Published:Updated:

"அப்பா வேற லெவல்!”

"அப்பா வேற லெவல்!”
பிரீமியம் ஸ்டோரி
"அப்பா வேற லெவல்!”

பா.ஜான்ஸன் - படங்கள்: பா.காளிமுத்து

"அப்பா வேற லெவல்!”

பா.ஜான்ஸன் - படங்கள்: பா.காளிமுத்து

Published:Updated:
"அப்பா வேற லெவல்!”
பிரீமியம் ஸ்டோரி
"அப்பா வேற லெவல்!”

“ஃபைனலி... தமிழ்ல அறிமுகமாகப் போறேன். எனக்கே தெரியும்; இது கொஞ்சம் லேட்தான். ஆனா, சரியான படம் மூலமா அறிமுகம் ஆகணும்னு காத்திருந்தேன். அது ‘விவேகம்’ மூலமாக என்று நினைக்கும்போது சந்தோஷமா இருக்கு” - நீலக்கண்கள் சிணுங்கப் பேசத்துவங்குகிறார் அக்‌ஷரா. என்ன கேட்டாலும், என்ன சொன்னாலும் புருவம் உயர்த்தி ஆச்சர்யம் மின்னி மறையும் அக்‌ஷராவுடனான சந்திப்பிலிருந்து...

"அப்பா வேற லெவல்!”

“குடும்பம் முழுக்க நடிகர்கள்தான். ஆனா, நீங்க நடிகையா அறிமுகமாகும் முன்னால் உதவி இயக்குநரா சினிமாவுக்குள் வந்தீங்க. நடிப்பு வேணாம்னு நினைச்சீங்களா?”

``நடிப்பில் ஆர்வம் இருந்தது. ஆனா, ஆர்வம் மட்டும் போதாதுன்னு தோணுச்சி. அதனாலதான் முதல்ல ஸ்கிரீனுக்குப் பின்னால் இருக்கும் வேலைகளைத் தெரிஞ்சுக்கலாம்னு முடிவு பண்ணேன். நடிக்கலாம்ங்கிற எண்ணம் தானாவே வந்தது. ஒரு நாடகத்துக்கான ரிகர்சல்ல இருந்தேன். அதில் நான் டான்ஸர் மட்டும்தான். அப்போ ஒரு ரோல்ல நடிக்க வேண்டியவங்க வரல. டீம்ல இருந்தவங்க அந்த ரோல்ல நீ டயலாக் பேசி நடிக்கிறியான்னு கேட்டாங்க. ரிகர்சல்தானேன்னு நானும் சரின்னேன். அந்த ரிகர்சல்ல நடிக்கும்போதுதான் எனக்கு ஆக்டிங் மேல ஆர்வம் வந்தது. நாம இன்னும் லேட் பண்ண வேணாம்னு தோணும்போது, ‘ஷமிதாப்’ பட வாய்ப்பு வந்தது.”

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

“ `விவேகம்’ படத்துக்கான அழைப்பு எப்போது வந்தது?”

“ஒரு வருஷம் முன்னால, ‘சபாஷ் நாயுடு’ பட வேலைகள்ல இருந்தபோது சிவா சார்கூட ஒரு சந்திப்பு நடந்தது. அப்போதான் இப்படி ஒரு கேரக்டர் இருக்கு,  நடிக்கிறீங்களானு கேட்டாங்க. அவர் சொன்னப்பவே எனக்கு அந்த கேரக்டர் பிடிச்சிருந்தது. உடனேயே, ‘சார் நான் கண்டிப்பா பண்றேன்’னு சொல்லிட்டேன். ‘விவேகம்’ எனக்கு ரொம்ப நல்ல அனுபவமா இருந்தது. நிறைய கத்துகிட்டேன்.”

“அஜித் மாதிரி ஒரு மாஸ் ஹீரோவுடன் நடிக்கும் அனுபவம் எப்படி இருந்தது?”

``அஜித் சாரைப் பார்க்கும்போது என்னா மனுஷன் இவருன்னு தோணுச்சு. ஏன்னா நாங்க ஷூட் பண்ணின இடங்கள்ல பயங்கரமான குளிர். மைனஸ் 10, மைனஸ் 12-தான் டெம்பரேச்சரே. எனக்குக் குளிர்னா பிடிக்கும்தான். ஆனா, அவ்வளவு குளிர் தாங்க முடியலை. நான் ஏற்கெனவே ஒல்லி வேற. ஒரு கட்டத்துக்கு மேல எலும்பெல்லாம் வலிக்க ஆரம்பிச்சிடுச்சு. ஆனா, அவர் அவ்வளவு குளிரைத் தாங்கிக்கிட்டு ரொம்ப ரிஸ்க்கான காட்சிகள்ல நடிச்சார். அவர் எவ்வளவு டெடிகேட்டட், ஹார்ட் வொர்க்கர்னு நேர்ல இருந்து பார்க்கும் வாய்ப்புக் கிடைச்சது. அந்தக் குளிரைக் கொஞ்சமும் வெளியே காட்டாம முகத்தில் எக்ஸ்பிரஷன்களைக் காட்டணும்னு வரும்போது அஜித் சார் எப்படி அதை ஹேண்டில் பண்றதுன்னு சொல்லிக் கொடுத்தார். படத்தில் எனது ரோல் முக்கியமானது. வெளிநாட்ல பிறந்து வளர்ந்த பொண்ணா நடிச்சிருக்கேன். அஜித்சார்கூடவே சேர்ந்து போகும்படியான ரோல். அஜித் சார், சிவா சார், காஜல்னு எங்களுடைய மொத்த டீமும் ஒரு குடும்பம்போல இணைந்து வேலை செய்திருக்கோம். படம் நல்லா வந்திருக்கு. இனி நீங்கதான் பார்த்துட்டு சொல்லணும்.”

“ ‘சபாஷ் நாயுடு’ அப்பா, அக்கானு உங்க குடும்பத்தினரோடு இணைந்து வேலை செய்தது எப்படி இருந்தது?”

``அப்பா வேற லெவல். அவர்கூட வேலை செய்யணும்னா ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும். ஏதாவது ஒரு மாற்றத்தைக் கவனிக்காம விட்டாலும் நடக்கிற வேலை எதுவும் புரியாது. ஒரு ஷாட் எப்படி எடுக்கணும், அதை எதுக்காக எடுக்கணும்னு பல விஷயங்களை அப்பாகிட்ட உதவி இயக்குநரா கத்துக்கிட்டேன். அப்பா பொண்ணெல்லாம் ஷூட் முடிஞ்சதுக்குப் பிறகுதான். இப்போ நாம வேலை செய்ய வந்திருக்கோம். அதில்தான் கவனம் இருக்கணும். தப்பு பண்றது நானாவே இருந்தாலும் திட்டுவாங்க. அதை எப்படிச் சரி செய்யணும்னு சொல்வாங்க.”

"அப்பா வேற லெவல்!”

“ஆக்டிங்ல ஒரு சீனியரா அக்கா ஸ்ருதி என்ன அட்வைஸ் கொடுத்தாங்க?”

`` `உழைக்கணும். எவ்ளோ கஷ்டமானதா இருந்தாலும் பண்ணு. பெஸ்ட்டா இரு’னு சொன்னாங்க. அக்கா மட்டும் இல்லை, குடும்பத்திலிருந்து எல்லாரையும் பார்த்து நிறைய விஷயங்கள் கத்துக்கிறேன். அப்பாவைப் பார்த்து, சினிமாவுக்காக எவ்வளவு ஆர்வத்தோட, காதலோட, அர்ப்பணிப்போட எப்படிக் கடுமையா உழைக்கணும்கிறதைக் கத்துக்கிட்டேன். பிறகு பொறுமையா இருக்கிறதை அவரைப் பார்த்துக் கத்துக்க விரும்புறேன். எந்த விஷயத்தை எப்படிக் கையாளணும், கோபம், ஸ்ட்ரெஸ்னு வரும்போது அதை எப்படிப் பொறுமையா கடக்கணும். இதை எல்லாம் அவர்கிட்ட இருந்து எடுத்துக்கறது ஈஸி. ஆனா, ஃபாலோ பண்றது ரொம்பக் கஷ்டம். அம்மாகிட்ட இருந்து க்ரியேட்டிவா எப்படி இருக்கணும்னு கத்துக்கிட்டேன். மொத்தமா அவங்க சொல்றது எல்லாம், ஹார்ட் வொர்க் பண்ணு, இல்லைனா பண்ணவே பண்ணாதே.”

“அப்பா தொகுத்து வழங்கும் ‘பிக் பாஸ்’ பார்க்கிறீங்களா?”

“ம். ரொம்பப் பிடிச்சிருக்கு. ஒவ்வொரு போட்டியாளரையும் அவர் கையாளும் விதம், பொறுமையோட அவங்களை டீல் பண்றதுனு ரொம்ப கூலா பண்றார்.”

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism