்புப் பலராலும் பாராட்டப்பட்டது. ஆனால், சஜல் அதை எல்லாம் தலையில் ஏற்றிக் கொள்ளாமல் ‘வாட் நெக்ஸ்ட்?’ என பாகிஸ்தான் சீரியலில் பிஸியாகிவிட்டார். மறுபடி மனதுக்குப் பிடித்த ரோல் கிடைத்தால் மட்டும்தான் நடிக்கத் திட்டமாம்.

இப்ப இவங்கதான்!

சோபிதா துலிபலா

மாடலிங் + அழகிப் போட்டிகளில் வலம் வந்துகொண்டிருந்த சோபிதா துலிபலாவைச் சினிமாவுக்கு அழைத்துவந்தது பாலிவுட் மாஸ்டர் அனுராக் காஷ்யப்.  ‘ராமன் ராகவ் 2.0’ படத்தில் சின்னக் கதாபாத்திரம் ஒன்றில் நடித்தார். அனுராக் துவங்கி வைத்த ராசியோ என்னவோ, இப்போது அடுத்தடுத்து பெரிய படங்களில் கமிட்டாகியிருக்கிறார் சோபிதா. ‘ஏர்லிஃப்ட்’ இயக்குநர் ராஜா கிருஷ்ண மேனன் இயக்கும் ‘செஃப்’, அக்‌ஷத் வெர்மா இயக்கும் ‘காலகான்டி’ ஆகிய படங்களில் சைஃப் அலிகா னுடனும், கீது மோகன்தாஸ் மலையாளம் - இந்தியில் பைலிங்கு வலாக இயக்கும் ‘மூத்தோன்’ படத்தில் நிவின் பாலியுடனும் நடிக்கிறார் சோபிதா.

இப்ப இவங்கதான்!

ரிச்சா சந்தா

இந்தியா மற்றும் பாகிஸ்தான் முழுக்கத் தங்கள் குழுவுடன் கிளம்பிச்சென்று நாடகங்கள் நடிப்பதில் ஆர்வம் கொண்டவர் ரிச்சா சந்தா.  சினிமாவில் சின்னச் சின்ன ரோலில் நடிக்கக் கிடைக்கும் வாய்ப்புகள் மூலம் திரைப்படங்கள் மேல் கவனம் திரும்ப, இப்போது முழு நேர நடிகையாகி விட்டார். அனுராக் இயக்கிய ‘கேங்ஸ் ஆஃப் வாஸிப்பூர்’ படத்தில் குட்டியூண்டு ரோலில் நடித்திருப்பார். தொடர்ந்து அது மாதிரியே சின்ன ரோல்களாக நடித்தவருக்கு ‘மசான்’ படம் பெரிய திருப்பம் தந்தது. தொடர்ந்து ‘சரப்ஜித்’ படத்திலும் மிரட்டல் நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். இப்போது அமேசானின் வெப் சீரிஸ் ‘இன்சைட் எட்ஜ்’ மற்றும் சினிமா என டபுள் ட்ராக்கில் போகிறது ரிச்சாவின் கிராஃப்.

இப்ப இவங்கதான்!

ஸ்வேதா த்ரிபாதி

‘க்யா மஸ்த் ஹை லைஃப்’ சீரியல் மூலம் ஸ்வேதா த்ரிபாதி மிகப் பிரபலம். நிறைய விளம்பரங்களிலும் நடித்துக் கொண்டிருந்தவருக்கு முதல் சினிமா வாய்ப்பே ஆங்கிலப் படமான ‘த்ரிஷ்னா’தான். ஆந்தாலஜி படமாக உருவாகிய `ஷார்ட்ஸ்’ மூலம் பெரிய கவனம் பெற்றார். கூடவே `மசான்’, இந்த வருடம் வெளியான `ஹரம்கோர்’ போன்ற படங்கள் நல்ல நடிகை என்கிற பெயரைப் பெற்றுத் தந்திருக்கிறது. ஒரு படம் நடித்தாலும் பெயர் சொல்லும்படி இருக்க வேண்டும், அது ஒரே ஒரு காட்சி என்றாலும் பரவாயில்லை என்பது ஸ்வேதாவின் கண்டிஷன்.

இப்ப இவங்கதான்!

மௌனி ராய்

நாகினி மூலம் ஏற்கெனவே தமிழ் மக்களுக்கு அறிமுகமாகி விட்டவர் மௌனி ராய். இதுவரை சின்னத்திரையில் அசத்தியவர் இப்போது பெரிய திரைக்கும் என்ட்ரி அடிக்க இருக்கிறார். இதற்கு முன்பே சில படங்களில் கெஸ்ட்ரோலில் நடித்திருந்தாலும், முறையான சினிமா அறிமுகம் அக்‌ஷய் குமாருடன் நடிக்கும் ‘கோல்டு’ படம் மூலம் அமைய விருக்கிறது. பீரியட் சினிமாவாக உருவாகிவரும் இந்தப் படத்தில் மௌனிராய் தொடர்பான காட்சிகள் விறுவிறுப்பாகப் படமாக்கப்பட்டு வருகிறதாம். சினிமா ரசிகர்கள் மட்டுமல்லாமல், சீரியல் ரசிகர்களும் ‘கோல்டு’ படத்துக்காக வெறித்தன வெயிட்டிங்.

இப்ப இவங்கதான்!

புமி பெட்னெகர்

காஸ்டிங் டைரக்டர் டு நடிகை பயணம் புமி பெட்னெகருடையது. யாஷ் சோப்ராவின் தயாரிப்பு நிறுவனத்தில் காஸ்டிங் டைரக்டராக ஆறு வருடங்கள் வேலை செய்தவர் புமி. ‘தம் லகா ஹை ஹேசா’ படத்துக்கான ஹீரோயின் தேடிக் கொண்டிருந்த இயக்குநர் ஷரத் கடார்யா கண்ணில் புமி பட, நடிக்கும்படி கேட்டிருக்கிறார். மறுவார்த்தை எதுவும் பேசாமல் உடனடியாகத் தன் டயட் எல்லாவற்றையும் கைவிட்டு எடை ஏற்ற ஆரம்பித்தார் புமி. ‘தம் லகா ஹை ஹேசா’ கதையே, உடல் எடை அதிகமாக உள்ள மனைவி; மனைவியின் தோற்றத்தால் வருத்தத்திலிருக்கும் கணவன் பற்றியது. அதனால் 30 கிலோ எக்ஸ்ட்ராவாக வெய்ட் ஏற்றி வெயிட்டு காட்டியிருக்கிறார். முதல் படத்துக்கே விருது வென்றவர் இப்போது ‘டாய்லெட்: ஏக் பிரேம் கதா’ படத்தில் அக்‌ஷய் குமார், தமிழில் வெளியான `கல்யாண சமையல் சாதம்’ பட இந்தி ரீமேக் ‘சுப் மங்கல் சாவ்தன்’ படத்தில் ஆயுஷ்மான் ஆகியோருடன் நடித்திருக்கிறார்.