Published:Updated:

மினி சினிமா!

க.நாகப்பன்

மினி சினிமா!

க.நாகப்பன்

Published:Updated:

மினிமம் பட்ஜெட் படங்களே  கவனமும் கலெக்ஷனும் அள்ளும் காலம் இது. அப்படி விரைவில் திரையை எட்டிப் பார்க்கவிருக்கும்  படங்களின் மினி ட்ரெய்லர் இங்கே...

    ஓம் ஒபாமா!

'குட்டி’, 'கனவு மெய்ப்பட வேண்டும்’ போன்ற தேசிய விருது தொட்ட படங்களின் இயக்குநர் ஜானகி விஸ்வநாதன் இயக்கும் படம் 'ஓம் ஒபாமா’. ''ஒரு பாக்கெட் பிரியாணி, ஒரு பாட்டில் மதுவுக்காகத் தங்களுடைய வாக்குரிமையை விற்கும் வாக்காளர்கள் மீது உள்ள கோபம்தான் 'ஓம் ஒபாமா’. பொருளாதாரத் தேக்கம் வந்த சமயத்தில் எல்லாப் பிரச்னைகளுக்கும் ஒபாமா ஒரு தீர்வாக இருப்பார் என நம்பி யது அமெரிக்கா. யாரும் எதிர்பார்க்காதபோது நோபல் பரிசு வாங்கி அசரவெச்சார் ஒபாமா. இந்தச் சூழலில் இங்கே நடக்கும் லோக்கல் எலெக்ஷன்ல ஒரு வேட்பாளர், 'நான் ஒபாமா ஆதரவு பெற்ற வேட்பாளர். அவர் எனக்காக பிரசாரம் பண்ண வர்றார்’னு சொல்லி ஓட்டு கேட்டா எப்படி இருக்கும்? ஒபாமாவுக்கும் தேர்தல் நடக்கும் அந்தக் கிராமத்துக்கும் என்ன தொடர்பு அப்படிங்கிறதுதான் கதையின் சுவாரஸ்யம். திருவண்ணாமலை பகுதிகளில் நாங்க வெச்சிருந்த ஒபாமாவின் கட்-அவுட், பேனர், போஸ்டர் களைப் பார்த்துட்டு, உள்ளூர்வாசிகள் அவர் உண்மையிலேயே வர்றார்னு நினைச்சுட்டாங்க!''

மினி சினிமா!

''நீங்க இப்படிப் படம் எடுக்கும் விஷயம் ஒபாமாவுக்குத் தெரியுமா?'' என்ற கேள்விக்கு, ''ஹிலாரி கிளின்டன் சென்னைக்கு வந்தப்ப, நாங்க நடத்தும் உழைக்கும் மகளிர் சங்கத்துக்கு வந்திருந்தாங்க. அப்போ அவங்களிடம்  'ஓம் ஒபாமா’ பத்திச் சொன்னேன். 'படத்தோட டி.வி.டி. அனுப்பிவையுங்க. ஒபாமாக்கிட்டே சொல்றேன்’னு சொன்னாங்க. 'ஓம் ஒபாமா’வை ஒபாமா பார்ப்பார்னு நம்புறேன்!'' என்று சிரிக்கிறார் ஜானகி விஸ்வநாதன்!

    லைலா மஜ்னு!

மினி சினிமா!

''அப்போ தமிழில் தலைப்பு வெச்சா  வரிவிலக்கு. அதனால், 'வெட்கத்தைக் கேட்டால் என்ன தருவாய்?’னு தலைப்புவெச்சோம். இப்போ எல்லாப் படங்களுக்கும் வரிவிதிப்பு என்பதால், 'லைலா மஜ்னு’னு பேர் மாத்திட்டோம்!'' சிரிக்கிறார் கவிஞர் கம் இயக்குநர் தபூசங்கர்.

''காதல் தோல்வியில் முடிந்தால், 'வாழ்க்கையே போச்சு’னு உடைஞ்சுபோய் தற்கொலைக்கு முயற்சிப்பவர்கள் இந்தப் படத்தைப் பார்த்தால் கம்பீரமாக வாழணும்னு ஒரு எண்ணம் வந்துடும். வெற்றியோ, தோல்வியோ... காதல் ஓர் அழகான உணர்வுனு புரிஞ்சுக்குவாங்க. படத்தில் நடிக்கும் 'பிடிச்சிருக்கு’ அசோக், கிருத்திகா ரெண்டு பேரும் கிட்டத்தட்ட காதலர்களாகவே தெரியுறாங்க. என் காதல் கவிதைகளுக்குக் கிடைச்ச வரவேற்பு இந்தக் காதல் சினிமாவுக்கும் கிடைக்கும்னு நம்புறேன்!'' புன்னகை பூக்கிறார் தபூசங்கர்!  

வெயிலோடு விளையாடு!

மினி சினிமா!

''பிறந்து வளர்ந்தது திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி. வேலை நேரம் போக மிச்ச நேரத்தில் வாலிபால் விளையாடிட்டு இருப்பேன். அந்த நிஜமான கேரக்டர்தான் 'வெயிலோடு விளையாடு’ படத்திலும் எனக்குக் கிடைச்சிருக்கு. முக்கியமான காரணத்துக்காக பணம் சம்பாதிக்கணும்னு வாலிபால் போட்டிகள்ல ஜெயிப்பேன். அந்தக் காரணம் என்னங்கிறதுதான் கதை. கிட்டத்தட்ட நான் வாழ்ந்த வாழ்க்கைங்கிறதால ரொம்ப இயல்பா, அக்கறையா நடிச்சிருக்கேன்!'' சரளமாகப் பேசுகிறார் 'அங்காடித் தெரு’ மகேஷ். ''அடுத்ததா ஏ.வெங்கடேஷ் இயக்கத்தில் 'நானும் என் நண்பர்களும்’, அறிமுக இயக்குநர் பூபாலன் இயக்கத்தில் 'இரவும் பகலும்’னு வரிசையாப் படங்கள் நடிச்சிட்டு இருக்கேன். 'அங்காடித் தெரு’ தந்த நல்ல பேரைத் தக்கவெச்சுக்கணும்னு ஆசை. நான் சினிமாவுக்கு யதார்த்தமாத்தான் வந்தேன். ஆனால், கிடைச்ச இடத்தை தக்க வைக்க ரொம்பவே கஷ்டப்படணும்னு இப்போ புரியுது. ஜெயிப்பேன் சார்!'' உறுதி தொனிக்கப் பேசுகிறார் மகேஷ்!

சட்டென்று மாறுது வானிலை!

மினி சினிமா!

''காதலன், காதலிக்காகக் காத்துட்டு இருக்கும் ஒவ்வொரு நொடியும் இன்பமாத் தெரியும். ஆனால் கல்யாணமாகிட்டா... அதே காத்திருப்பு துன்பமாத் தெரியும். பக்குவமின்மைதான் பிரச்னைக்குக் காரணம். கல்யாணத்துக்குப் பிறகுதான் ரொம்ப ஆழமா, அழுத்தமாக் காதலிக்கணும்னு சொல்றோம் நாங்க!'' உற்சாகமாக மெசேஜ் சொல்கிறார் 'சட்டென்று மாறுது வானிலை’ இயக்குநர் ரவி பெருமாள்.  ''ரஹ்மான் சகோதரி ரெஹானாவின் உதவியாளர் ஷ்யாம்மோகன் தான் இசை. குழந்தையை இழந்த சோகத்தால் பாடாமலேயே இருந்த சித்ராவிடம், 'இந்தப் பாட்டை நீங்கதான் பாடணும் மேடம்’னு போய் நின்னேன். ஆரம்பத்தில் மறுத்தவர் பாட்டோட ட்யூன் கேட்டுட்டு உடனடியா வந்து பாடினது எங்களுக்கான பெருமை!' நெகிழ்கிறார் ரவி பெருமாள்!