``தலைவர் ஏன் திடீர்னு, `தமிழகம், புதுவையில் மழை பெய்யும்’னு வானிலை அறிக்கைச் சொல்றார்!’’

``அவரோட அறிக்கையை யாருமே கண்டு கொள்வதில்லையாம்!’’
கி.ரவிக்குமார்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

``இது ஹால். அது பெட்ரூம். அது கன்ஃபஷன் ரூம்!’’
``அவர் பிக்பாஸ் ஃபேன் அதுதான்!’’
அ.ரியாஸ்

``ஜெயில்லகூட தலைவர் கட்சிப்பணி செஞ்சிருக்கார்.’’
``எப்படி?’’
``உள்ளே காசு கொடுத்து, நிறைய உறுப்பினர்களைச் சேர்த்திருக்காராம்!”
தே.ராஜாசிங் ஜெயக்குமார்

``தலைவர் பிக்பாஸ் வீட்டைச் சுற்றிச் சுற்றி அலையறாரே... ஏன்?’’
``ஓவியா வெளியே வந்ததும் கப்புன்னு அமுக்கிக் கட்சியில் சேர்த்திடவாம்!’’
வி.சகிதாமுருகன்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism