
``நாங்கள் ஆட்சிக்கு வந்தால், சிறைச்சாலையிலேயே ஷாப்பிங் மால், மல்டிஃப்ளெக்ஸ் தியேட்டர் வசதியெல்லாம் செய்து தருவோம் என்று இந்நேரத்தில் கூறிக்கொள்ள கடமைப்பட்டுள்ளோம்...’’
ஜெ.மாணிக்கவாசகம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
``என்னய்யா இது எங்களின் சின்ன வெங்காயமேன்னு தலைவருக்கு ஃப்ளெக்ஸ் வெச்சிருக்கிறாங்க?’’
``விலைமதிப்பில்லாதவர்னு அர்த்தமாம்!’’
வி.சகிதாமுருகன்.

``ஜெயில்ல இருக்கற தலைவரைப் பார்க்கப் போனியே, என்ன வாங்கிட்டுப் போனே?’’
``குக்கர்தான்!’’
எஸ்.எஸ். பூங்கதிர்

``பீரோவுல நகை நட்டுகள் இருந்தும் பணத்தை மட்டும் கொள்ளை அடிச்சிருக்கியே... ஏன்?’’
``இந்த ஆபரேசனுக்குப் பேரே `ரூபாய்' தான் எசமான்!’’
பி.ஜி.பி.இசக்கி
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism